தாய்மை எனப்படுவது யாதெனில்!
Subscribe to Oneindia Tamil
இம்மையில் கரு சுமந்து மறுமை காணும் தாய்மை!
தாய்மை பேதமறியாது!

தூய அன்பில் இயங்கிடும் பிள்ளை நலனையே நினைத்திடும்!
சேய்க்கு ஆபத்தென்றால் சாகும்வரை போராடிடும்!
கனவிலும் கூட பிள்ளையின் நலனையே நாடும்!
ஆபத்திலும் தன்னுயிர் துச்சமென சேய்க்காக போராடும் தாய்மை!
தாய்மை மென்மை, மேன்மை!
வாழ வைக்கும் மனம் தாயுள்ளம்தானே?
தாய்மை பொதுவானது!
மிருகங்கள் பறவைகளின் தாய்மை உணர்வு மனிதனை விடவும் மேலானது!
இயற்கையும் தாயுணர்வு கொண்டதால் நம்மை வாழ வைக்கிறது!
அனைத்து உயிர்களும் அதன் சேய்கள்!
மனிதன் மட்டுமே ஒற்றை சேய் என்று சுயநலம் கொள்ளாது
நம் தாயின் மற்ற சேய்களை காத்திடுவோம்
இயற்கையன்னையின் மனம் குளிர செய்வோம்!
மனித இனத்தின் அன்னையரை மட்டுமின்றி அனைத்து இனத்து தாயுள்ளத்தையும் ஆராதிப்போம்!
- ஆகர்ஷிணி












Click it and Unblock the Notifications