"ரூ 2,196 கோடி.." 24 வயது இளைஞருக்கு மார்க் ஜுக்கர்பெர்க் கொடுத்த மெகா ஆஃபர்! என்ன காரணம்
சியாட்டில்: அமெரிக்க நிறுவனங்கள் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவில் தான் கவனம் செலுத்தி வருகிறது. திறமையான ஊழியர்களுக்குப் பல கோடியைக் கொட்டி கொடுத்து எடுக்கவும் டெக் நிறுவனங்கள் தயாராக உள்ளன. அப்படி தான் இப்போது மெட்டா நிறுவனம் 24 வயதே ஆன ஒரு இளைஞருக்கு ரூ.2196 கோடி சம்பளமாகக் கொடுக்க முன்வந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்த காலத்தில் உலகெங்கும் ஏஐ வேகமாக வளர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் பல்வேறு டெக் நிறுவனங்களும் ஏஐ பிரிவில் தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகிறது. இனி எதிர்காலமே ஏஐ தான் என்பதால் பல டாப் அமெரிக்க நிறுவனங்கள் இதற்காக மிகப் பெரிய தொகையை முதலீடு செய்யவும் தயாராக இருக்கிறது.

ரூ.2196 கோடி சம்பளம்
குறிப்பாக மெட்டா நிறுவனம் தனது சூப்பர் இன்டெலிஜென்ஸ் ஆய்வகத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காகச் சிறந்த திறமையான ஊழியர்களை எடுக்கப் பெருமளவில் முதலீடு செய்து வருகிறது. அதன்படி சமீபத்தில் ஏஐ ஆய்வாளரான 24 வயதே ஆன மாட் டீட்டே என்பவரை வேலைக்கு எடுக்க மெட்டா முயன்றுள்ளது. மாட் டீட்கேவுக்கு ₹2,196 கோடி சம்பளம் தரவும் கூட ஜுக்கர்பெர்க் ரெடியாக இருந்துள்ளார்.
முதலில் மறுத்த இளைஞர்
தி நியூயார்க் டைம்ஸ் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. முதலில் 4 ஆண்டுகள் வேலை செய்ய 4 ஆண்டுகள் வேலை செய்ய டீட்கேவுக்கு $125 மில்லியனுக்கு (சுமார் ₹1,098 கோடி) வழங்கும் ஒப்பந்தத்தை மெட்டா நிறுவனம் வழங்கியுள்ளது. இருப்பினும் அதை நிராகரித்த டீட்டே, தனது ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனமான வெர்செப்ட்டில் கவனம் செலுத்தவே விரும்புவதாகக் கூறிவிட்டார்.
தலையிட்ட மார்க்
ஆனாலும், டீட்டேவை மெட்டா விடவில்லை. மெட்டா தலைவரான மார்க் ஜுக்கர்பெர்க் தனிப்பட்ட முறையில் டீட்டேவை சந்தித்துள்ளார். முன்பு சொன்ன தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாக அதாவது $250 மில்லியன் (சுமார் ₹2,196 கோடி) வழங்குவதாக மார்க் கூறியிருக்கிறார். அதிலும் குறிப்பாக முதல் ஆண்டிலேயே $100 மில்லியன் (₹879 கோடி) கொடுப்பதாகவும் கூறியிருக்கிறார். மார்க் ஜுக்கர்பெர்க் தனிப்பட்ட முறையில் சந்தித்துக் கேட்டுக் கொண்டதால் மெட்டாவின் சூப்பர் இன்டெலிஜென்ஸ் டீமில் சேர டீட்டே சம்மதித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
யார் இந்த மாட் டீட்டே?
ஏஐ துறையில் மிகவும் முக்கியமான ஆட்களில் ஒருவராக மாட் டீட்டே கருதப்படுகிறார். முதலில் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி மாணவராக இருந்த அவர், படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு சியாட்டிலில் உள்ள ஆலன் இன்ஸ்டிடியூட் ஃபார் ஏஐ (AI2) என்ற நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு அவர் டெக்ஸ்ட் மட்டுமின்றி படங்கள் மற்றும் ஆடியோவையும் பிராசஸ் செய்யும் அதிநவீன சாட்போட்டை உருவாக்கினார். இதற்காக அவர் கடந்த 2022ம் ஆண்டிலேயே பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
இதையெல்லாம் கவனித்து வந்த மெட்டா நிறுவனம் கடந்த 2023 இறுதி முதலே டீட்டேவை வேலைக்கு எடுக்க முயன்றுள்ளது. இருப்பினும், அவர் முதலில் மெட்டா நிறுவனத்தில் சேர ஆர்வம் காட்டவில்லை. தனது சொந்த ஏஐ ஆய்வுகளிலேயே தீவிரம் காட்டினார். இந்தச் சூழலில் தான் மார்க் ஜூக்கர்பெர்க் நேரடியாக இது குறித்து கோரிக்கை விடுத்து டீட்டேவை சம்மதிக்க வைத்திருக்கிறார்.
முதல்முறை இல்லை
மெட்டா தனது சூப்பர் இன்டெலிஜென்ஸ் ஆய்வகத்திற்கு ஏற்கனவே $1 பில்லியனுக்கும் மேல் முதலீடு செய்துள்ளது. ஓபன் ஏஐ, கூகுள், மற்றும் ஆப்பிள் போன்ற போட்டி நிறுவனங்களிடம் இருந்து பல்வேறு திறமையான ஊழியர்களை வேலைக்கு எடுத்து வருகிறது. சமீபத்தில் தான் அவர்கள் ஆப்பிள் AI மாடல்ஸ் குழுவின் முன்னாள் தலைவரான ரூமிங் பாங்கிற்கு $200 மில்லியன் சம்பளம் கொடுத்து வேலைக்கு எடுத்தது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..!












Click it and Unblock the Notifications