ஊரடங்கு !!!!!
பொன்கவச கர்ணனுக்காக மனமிரங்குவோரே
வெண் கவச மருத்துவர்க்காய்
மனமிரங்கி உள்ளடங்குவீர்
கண்ணகி சிலை
தலைவர்கள் சிலை
தியாகிகள் சிலை
வீரர்கள் சிலை
எல்லாம் சாலை மறியல்
நீ ஊரடங்க வேண்டி !

நீ வீடடங்கி
அவனை வீடனுப்பு
இல்லை
உன்னை வீடனுப்ப
காடடங்கவும் கூடும் அவன்
மடிப் பிச்சை கேட்டு
மருத்துவனின் தாய்
காலணிகள்
காணாமல் போகட்டும்
பாதையெல்லாம் முள்ளாகி
கரடாகிப் போகட்டும்
ஊரடங்கா மக்களுக்காகவும்
ஊனுயிர் காக்கும் மருத்துவர்க்காகவும்
அனிதாக்கள் இல்லாமல் போனதற்கு காரணம்
யாராகவேனும் இருக்கட்டும்
சண்முகப்பிரியா இல்லாமல்
போனதற்கும் இன்னபிற
கவச உடையில் போராடும்
களப்பணியாளரை
கணநேரம் கூட
கண்ணயர விடாததற்கும்
நீ மட்டுமே காரணம்.
நீ என்றால் நீ மட்டுமே.
ஊரடங்காமல் சுற்றும் நீ மட்டுமே.
உள்ளடங்காமல்
ஊர் சுற்றும்
உங்களை
எமனை ஏமாற்றிக் காப்பாற்றி
பாசக்கயிற்றில்
தடுக்கி விழுந்தாள்
அந்த வெண்தேவதை.
ஊரடங்காதோருக்குத் தண்டனை
அவசர சிகிச்சை பிரிவில் பணி
காப்பாற்ற முடியவில்லை என்பதை
உழன்று தவித்துக் காத்திருக்கும்
உற்றாருக்கு சொல்லும் வலி.
- கெளசல்யா
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications