"மனிதர்களை முட்டாளாக்கும் AI.." ஆதாரத்தோடு வந்த வல்லுநர்கள்! பகீர் எச்சரிக்கை.. இப்படி கூட நடக்குமா
சியாட்டில்: ஏஐ டூல்கள் பல்வேறு வழிகளிலும் நமக்கு உதவுகிறது என்றாலும் கூட அவை மனிதர்களைச் சோம்பேறிகளாக ஆக்கி வருவதாகவும் இதனால் வரும் காலத்தில் மனிதக் குலத்திற்கு ஆபத்து ஏற்படலாம் என வல்லுநர்கள் எச்சரித்து வருகிறார்கள். இதற்கிடையே வல்லுநர்கள் எச்சரிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாக ஒரு பகீர் சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்த காலம் சந்தேகமே இல்லாமல் ஏஐ-க்கு சொந்தமானது என நாம் தாராளமாகச் சொல்லலாம். ஏஐ துறையில் கடந்த சில ஆண்டுகளாகவே புதுப்புது கண்டுபிடிப்புகள் வருகிறது. ஏஐ யூசர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் இதில் முதலீடுகளும் குவிந்து வருகிறது. இதனால் பல ஏஐ நிறுவனங்கள் மார்கெட்டிற்கு வந்துவிட்டது.

பெர்பிளெக்சிட்டி
அதில் ஒன்று தான் பெர்பிளெக்சிட்டி.. இந்தியாவைச் சேர்ந்த 31 வயதான அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பவரே இந்த பெர்பிளெக்சிட்டி ஏஐ டூலை உருவாக்கியுள்ளனர். இந்த பெர்பிளெக்சிட்டி ஏஐ இப்போது மக்களிடையே பிரபலமாகி வருகிறது. பொதுமக்களைக் கவர பல்வேறு வசதிகளையும் பெர்பிளெக்சிட்டி ஏஐ அறிமுகப்படுத்தி வருகிறது. குறிப்பாகக் கூகுள் க்ரோமிற்கு சவால் விடுக்கும் வகையில் 'காமெட்' என்ற பிரவுசரை இறக்கியது. பெர்பிளெக்சிட்டி ஏஐ உடன் இயங்கும் இந்த பிரவுசர் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதேநேரம் சிலர் இதைத் தவறாகவும் பயன்படுத்துகிறார்கள். அதில் நெட்டிசன் காமெட் பிரவுசர் மூலம் தான் இணைய கோர்ஸை வெறும் சில நொடிகளில் முடித்தாக தெரிவித்துள்ளார். அந்த கோர்ஸ்ஸை முடிக்க சுமார் ஒரு மணி நேரம் ஆகுமாம். ஆனால், பெர்பிளெக்சிட்டி உதவியுடன் அதை சில நொடிகளில் முடித்ததாக அந்த நபர் பதிவிட்டுள்ளார். இதற்காக அரவிந்த் சீனிவாஸுக்கும் பெர்பிளெக்சிட்டியின் காமெட் AIக்கும் நன்றி தெரிவித்து, "எனது கோர்ஸெரா பாடத்திட்டத்தை இப்போதுதான் முடித்தேன்" என்று பதிவிட்டிருந்தார்.
டிரெண்டாகும் வீடியோ
மேலும், 16 நொடிகள் ஓடும் வீடியோவையும் பகிர்ந்திருந்தார். அதில் அந்த நபர் இந்த கோர்ஸ்ஸை முடிக்கவும் என்று ஒரே ஒரு கட்டளையை மட்டும் ஏஐக்கு பிறப்பித்தார். ஏஐ டூல் மளமளவென எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்து கோர்ஸை முடித்தது. அவர் பகிர்ந்த இந்த வீடியோ வேகமாக பரவியது. அதேநேரம் இது பெரும் சர்ச்சையையும் கிளப்பியது. இதற்கிடையே பெர்பிளெக்சிட்டி ஏஐ நிறுவனர் அரவிந்த் சீனிவாஸ் அதற்குப் பதிலளித்திருந்தார். கண்டிப்பாக இதைச் செய்யாதீர்கள் (Absolutely don't do this) என்று ஒரே வரியில் அவர் போட்ட போஸ்ட் இணையத்தில் டிரெண்டானது.
வல்லுநர்கள் எச்சரிக்கை
ஏஐ டூல்கள் நமக்கு பல்வேறு வழிகளிலும் உதவுகிறது அதற்கு மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால், பலரும் இதுபோல ஏஐ டூல்களை தவறாக பயன்படுத்துகிறார்கள். என்னதான் இதுபோல யூஸ் செய்ய வேண்டாம் எனச் சொன்னாலும் பெரும்பாலானோர் இதையே தான் செய்வார்கள். இதனால் காலப்போக்கில் மனிதர்களுக்கு எந்தவொரு புதிய விஷயத்தையும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்ட மாட்டார்கள்.. எல்லாவற்றுக்கும் ஏஐ பக்கம் போவார்கள். இது ஒட்டுமொத்த மனித சமூகத்தையே முட்டாளாக்கும்.. அல்லது மனித சமூகம் மெல்ல அறிவை இழக்க ஆரம்பிக்கும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
நெட்டிசன்கள்
நெட்டிசன்கள் பலரும் தங்களுக்கு இதுபோன்ற இது தங்களுக்கும் உதவியாக இருக்கும் என்றும் தங்கள் கோர்ஸ்களை முடிக்கவும் உதவும் என்றும் பதிவிட்டு வருகிறார்கள். இதனால் ஏற்படும் பிரச்சனையை விளக்கிய நெட்டிசன் ஒருவர், "நிச்சயம் பலரும் இனி இதைச் செய்வார்கள். இதன் மூலம் பலரும் ரெஸ்யூமை கூட மாற்றி அமைக்கிறார்கள். இதனால் திறமையான நபர்களைத் தேர்வு செய்வதற்குப் பதிலாகத் தவறான நபர்களை நிறுவனங்கள் தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது. இது ஒரு பிரச்சனையாக மாறப் போகிறது" என்றார். இது பற்றி நீங்க என்ன நினைக்கிறீர்கள்!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications