காற்றில் கலந்த தேவதை!
- வந்தனா ரவீந்திரதாஸ்
மயிலு....
பந்தமில்லை என்றாலும்...
ஏதோ ஒன்றில்
எங்களை கட்டியிழுத்தாய்

திரைத்துறையின்
கனவு கன்னிகள்
திரளென வந்தாலும்
அசலான பிரதி நீதானே?
நிகழ்வுகளின் தொகுப்பாய்
நெடுங்காலம் கடந்தாலும்
உன் புகழ்
என்றும் மறையுமா?
சாதனையும்-சோதனையும்
உன் தோள்களிலே
சமமாய் சுமந்தாயே...
சவாலான சாதனைகளே
உன் வெற்றியின்
சூட்சுமம் என்றாயே....
எங்கள் நெஞ்சங்களில்
முள் வலையை
படரவிட்டு..
பறந்து சென்றாயே....
இதயத்தில் படிமமாய்
உறைந்துபோன மயிலே...
எங்களுக்கு ஆறுதல்
வலை வீச மாட்டாயோ?
உன் நினைவலைகள்
என்றும் நிலைத்திருக்குமே...
கடலுக்கடியில்
இறுகி கிடக்கும்
பாறைபோல..
உன் கடைசி நிமிட
நிகழ்வுகளின்
மர்ம முடிச்சுகளை
அவிழ்ப்பது யாரோ?
ஆயிரம் இருந்தாலும்
எங்கள் மயிலுபோல வருமா
என்ற இறுமாறுப்பு....
எங்கள் அடிமனதில்
குறைவின்றி நீளும்...
தகனத்துக்குப் பின்
கனத்த மனதுடன்
உள்ளுக்குள் அழுது....
உணர்வாய் கரைந்து...
காற்றில்... உந்தன் கீதத்தை
தேடுகிறோம்.... உன்போலவே...
பூதங்கள் ஐந்திலும்
கலந்திட்ட மயிலே...
உனக்கே உயிரானோம்
எந்நாளும் உனை மறவோம்...
குறுகிய காலத்தில்
வென்றுவிட்டாய்
மகுடத்தையும் -
மரணத்தையும்..
இனியாவது நிம்மதி கொள்.. மீளாத நித்திரையில்!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications