ராத்திரியில் கரையும் காகம்
கலாச்சார மாத இதழ் - மார்ச் 2005
- பா.தேவேந்திர பூபதி

களவாடப்பட்டன.
சக்கரவாளக்கோட்டத்தின் வாயிலில்
காவலிருக்கும்
நாளங்காடி பூதங்களுக்கு
எருதுகளை காணிக்கையாக்குகிறான்
அந்த மேனி சிவந்த யவனன்.
அவனது நறவின் மிச்சம்
பூதங்களின் கண்களில் மிளிர்கிறது.
மணி பல்லவத் தீவிற்கு
வழிகேட்டு நுழைந்த
சமணத் துறவியை மறித்து
கேள்வி எழுப்பின பூதங்களிரண்டும்.
துறவி
காசாயத்தை உதறிக் காண்பிக்க
உதிர்ந்து விழுந்தன சொற்கள்
திசை யெங்கிலும்
அங்காடி வணிகர்கள்
சிதறியவற்றை சேகரித்த வேளையில்
அனைத்தும் உருமாறின முத்துக்களாய்.
பொற்கொல்லர்கள்
பரிசோதித்து பார்த்துக் கொண்டேயிருக்கிறார்கள்.
முத்துக்களுடன் சுழன்றுகொண்டிருந்தன
பிரபஞ்சங்கள் ஒட்டுமொத்தமாய்
கண்ணைப் பறிக்கும் ஒளி நிரப்பியது வெளியை.
அவரவருக்கான பூமியை
தேடிக்கொண்டிருக்கின்றனர்
ஒவ்வொருவரும்.
விடிவதற்கின்னும்
இரண்டு சாமங்களே உள்ளது.
வீதிக் காவலர்கள்
தீபங்களேந்தி
அங்காடித் தெருக்களை சுற்றி வருகின்றனர்.
மார்கழியின் பனியைப் போக்கி
மணவாளர்களுக்காய் பாடியபடியே
வந்து கொண்டிருக்கின்றது யுவதியர் கூட்டம்.
பாடலின் வரிகள்
அனைத்து பொருட்கள் மீதும்
பட்டு ஒலி எழுப்புகின்றன.
ஆனைச் சாத்தான்களின்
கீச்சரவம் அச்சந்தருவதாயிருக்கிறது.
சமணத் துறவிக்கு
பதிலளிக்க முடியாமல்
விழிபிதுங்கி நடுங்கி கொண்டிருக்கின்ற
நாளங்காடி பூதங்கள்
சக்கரவாளக் கோட்டத்தின்
வாயிலை மூட
இன்னும் சில விநாழிகைகளே எஞ்சியுள்ளன.
துறவியின் குரல் ஒலித்து கொண்டேயிருக்கின்றது.
கதவை மூடின நாளங்காடி பூதங்கள்
அடைத்த கதவின் இடுக்குகளில்
வழிந்து கொண்டிருக்கின்றது
கசிந்து கொண்டிருக்கும்
காமமென காலமும்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications