Valentines day: வலி தாங்கும் இதயமே.. இமயம் தொடும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காதல் புனிதமானதா இல்லையா என்பது ஒருபக்கம் இருக்கட்டும். காதல் உண்மையானதாக இருக்கிறதா இல்லையா என்பதுதான் இந்த காலகட்டத்தில் முக்கியமானது.

காதலர் தினத்தின்போது மட்டும் உணர்ச்சிவசப்படுபவர்களை விட காலந்தோறும் காதல் வசப்பட்டவர்களாக இருப்பதுதான் உண்மையான உணர்வு என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

Valentines day special pome from reader

அப்படி காதல் வசப்பட்டவர்களுக்கு, காதலர் தினம் ஒரு வரமாக அமைய இனிய வாழ்த்துகளுடன் இன்னும் ஒரு காதல் கவிதை.

கண்களுக்கு விருந்தாகி
உயிருக்குள் உயிராகி
உணர்வுக்குள் உணர்வாகி
மனதிற்குள் ஓர் மெல்லிசையாய்
மௌனமே மொழியாய்
ஈருயிரும் ஓர் உயிராய்
உதிர்க்கும் காதலுக்கு
என் சமர்ப்பணம்.

உடல் தொட நினைக்காமல்
உள்ளம் தொட்டு பேசுவது நட்பின் அழகு
தொட நினைத்தும் தொடாமல்
பேசுவது காதலின் அழகு

காதலே ஓர் அழகு தானே
நண்பர்களே!

காதலர்களாய் வலம் வந்து
கணவன் மனைவியாய் கைகோர்த்து
நடை போடுவதே ஒரு சாதனை தானே

கணவன் மனைவிக்குள் ஆயிரம் ஆயிரம்
மோதல்கள் வந்து
கொண்டே இருந்தாலும் கடைசியில்
ஜெயிப்பது காதலே!

உளி தரும் வலியை
தாங்கும்
கற்களே சிலையாகும்.

வலி தாங்கும் இதயமே
இமயம் தொடும்.

ஆயிரம் கஷ்டங்கள் வந்தாலும்
உண்மை காதல் தோற்றதில்லை.

உண்மையாக காதலித்துப்பார்
உலகமே உன் வசப்படும்.

இனிய காதலர் தின
நல்வாழ்த்துக்கள்

- கலை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+