10 லட்சம் கடனை அடைத்த AI.. அமெரிக்க பெண்ணுக்கு ChatGPT உதவியது எப்படி? 30 நாளில் மேஜிக்
நியூயார்க்: செயற்கை நுண்ணறிவான சாட்ஜிபிடி உதவியுடன் அமெரிக்காவை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் பெண் ஒருவர் வெறும் 30 நாளில் ரூ.10 லட்சம் கடனை திரும்ப செலுத்தி உள்ளார். அவர் கடன் செலுத்த சாட் ஜிபிடி எப்படி உதவியது? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
தற்போது செயற்கை நுண்ணறிவு எனும் ஏஐ அனைத்து துறைகளிலும் நுழைந்து வருகிறது. மனிதர்கள் செய்யும் வேலைகளை போலவே ஏஐ பல வேலைகளை செய்கிறது. இதனால் வரும் காலத்தில் ஒவ்வொரு தொழில் நிறுவனங்களிலும் மனிதர்களின் எண்ணிக்கை குறைந்து ஏஐ பயன்பாடு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

தற்போது ஏஐ என்பது மக்களுக்கு அதிகளவில் உதவி செய்து வருகிறது. ஒரு விஷயத்தின் உண்மை தன்மையை ஏஐ பயன்படுத்தி தெரிந்து கொள்ள முடிகிறது. வரலாறு மற்றும் புரோகிராமிங் கோடிங் உள்ளிட்டவற்றையும் ஏஐ-யை பயன்படுத்தி எழுத முடிகிறது. இதனால் வரும் காலத்தில் வேலையிழப்புகள் ஏற்படலாம் என்ற அச்சம் உள்ளது. குறிப்பாக ஐடி துறை அதிகளவில் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இப்படி ஏஐ-யால் ஆபத்து இருந்தாலும் கூட அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் அதனை பயன்படுத்தி 30 நாளில் தனது ரூ.10 லட்சம் கடனை திரும்ப செலுத்தி உள்ளார். அந்த பெண்ணின் பெயர் ஜெனிபர் ஆலன். இவருக்கு 35 வயது ஆகிறது. அமெரிக்காவின் டெலாவர் பகுதியில் வசித்த வருகிறார். ரியல் எஸ்டேட் மற்றும் கன்டென்ட் ரைட்டர் பணிகளை செய்து வருகிறார்.
இவரும் நன்றாக சம்பாதித்தாலும் கூட கண்மூடித்தனமாக செலவு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனால் சம்பாதியத்தை விட கூடுதல் செலவால் கடனில் சிக்கினார். கிரெடிட் கார்டுகளை அதிகமாக பயன்படுத்தி வந்தார்.
இதனால் ஒரு கட்டத்தில் கிரெடிட் கார்டு கடன் மட்டும் ரூ.19.7 லட்சம் வரை சென்றது. வாழ்க்கை தலைகீழாக மாறியது.இதனால் அதிர்ச்சியடைந்த ஜெனிபர் ஆலன் அந்த கடனை குறைக்க வேண்டும். உடனடியாக திரும்ப செலுத்த வேண்டும் என்று நினைத்தார். இதையடுத்து அவர் சாட் ஜிபிடியிடம் உதவி கோரினார். கடன் இல்லாமல் வாழ்வதற்கான எளிமையான நிதி ஆலோசனைகளை கேட்டுள்ளார்.
அப்போது சாட் ஜிபிடி சில முக்கிய பரிந்துரைகளை வழங்கி உள்ளது. தேவையற்ற செலவுகளை குறைப்பது எப்படி?, தேவையற்ற பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்து கூடுதல் வருமானம் ஈட்டுவது எப்படி? என்பது தொடர்பான அறிவுரைகளை வழங்கியது. மேலும் அவர் சப்ஸ்கிரிப்ஸன் செய்திருக்கும் தேவையில்லாத ஆன்லைன் பக்கங்களை விட்டு வெளியேறவும் பரிந்துரை செய்தது.
இதனை ஜெனிபர் பின்பற்ற தொடங்கினார். உதாரணமாக அவரது தினசரி உணவு முறையில் செலவை குறைக்க அறிவுரை வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் பேன்ட்ரி அடிப்படையிலான உணவு முறையை பின்பற்ற தொடங்கினார். இதன்மூலம் ரூ.50 ஆயிரம் வரை செலவை குறைத்தார். இப்படி பல்வேறு விஷயங்களில் அவர் சாட்ஜிபிடி பரிந்துரைகளை கேட்டு செயல்பட்ட நிலையில் ஒரு மாதத்திலேயே ரூ.10 லட்சத்தை மிச்சப்படுத்தி கிரெடிட் கார்டு கடனை திரும்ப செலுத்தினார். இதுபற்றி ஜெனிபர் ஆலன் தனது சமூக வலைதள பக்கத்தில் மகிழ்ச்சியாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications