ஆசிரியருக்கு பயந்து நெளிந்த நாட்கள் திரும்ப வருமோ!?
Subscribe to Oneindia Tamil
சென்னை: உம் பணி வாழிய! வாழியவே!!
ஊரார் பிள்ளயை
ஊட்டி வளர்க்கும் உம் பணி
ஆழியின் ஆழத்தை
மிஞ்சும் தியாகமே
இன்று பல்வேறு பொறுப்பில்
சாதனை புரியும் அனைவரும்
அன்றுதாங்கள் கோர்த்து
எடுத்த சிதறிய மணிகளே

திட்டி, அடித்து உதைத்ததெல்லாம்
முதல்மாணவனாக திகழ அல்ல
நல்ல சமுதாய பொறுப்போடு
வளர!, உயரவே!!
மாணவர்கள் வாழ்வு
ஒளிமயமாக தன்னை
உருக்கி மீண்டும் உருக
இறுகிய மெழுகு திரியே!
இரயில் சிநேகமான எங்கள்
பள்ளி நாட்களை வார்த்தையில்
சொல்லி மீளாது - வாயார
சொன்னாலும் தீராது
பட்டங்கள் பல வாங்கினோம்
பட்டயங்களும் வாங்கினோம் - பாடு
பட்டதெல்லாம் தாங்களே என்றும்
பட்டுபோகா பசு மரமே
பசுமை நிறைந்த
பள்ளிவாழ்க்கை கதவு மீண்டும்
திறக்குமோ? ஆசிரியர்க்கு பயந்து
நெளிந்த நாட்கள் திரும்ப வருமோ?
ஆசிரிய பெருமக்களை என்றும் போற்றுவோம்!
அவர் பணி சிறக்க என்றும் வாழ்த்துவோம்!!
-ஆ.ஜோஷி ஆலென்












Click it and Unblock the Notifications