ஐடி ஊழியர்களுக்கு நிம்மதி! ஏஐயால் வேலை பறிபோகாது.. கூகுள் நிறுவன டாப் அதிகாரியே சொல்லிட்டாரே
வாஷிங்டன்: சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடியால் ஒருபக்கம் வேலை இழப்பு அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், மற்றொரு பக்கம் ஏஐ - ஐடி ஊழியர்களை கலங்கடித்து வருகிறது. ஏஐ தாக்கம் பல்வேறு துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தினாலும், ஐடி துறையில் நாளுக்கு நாள் பணி நீக்கம் அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், ஐடி ஊழியர்கள் நிம்மதி பெருமூச்சு விட வைக்கும் விதமாக, கூகுள் நிறுவனத்தின் கிளவுட் சி.இ.ஓ. ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். ஏஐ துறையால் எந்த வேலையும் காலியாகவில்லை என்று கூறியுள்ள அவர், அதற்கான காரணங்களையும் கூறியுள்ளார். இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்
ஏஐ எனப்படும் தகவல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், டிஜிட்டல் உலகில் பெரும் புரட்சியையே ஏற்படுத்தியுள்ளது. ஏஐ துறையின் அபரிமிதமான வளர்ச்சியால் தற்போது பல்வேறு துறைகளிலும் வேலை இழப்புகள் அதிகரித்து வருகின்றன. மனித ஆற்றலுடன் ஒப்பிடுகையில், மிக எளிதாக ஒரு பணியை செய்து முடிக்கக்கூடிய காரணத்தால், பல டெக் நிறுவனங்களும் தற்போது ஏஐ பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றன.
வேலை இழப்புகள் ஏற்படாது
இதனால், ஐடி துறைகளில் பெருமளவு வேலை இழப்பு அபாயத்தை ஏஐ ஏற்படுத்தியுள்ளது. உலகின் டாப் டெக் நிறுவனங்கள்கூட பணி நீக்கங்களை மேற்கொண்டுள்ளன. "ஏஐ பயன்பாடு காரணமாக வேலை இழப்புகள் ஏற்படாது, தரமே கூடும்" என்ற ஒரு வாதமும், "இல்லை... இல்லை... ஏஐயால் வரும் காலத்தில் 90 சதவீத வேலைகள் மாயமாகிவிடும்" என மற்றொரு தரப்பும் சொல்லும் கருத்தாக உள்ளது.
தாமஸ் குரியன் கருத்து
இந்த நிலையில்தான், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேலைகளை நீக்கிவிடும் என்ற அச்சங்கள் தேவையில்லை என்று கூறியிருக்கிறார் கூகுளின் கிளவுட் சி.இ.ஓ. தாமஸ் குரியன் இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
"மனிதர்கள் முன்பு செய்ய முடியாத பணிகளைச் செய்து முடிக்க ஏஐ உதவும். ஏஐயின் முதன்மை நோக்கம் மனித திறன்களை மேம்படுத்துவதே தவிர, அவற்றை முழுமையாக மாற்றுவது அல்ல. கடந்த ஆண்டு கூகுள் நிறுவனம் கஸ்டமர் சப்போர்ட் தொடர்புடைய பணிகளில் ஏஐயை கொண்டு வந்தது. இதனால், ஆரம்பத்தில் தங்கள் வாடிக்கையாளர் சேவை முகவர்கள் குறைவார்களா என்று கவலை எழுந்தது.
சுந்தர் பிச்சை கருத்து
ஆனால், யாரையும் வேலைநீக்கம் செய்யவில்லை. இந்த தொழில்நுட்பம், முன்பு வாடிக்கையாளர்கள் தவிர்க்கும் சிறிய கேள்விகள் போன்ற பணிகளை இப்போது கையாள்கிறது. இந்த திறன் விரிவாக்கம், ஊழியர்களைக் குறைப்பதற்குப் பதிலாக, ஏஐ செயல்படுத்துவது குறித்த கூகுளின் பரந்த தத்துவத்தை பிரதிபலிக்கிறது" என்றார்.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, ஏஐ டூல்ஸ் மூலம் தங்கள் பொறியாளர்களிடையே 10% உற்பத்தித்திறன் அதிகரித்துள்ளது என்றார். ஏஐ பயன்பாடு மூலம் வாரத்திற்கு எத்தனை மணிநேரம் கூடுதல் என்ஜினியரிங் செயல் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதன் மூலம் கூகுள் இதை கணிக்கிறது.
ஊழியர்களைக் குறைப்பதற்குப் பதிலாக, அடுத்த ஆண்டில் அதிக பொறியாளர்களை நியமிக்க கூகுள் திட்டமிட்டுள்ளதாக பிச்சை கூறினார். "நாம் செய்யக்கூடிய வாய்ப்புப் புலம் விரிவடைந்து வருகிறது" என்று அவர் விளக்கினார். ஏஐ ஆனது மீண்டும் மீண்டும் செய்யும் பணிகளை நீக்கி, பொறியாளர்களுக்கு அதிக ஆக்கபூர்வமான பணிகளுக்குச் சுதந்திரம் அளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
-
IT JOBS: அனுபவம் தேவையில்லை.. சோழிங்கநல்லூரிலேயே நாளை - நாளை மறுநாள் இண்டர்வியூ.. அங்கேயே பணி -
மாதம் 1 லட்சம் சம்பளத்தில் வங்கியில் வேலை.. பிஇ தகுதி தான்.. இன்னும் 2 நாள் தான் இருக்கு! -
IT Jobs: அனுபவம் வேண்டாம்.. சென்னை எச்சிஎல் நிறுவனத்தில் குவிந்திருக்கும் வேலை.. நாளை இண்டர்வியூ -
IT Jobs: ரூ.8 லட்சம் வரை சம்பளம்.. வீட்டில் இருந்தும் வேலை செய்யலாம்.. அசத்தலான சான்ஸ் -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல்












Click it and Unblock the Notifications