தம்பி புறப்படு! #ஸ்டெர்லைட்
- ஆனந்த்
கந்தக சுவாசம்,
கறைகொண்ட
நீரென்று ,
இழிநிலை
வாழ்வுகொண்டால் ,
மலத்தினில் வாழும்
பன்றிகள் சிரிக்காதா?

அரசாங்கம் நம்பாதே
போராட்டம் விடு
நுரையீரல்
சுவர் படிந்த
கரிக்கேட்ப
காசளிப்போம்
அமைதியாய் இரு
ஆதார் இணை - என்றே
அரசு சொல்லும்.
எவர் கண்டார்
சுவாசத்திற்கும்
சுங்கவரி
அவர்கள்
திட்டமாய் இருக்கலாம்.
கார்பன் தாய்ப்பால் அருந்தி
கருகும் இளம் மொட்டுகளோ
தாமிரத்துடன் உருகும்
தாய்மார்கள் உயிரோ
கரிப்புகை இருமலோ
கண்ணின் எரிச்சலோ
கவலையிங்கு
எவர்க்குமில்லை..!
உரிமைகள் தொலைத்து
உடல்கூடு சுமந்து
உயிர் வாழும் கூட்டமிது.
ரட்சகன் நீதான்
வா வந்து
களமிறங்கி ரட்சி
அறிந்து கொள்
சுத்தகாற்றை
சுவாசிக்கும்
அண்டை தேச
அகதிகள் வாழ்வு
நம்மிலும்
உயர்ந்ததடா.
தம்பி
உன் காதலியின்
முத்தத்தை
கரிப்புகையா
சுமந்து வருவது?
என்னடா
காதலன் நீ?
புறப்படு
புற்றுநோய்க்கு
போகுமுயிர்
புரட்சியில் போனால்
பெருமையடா .
வந்து கைகோர்
சிவப்பு வெள்ளை
அணுக்கள் போல்
புரட்சி அணு என்றொன்று
புதிதாயுன் ரத்தத்தில்
பிறக்கட்டும்,
ஏறும் நரம்பின்
முறுக்கத்தில்
ஆலையின்
சுவர்கள்
பறக்கட்டும்.
வா
களமிறங்கு
அடுத்த
தலைமுறை
சுவாசத்தில் -உன்
புரட்சி வரலாறு
இருக்கட்டும்..!
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications