அன்னையரே தினம்!

Subscribe to Oneindia Tamil

- ஆகர்ஷிணி

இன்றைய தினத்தின் அன்னையரே!

உங்களின் முத்தான முத்துக்களை
இன்னோர் அன்னையின் ஆனந்த கண்ணீர்
முத்துக்களின் காரணராக இருக்க
சிறுவயதில் அவர்தம் நெறிமுறைகளை
வளமைப்படுத்துங்கள்! முறைமைப்பட வையுங்கள்!
மகளோ மகனோ திருமணத்தின் பிறகு
இன்னோர் அன்னையை ஏற்க சொல்லி தாருங்கள்!
மாமியை அன்னையாய் ஏற்றுவிட்டால்
பிரிவுக்கும் பிளவுக்கும் அங்கே வழியிருக்காது!
மருமகனோ... மருமகளோ... வரும் செல்வத்தை
இன்னொரு மகளாகவோ மகனாகவோ
மனதிற்கொண்டால் பேரக்குழந்தைகளும் நம்வசம்!

mothers day today

நாளைய அன்னையரே

இன்றைய உங்கள் காதலோ கல்யாணமோ
உமக்கு மட்டும் கணவனை
நீ தேர்ந்தேடுக்கவில்லை என
மனதில் கொள்க. நாளைய உனது
வாழ்க்கையின் அஸ்திவாரத்தை
நீ தேர்ந்தேடுக்கிறாயம்மா!
உன் சிப்பி வயிற்றில் சுமக்க ஓர்
முத்துக்கான அச்சாரம் கொள்வாயம்மா!
நீ உனக்கான இணை என்று மட்டும் கொள்ளாமல்
உன் பிள்ளைகளுக்கான
நல்ல தகப்பனை தேர்ந்தெடம்மா!
நாளுமே மகளிர் தினமாகவும்
நாளும் அன்னையர் தினமாவதும்
நீ சேரும் ஆடவன் கையில் உள்ளதம்மா!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+