உன் கரம் பதித்த லட்சம் விதை தளிர்த்து கோடி மரமாகும்- நகைச்சுவையின் ராஜபாட்டை... கவிதை
சென்னை: சனங்களின் கலைஞன் என கொண்டாடப்பட்ட சின்ன கலைவாணர் நடிகர் விவேக் நம்மிடமிருந்து திடுமென விடைபெற்றுவிட்டார். ஒட்டுமொத்த தமிழரையும் நடிகர் விவேக்கின் மரணம் பெருஞ்சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

நடிகர் விவேக் உடல் 78 குண்டுகள் முழங்க தமிழக காவல்துறையின் மரியாதையுடன் நேற்று சென்னையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. விவேக் மறைவு குறித்து நமது வாசகர் மாணிக்கம் விஜயபானு (டெக்சாஸ். ஆஸ்டின்) எழுதியுள்ள கவிதை:
பன்திறனை புன்னகையில்
வெள்ளந்தியாய் ஒளித்து வைத்தாய்
அதில்
பாமரனையும்
ஓரம் விதைத்து வைத்தாய்
நகைச்சுவையில் பகுத்தறிவு
பகுத்தறிவில் அறிவியல்
அறிவியலில் இயற்கை வளம்
அதில் வானுயர
சமூகநலம்
நீ பதித்தது வெறும்
விதை மட்டுமா
விளம்பரமற்ற கொடை
தன்னலம் கடந்த பொதுநலம்
ஆதாயம் கருதா பேருதவி
அகண்டு நீள்கிறது
ஆழமாய் நீ பதித்த
எண்ணிலடங்கா
நற்சுவடுகள்
நட்ட மரம் போதாதென்று
சிறகினமாய்
எச்சம் விதைக்க பறந்தாயோ
பெரும் காடு வளர்க்க
உன் கரம் பதித்த
லட்சம் விதை
தளிர்த்து
கோடி மரமாகும்
அதில் அசைந்தோடும்
சிறு காற்றும்
தொடர்ந்து பதியும்
உன் இருப்பை - நாள்தோறும்
வறண்ட நிலம் வான்நோக்கி
பிளந்து கிடக்கும்
அதில்
மழைவெள்ளம்
வழிந்து பசுமை நிரப்பும்
இங்கும்
கோடி வழிப்போக்கன்
துளிக் கண்ணீர்
உருண்டோடுது பெருவெள்ளமாய்
இருந்தும்
நீயற்ற வறட்சி மிச்சமே
நடுநெஞ்சில்
இந்த பிரிவும்
சோக நகையுணர்வு
பாத்திரம் ஆகாதோ
என்று
அடி நெஞ்சதிருது
இப்போதும்.
சென்று வருக சகோ..
சொல்லில் தீரவில்லை
என் சோகம்
உன் நினைவாய்
ஏப்ரல் 17 - "பசுமை பூமி" நாளாகட்டும்
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications