மனதிடமே மருந்து
Subscribe to Oneindia Tamil
வீட்டிலேயே அடைந்து கிடக்கிறேன்
அல்ல
வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கிறேன்
என்னை நோய் தாக்கி விடுமோ ?
பயம் வேண்டாம்
என்னை நானே தனிமைப்படுத்தி
கைகளைச் சுத்தம் செய்து கொண்டே இருப்பதால்
என்னை நோய் தாக்காது

வீட்டிலிருக்கும் பொருட்கள் போதுமா ?
சந்தேகம் வேண்டாம்
இருக்கும் பொருட்களைக்கொண்டு
இன்னும் சில நாட்களுக்கு
சிக்கனமாக செலவு
செய்வதில் நான் கில்லாடி
ஊரடங்கு உத்தரவா ஐயையோ?!
அத்தியாவசியம் அது
மருந்தகம் மளிகை
முக்கிய இவைகள் முடக்கப்படா
கொரோனாவுக்கு மருந்து இல்லையே?
தனித்திருத்தலும்
தன்னம்பிக்கையும் தைரியமும்
மீண்டு வருவோம்
எனும் நேர்மறை எண்ணமுமே
முழுதாக நம்மை எந்நோயிலிருந்தும்
மீட்டெடுத்து விடும் !!
கூடவே நம் அரசும்!
- கௌசல்யா












Click it and Unblock the Notifications