Mother's day.. எதை எழுதுவது.. எதை விடுவது.. அம்மா!
அம்மா உன்னைப்பற்றி எழுதுவது
என்றால் எதை எழுதுவது
எதை விடுவது

அப்போதெல்லாம் பிளாஸ்க்
கிடையாது அர்த்த ராத்திரியில்
தாய்ப்பால் பத்தாமல்
வீறிட்டும் அழும் உனக்கு
பால் கலக்க வெந்நீர் காய்ச்ச
ஓலை வச்சி தீப்பத்த வச்சி
நான் பால் பொடி கலக்கி
கண் தூக்கம் 'தொலைத்த
காலம் உண்டம்ம்மா என்று
நீ சொல்லி தான் எனக்கு
தெரியும் அம்மா
தலை பிரசவம் முடிந்து
தூக்கம் தொலைத்து
அம்மா முடியலமா
இரவெல்லாம் தூக்கமில்லை
பிள்ளை அழுதுகிட்டே இருக்கு
தூங்கின மாதிரியே இல்ல
என்று காலையில் நானொருனாள்
புலம்பி சோகமாய் நிற்க
போம்மா போ தாய்ப்பால்
இருப்பதே வரம் தான்
தாய்மையே சுகம் தான்
என்று சொல்லி தலை வருடி
நான் பிள்ளையை பார்த்துக்கறேன்
நீ போய் நல்லா தூங்கு
என்று சொல்லும்போது
நீ சொன்னது தான்
இது எல்லாம்
மழையில் நனைந்து நான்
வரும்போது ஏன் மழையில்
நனைஞ்ச என்று கேட்கும்முன்
கரித்து கொட்டிக்கொண்டு
துண்டு எடுத்து வர அப்பா
உள்ளெ போகும் முன்
முந்தானையை நீட்டும் முதல் கரம்
உன்னுடையது தானே அம்மா
அது மட்டுமா சூடு காப்பியும்
மிச்சேரும் நீட்டுவாய்
காபி சூடு தந்ததோ இல்லையோ
எனக்கு தெரியாது
நிச்சயம்
சூடு தந்தது உன் முந்தானையும்
அந்த முத்தான அரவணைப்பும் தான்
இப்போது நான் என் குழந்தைகளை
சளி காய்ச்சலுக்கு பயந்து
மழையில் குளிக்க விடுறதில்லை என்று
சொன்னபோது
அதை கேட்டு அப்படி
சிரித்து நீ சொன்னது
நீயெல்லாம் மழை வந்ததும்
உடுப்பை கழற்றி போட்டு
மழையில் ஓடிவிடுவாய்
இப்ப இப்படி பேசுற
குழந்தைகளை குழந்தைகளாய்
இருக்கு விடுங்க
என்று நீ சொன்ன ஒரு வார்த்தை
எனக்கு காலத்துக்குமான பாடம்
நீ ஐஞ்சாம் கிளாஸ் என்றாலும்
எப்போதும் பள்ளிவிட்டு வந்ததும்
பள்ளிப்பை எடுத்து
படிக்க சொல்லுவாய்
வீட்டுப்பாடம் முடிக்க சொல்லுவாய்
நீ எனக்கு பாடம் படிக்க
சொல்லி தந்ததே இல்லை
நீ எனக்கு சொல்லித் தந்த ஒரே பாடம்
நாங்கெல்லாம் படிக்கல
நீங்க நல்லா படிக்கணும்
நல்லா வரணும் ...
அம்மா நீ ஏன் படிக்கல என்று கேட்டபோது
அம்மா சொன்னது இது தான்
நான் நல்லா படிப்பேன்
வகுப்பிலே முதல் மார்க்
சொல்லும்போது பெருமிதம்
அவள் கண்களில் அப்படியே ...
ஆனா எட்டு பேர் கொண்ட
குடும்பம் சமாளிக்க அப்பா
என்னை அஞ்சாம் வகுப்புக்கு அப்புறம்
தோட்ட வேலைக்கு கூட்டிட்டு
போய்ட்டாரு னு சொல்லும் போது
உன் முகத்தில தெரிஞ்ச வலி
அந்த வயசிலும் என்னை எதோ செய்தது ....
உன் பிள்ளை நானும்
எப்பொதும் படிப்பில்
முதல் மதிப்பெண் தான்
உனக்கு ஆங்கிலம் தெரியாது
என்று தெரியாமலே உன்னிடம்
எத்தனையோ மனப்பாடம் ஒப்பித்திருக்கிறேன்
படித்ததும் ஓடி வருவேன்
புத்தகத்தை ஒரு கையில் வாங்கி
இன்னொரு கையில் புகைகுழலோடு
உலையை ஊதிக்கொண்டிருப்பாய்
நீ தேவதை அம்மா
ஒரு மீன் சட்டி சோறை
ஐஞ்சு பேரை வட்டமாக
உட்கார வைத்து
எல்லாருக்கும் ஊட்டி விட்டு
வளர்த்த உன் பாசம்
வயிறு வலி அந்த நாட்கள்
மாத விடாய் முடியல
என்று எந்த முணுமுணுப்பும்
உன்னிடம் கேட்டதில்லை
எங்களுக்காவே வாழ்ந்த தெய்வம்
நீ அம்மா
நீ எனக்கு தந்த அன்பில்
பாதியை என் பிள்ளைகளுக்கு
குடுக்க முடிந்தால் போதும் அம்மா
நானும் சிறந்த தாயாக
தாய்மை சுகம் அரிது அரிது
நான் தாயான சுகத்தை சிலாகிப்பதை விட
என் தாயின் நினைவுவைகளே
அசை போடுவதே பெரும் சுகம்
- இங்க்பேனா
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications