AI துறைக்கு இனி இந்தியா தான் தலைமை தாங்கும்.. சாட்ஜிபிடி நிறுவனர் சொன்ன வார்த்தை.. ஆஹா சூப்பர்
சென்னை: இப்போது AI வேகமாக வளர்ந்து வருவது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே சாட்ஜிபிடியை உருவாக்கிய சாம் ஆல்ட்மேன் இந்தியாவில் ஏஐ டெவலப்மெண்ட் தொடர்பாகச் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார். எதிர்காலத்தில் ஏஐ துறையில் இந்தியா சந்தேகமே இல்லாமல் மிகப் பெரிய இடத்திற்குச் செல்லும் என்று சாம் ஆல்ட்மேன் கூறியுள்ளார்.
இந்தத் தலைமுறை சந்தேகமே இல்லாமல் AIக்கான தலைமுறை என்று நாம் சொல்லலாம். அந்தளவுக்கு ஏஐ போட்டி போட்டு வளர்ந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக வேறு எந்தத் துறையைக் காட்டிலும் AI தான் படுவேகமாக வளர்ந்துள்ளது. இந்த AI வளர்ச்சிக்கு ஒரு வகையில் வித்திட்டது என்னவோ சாட்ஜிபிடி தான். அதைக் கண்டுபிடித்த சாம் ஆல்ட்மேனுக்கும் இந்த AI வளர்ச்சியில் முக்கிய பங்கு இருக்கவே செய்கிறது.

இந்தியா தான் தலைமை தாங்கும்
இதற்கிடையே சாம் ஆல்ட்மேன் இந்தியாவில் ஏஐ டெவலப்மெண்ட் தொடர்பாகச் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார். செயற்கை நுண்ணறிவின் அடுத்த அலை உண்மையில் யாரால் உருவாக்கப்படும் என்பது கேள்விக்கு அவர், இந்தப் பதிலைக் கொடுத்துள்ளார். எதிர்காலத்தில் இந்தியா ஒரு முழுமையான புல் ஸ்டாக் செயற்கை நுண்ணறிவு(full-stack AI) தலைவராக உருவாக முடியும் என்று ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார். அதாவது வெறுமன ஏஐ டூலை பயன்படுத்தும் ஒரு நாடாக மட்டும் இல்லாமல்.. ஏஐ மாடல்களை டெவலப் செய்யும் நாடாகவும் இந்தியா மாறும் என்று ஆல்ட்மேன் கூறியுள்ளார்.
நிலைப்பாட்டை மாற்றிய சாம் ஆல்ட்மேன்
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இதே சாம் ஆல்ட்மேன் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு AI துறையில் இந்தியாவால் சாதிக்க முடியாது என்பது போலக் கூறியிருந்தார். அப்போது அவரிடம் இந்தியாவில் உள்ள சிறிய டீம்களால் ஏஐ மாடல்களை உருவாக்க உண்மையில் முடியுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த சாம் ஆல்ட்மேன், அதுபோன்ற முயற்சிகள் பயனற்றது.. முற்றிலும் சாத்தியமற்றது என்று கூறியிருந்தார்.
அவர் கடந்த 2023ல் இந்த பதிலை அளித்திருந்தார். ஆனால், இப்போது சில ஆண்டுகளில் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் இந்தியா AI துறையில் எந்தளவுக்கு வளர்ந்து இருக்கிறது என்பதையே இது காட்டுவதாக உள்ளது. இந்தியாவுக்கு ஆல்ட்மேன் கருத்து மேலும் நம்பிக்கையைக் கொடுப்பதாகவே இருக்கிறது.
வளர்ச்சி
நாடு முழுக்க AI வளர்ச்சிக்குப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஏஐ வகுப்பறைகள் மற்றும் ஸ்டார்ட்அப்கள் நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகின்றன. சாட்ஜிபிடி நிறுவனத்திற்கும் இந்தியா முக்கியமான சந்தையாக மாறியுள்ளது. வெறுமன பரிசோதனை சந்தை என்பதில் இருந்து முக்கிய சந்தையாக மாறியுள்ளது. இப்போது அமெரிக்காவுக்கு இந்தியாவில் தான் சாட்ஜிபிடிக்கு அதிக யூசர்கள் இருக்கிறார்கள். இதனால் வரும் காலத்தில் மேலும் மேலும் சாட்ஜிபிடி தனது இந்தியச் சந்தையை விரிவுபடுத்த முயலும் என்பதில் சந்தேகமே இல்லை.
இந்தியா AI வாய்ப்புகள்
சாட்ஜிபிடி கடந்த ஆண்டு டெல்லியில் தனது அலுவலகத்தைத் திறந்தது. இந்தாண்டு மேலும் அதன் இந்திய ஆபரேஷன்களை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. டெல்லியில் அடுத்த வாரம் ஏஐ தொடர்பான கருத்தரங்கு நடக்கும் நிலையல், அதிலும் பங்கேற்க ஆல்ட்மேன் இந்தியா வருகிறார். மேலும், மத்திய அரசுடன் இணைந்து பல்வேறு பார்டனர்ஷிப்களையும் செய்ய சாட்ஜிபிடி திட்டமிட்டுள்ளது. இப்படி ஏஐ துறையில் இந்தியர்களுக்கு வாய்ப்பு அதிகம் கிடைக்கிறது. அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் ஐடி துறையைப் போலவே அதன் நீட்சியாக ஏஐ துறையிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
80 பிளஸ் ஏஐ டூல்ஸ்.. நீங்கள் ஒரு மாதத்தில் செய்யும் வேலைகளை.. சில நிமிடங்களில் செய்யும் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications