பேரழிவு நெருங்குது.. AIக்கு ஆஃப் சுவிட்ச் இல்லை.. ஏஐ காட்பாதர் ஹின்டன் கொடுத்த ஓபன் வார்னிங்
சியாட்டில்: ஏஐ வளர்ச்சி மனித குலத்திற்கு மிகப் பெரிய மாற்றத்தைக் கொடுக்கும் அதேநேரம் இதனால் ஏகப்பட்ட சிக்கல்களும் இருக்கவே செய்கிறது. இதற்கிடையே ஏஐ கையை மீறிச் செல்லும்போது அதை ஆஃப் செய்யும் சுவிட்ச் மனிதர்களிடம் இருக்கும் என நம்பிக்கொண்டு இருப்பது மாயை எனச் செயற்கை நுண்ணறிவின் தந்தை எனப் போற்றப்படும் ஜெஃப்ரி ஹின்டன் எச்சரித்துள்ளார்.
ஏஐ படுவேகமாக வளர்ந்து வரும் நிலையில் செயற்கை நுண்ணறிவின் தந்தை எனப் போற்றப்படும் ஜெஃப்ரி ஹின்டன் மீண்டும் ஏஐ குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். தான் உருவாக்க உதவிய இந்த ஏஐ தொழில்நுட்பம் குறித்து வருத்தம் கொள்வதாக ஹின்டன் கூறியுள்ளார்.

ஜெஃப்ரி ஹின்டன்
பிபிசி நியூஸ்நைட்டில் வெளியான பேட்டியில், செயற்கை நுண்ணறிவு மேலும் மேலும் சக்திவாய்ந்ததாக வளர்ந்து வரும் நிலையில், அதன் ஆபத்துகளை உலகம் தீவிரமாக எடுத்துக்கொள்ளாதது மிகவும் வருத்தமளிப்பதாக அவர் கூறியுள்ளார். அவரது பணியே இன்றைய AI அமைப்புகளுக்கு அடித்தளமிட்டாலும், அதே அமைப்புகள் இப்போது மனித குலத்திற்கு கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதாக எச்சரித்தார்.
இப்போது ஏஐ நெட்வொர்க்குகள் அனைத்தும் செயல்பட ஆற்றல் தரும் நியூரோ நெட்வொர்க்குகளை உருவாக்க உதவியவர்களில் ஒருவர் தான் ஹின்டன். ஏஐ வேகமாக வளர்ந்தாலும் அதில் பல ஆபத்துகள் இருப்பதாக அவர் தொடர்ச்சியாக எச்சரித்து வருகிறார். செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியின் வேகம், அதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை மிஞ்சிவிட்டதாக அவர் கூறினார்.
மனிதர்களை மிஞ்சிவிடும்
மனித குலத்தில் இல்லாத ஒரு இடத்திற்கு ஏஐ இப்போது நம்மை கூட்டி சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும், "நாமே நம்மை விடப் புத்திசாலித்தனமான அமைப்பை இதுவரை உருவாக்கியதே இல்லை.. அடுத்த 20 ஆண்டுகளுக்குள், செயற்கை நுண்ணறிவு மனித நுண்ணறிவை மிஞ்சிவிடும் என்று பல நிபுணர்கள் நம்புகின்றனர்.. சில துறைகளில் இது ஏற்கெனவே நடந்து வருகிறது. இது ஒரு நிலையைத் தாண்டும்போது மனிதர்களிடம் இருந்து கட்டுப்பாடு கையைவிட்டு நழுவிவிடும். இயந்திரங்கள் அதை உருவாக்கியவர்களை விட அதிகப் புத்திசாலியாக மாறும்போது, அவை மனிதர்கள் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கும்.
ஆஃப் சுவிட்ச் இல்லை
ஏஐ கையை மீறிவிட்டால் ஒரு ஆஃப் சுவிட்ச் மூலம் அதை அணைத்துவிடலாம் எனப் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அது வேலை செய்யும் என நான் கிடைக்கவில்லை. மேம்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு, மனிதர்களை ஏமாற்றும்.. மனிதர்கள் அந்த ஆஃப் சுவிட்ச்சை நோக்கிச் செல்ல விடாமல் தடுக்கும். எனவே, இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் மனிதர்களிடமே இருக்கிறது என்ற கண்ணோட்டமே தவறானது. மனிதர்கள் முடிவெடுக்கும் திறனை எப்படி மாற்றி அமைக்கலாம் என்பதை ஏஐ டூல்கள் கண்டுபிடித்துவிட்டால் ஆஃப் சுவிட்ச் வேலை செய்யாது.
செயற்கை நுண்ணறிவு எப்படி டிரைன் செய்யப்படுகிறது என்பதில்தான் உண்மையான ஆபத்து உள்ளது. இந்த ஏஐ மெஷின்களை எப்படிப் பாதுகாப்பாக வைப்பது என்ற ஆய்வில் நாம் கவனம் செலுத்துவதில்லை. இதைப் புறக்கணிப்பதே மனித குலம் செய்யக்கூடிய மிகப் பெரிய தவறு! மனிதர்கள் மீது அக்கறையில்லாத வகையில் ஏஐ டூலை நாம் உருவாக்கினால், அவை நம்மை அழித்துவிடக்கூடும்
பேரழிவு
அதேநேரம் இந்தப் பேரழிவுகள் தவிர்க்க முடியாதவை அல்ல.. செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் இன்று எப்படி டிசைன் செய்யப்படுகிறது.. எப்படி டிரைன் செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்தே அதன் ஆபத்துகள் அமையும்.. மனிதர்களுக்கு இன்னும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அவை மிக வேகமாகச் சுருங்கி வருகிறது. எனவே, உரிய நேரத்தில் சரியான முடிவை நாம் எடுத்தே தீர வேண்டும்" என்றார்.
-
மூழ்கடிக்கப்படும் ரூ.63,000 கோடி.. கடலுக்கு அடியில் அமையும் 73,000 டன் பிரம்மாண்டம்! என்ன மேட்டர் -
ஹார்முஸில் கப்பல் போக ஆரம்பித்த அடுத்த நொடி.. ஈரான் கைகளுக்கு வரும் பல கோடி டாலர்! எப்படி? -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
டிஆர்பி ராஜா எச்சரிக்கை: கிளாட் ஃபேபிள் 5 பிரச்சனை.. தமிழ்நாடு முன்கூட்டியே தயாரானது! -
Claude Fable 5: வங்கிகளை மொத்தமாக முடக்கும் திறன் கொண்ட AI..? அமெரிக்க அரசு உத்தரவால் ஆந்த்ரோபிக் ஷாக்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications