புதிய மனிதா..அன்றே கணித்த ஷங்கர்! ஹியூமனாய்டு ரோபோவை களமிறக்கும் சீனா! பின்னணியில் இப்படி ஒரு ப்ளனா?
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கிய 'எந்திரன்' படத்தில் மனித உருவில் ரோபோக்களை தயாரித்து பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளுக்கு பயன்படுத்துவது போல காட்சி அமைத்திருப்பார். உண்மையில் ஷங்கர் கணித்தது பல ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறப் போகிறது. சீனா, மனித உருவிலான ரோபோக்களை தயாரித்து வருகிறது. தற்போது அதனை சோதனை செய்தும் வருகிறது. வரும் காலங்களில் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் பயணிகள் ஒருங்கிணைப்பில் அந்த ரோபோக்களை பயன்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனா, ரோபோட்களை பயன்படுத்தும் துறையில் வேகமாக முன்னேறி வரும் நிலையில், எல்லைப் பகுதிகளில் மனித உருவ ரோபோட்களை பணியில் ஈடுபடுத்தும் பெரிய முயற்சியில் இறங்கியுள்ளது. குறிப்பாக, வியட்நாம் எல்லை அருகே இருக்கும் பரபரப்பான சோதனைச் சாவடிகளில், பயணிகளை வழிநடத்தவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் இந்த ரோபோட்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
ஷென்சென் நகரில் உள்ள யூபிடெக் என்ற நிறுவனம் தயாரிக்கும் வாக்கர் என்ற மனித உருவ ரோபோட்களுக்கு சீன அரசு 37 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் வழங்கியுள்ளது. இந்த ரோபோட்கள் டிசம்பர் மாதத்திலேயே சோதனைக்காக வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனா ரோபோட்கள்
இந்த ரோபோட்களின் முக்கிய விசேஷம் என்ன தெரியுமா? அவை யாரும் உதவாமல் தாமாகவே பேட்டரியை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டவை. இதனால் நீண்ட நேரம் இடையூறு இல்லாமல் வேலை செய்ய முடியும். எல்லைச் சோதனையில் நாள் முழுவதும் கூட்டம் இருக்கும் நேரத்தில் இது பெரிய உதவியாக இருக்கும். ரோபோட்கள் என்ன வேலை செய்யப் போகின்றன? என்றால், எல்லைத் தாண்டி வருபவர்களுக்கு பாதை காட்டுதல், வரிசையை ஒழுங்குபடுத்தி கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல், தேவையான ஆவணங்கள், லாஜிஸ்டிக்ஸ் போன்ற வேலைகளில் உதவுதல் உள்ளிட்ட பணிகளைச் செய்யவுள்ளது.
மனித உருவ ரோபோட்கள்
மேலும், எல்லை அருகிலுள்ள தொழிற்சாலைகளிலும் ரோந்து பணியில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த ரோபோட்கள் முழுவதும் AI மூலம் தானாக இயங்குமா? அல்லது மனிதர்கள் தொலைநிலையிலிருந்து கட்டுப்படுத்துவார்களா? என்ற தகவலை சீன அரசு வெளிப்படையாக இன்னும் தெரிவிக்கவில்லை. சீனா ரோபோடிக்ஸ் துறைக்கு, தேசிய வளர்ச்சி திட்டத்தில் முன்னுரிமை அளித்து வருகிறது. இதன் காரணமாக, பல பொது இடங்களில் ரோபோட்களை பயன்படுத்தும் சோதனைகள் நடக்கின்றன.
தானியங்கி ரோந்து
உதாரணமாக, வென்ஷோவில் போலீசார் ரோந்து செல்லும் ரோபோட்களை இயக்கினர். ழெங்ஜோ ரயில் நிலையத்தில் மாசு அளவை கண்காணிக்கும் ரோபோட் பணியில் உள்ளது. சீனாவின் மனித உருவ ரோபோட் தொழில் 2025-க்குள் 82 பில்லியன் யுவான் மதிப்பை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. ரோபோட்கள் தயாரிப்பு வேகம் அதிகமாகிவிட்டது, ஆனால் அதை பயன்படுத்தும் இடங்கள் இன்னும் குறைவாகவே உள்ளன, அதனால் தேவையை விட உற்பத்தி அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது என்று கூறுகின்றனர் தொழில்நுட்ப வல்லுநர்கள்.
தொழில்நுட்ப முன்னேற்றம்
எல்லைச் சோதனை நிலையத்தில் ஹியூமனாய்டு ரோபோக்கள் பரிசோதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சோதனை வெற்றி பெற்றால், சீனாவின் எல்லைச் சோதனை நிலையங்களில் மனித உருவ ரோபோட்கள் பயணிகளை வரவேற்று வழி காட்டும் காட்சி சாதாரணமாகிவிடும். விமான நிலையம், ரயில் நிலையம், அரசு அலுவலகங்கள் என பல இடங்களில் இத்தகைய ரோபோட்கள் பணியில் சேர வாய்ப்பு அதிகமுள்ள நிலையில், சீனாவின் தொழில்நுட்பப் பயணத்தில் இது ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications