சீக்கிரம் AI வெடிக்கும்! அப்போ உலகின் எந்தவொரு நிறுவனத்தாலும் தப்ப முடியாது! சுந்தர் பிச்சை வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சியாட்டில்: ஏஐ படுவேகமாக வளர்ந்து வரும் நிலையில், அது பப்பிளாக (AI bubble) மாறிவிட்டதாக வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். இதற்கிடையே அந்த பப்பிள் உடையும்போது மிக மோசமான பாதிப்பு ஏற்படும் என்றும் உலகின் எந்தவொரு நிறுவனமும் அதில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை எச்சரித்துள்ளார்.

ஏஐ துறையில் இப்போது குறுகிய காலத்தில் பல்வேறு கண்டுபிடிப்புகள் நடந்து வருகிறது. இதனால் ஏஐ நிறுவனங்களுக்கு முதலீடும் கூட குவிந்து வருகிறது. இருப்பினும், ஏஐ இப்போது பப்பிள் ஆக மாறிவிட்டதாகவே பலரும் சொல்கிறார்கள்.

Google CEO Sundar Pichai Warns No Company Immune if AI Bubble Bursts Amid Soaring Energy Demands

ஏஐ பப்பிள்

ஒரு விஷயத்தை அதன் உண்மையான மதிப்பை விடப் பல மடங்கு ஏற்றுவதே பப்பிள் என்பார்கள். அந்த பப்பிள் உடையும்போது மிக மோசமான பாதிப்பு ஏற்படும். கடந்த 2000களின் தொடக்கத்தில் இப்படித் தான் டாட் காம் பப்பிள் உடைந்தது. அப்போது ஏகப்பட்ட நிறுவனங்கள் உலகெங்கும் பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே ஏஐ பப்பிள் உடையும்போது என்ன நடக்கும் என்பது குறித்து கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை எச்சரிக்கை விடுத்துள்ளார். செயற்கை நுண்ணறிவு துறையில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சி, பெரும் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. இதற்கிடையே இந்த பப்பிள் உடையும்போது.. அதன் பாதிப்பில் இருந்து எந்தவொரு நிறுவனமும் தப்ப முடியாது என்று சுந்தர் பிச்சை கூறினார்..

சுந்தர் பிச்சை

சர்வதேச ஊடகமான பிபிசிக்கு சுந்தர் பிச்சை அளித்த பேட்டியில், இப்போது AI முதலீட்டு அலை அசாதாரணமாக இருப்பதாகக் குறிப்பிட்டார். அதேநேரம் சந்தையில் சில குழப்பங்கள் இருப்பதையும் ஒப்புக்கொண்டார். முன்பே குறிப்பிட்ட டாட்-காம் சமயத்திலும் கூட இதுதான் ஏற்பட்டதாகப் பலரும் சொல்லும் நிலையில், சுந்தர் பிச்சையும் கிட்டத்தட்ட அதே கருத்தை குறிப்பிட்டுள்ளார்.

தப்பிக்க முடியாது

இப்போது ஏஐ நிறுவனங்களின் வேல்யூவேஷன் மிக அதிகமாக இருப்பதாகப் பல்வேறு வல்லுநர்களும் சொல்லி வருகிறார்கள். அதைக் குறிப்பிட்டு அந்த பப்பிள் உடையும் போது கூகுள் நிறுவனம் அதில் இருந்து தப்பிக்குமா என்று கேள்விக்கு, "நாங்கள் தாக்குப்பிடிப்போம் என்று நினைக்கிறேன். ஆனாலும் கணிசமான பாதிப்பு இருக்கவே செய்யும்.. ஆனால் நாங்களும் உட்பட எந்த நிறுவனமும் இதில் பாதிப்பு இல்லாமல் முழுமையாகத் தப்ப முடியாது" என்று கூறினார்.

இப்போது ஏஐ துறையில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனம் என்றால் அது சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனம் தான். அந்த ஓபன் ஏஐ நிறுவனத்திற்குக் கூகுள் போட்டி கொடுக்கும் என முதலீட்டாளர்கள் நம்புகிறார்கள். கூகுளின் ஜெமினி கூட முதலில் தடுமாறினாலும் கூட இப்போது சாட்ஜிபிடிக்கு கடும் போட்டி கொடுத்து வருகிறது. இதனால் அதன் பங்குகள் இந்தாண்டில் மட்டும் 46% உயர்ந்துள்ளன.

கூகுள் முதலீடுகள்

ஏஐ துறையில் கூகுள் நிறுவனம் மிக பெரியளவில் முதலீடுகளையும் செய்து வருகிறது. கடந்த செப்டம்பரில் ஆல்ஃபபெட் நிறுவனம் பிரிட்டனில் AI உள்கட்டமைப்பு மற்றும் ஆராய்ச்சிக்காக, இரண்டு ஆண்டுகளில் 5 பில்லியன் பவுண்டுகள் முதலீடு செய்வதாக அறிவித்தது. இதில் ஒரு புதிய டேட்டா சென்டர் மற்றும் லண்டனைச் சேர்ந்த அதன் AI ஆய்வகமான டீப்மைண்டில் முதலீடு செய்வதும் அடங்கும்.

தங்கள் ஏஐ மாடல்களை பிரிட்டனில் பயிற்சி அளிக்கவுள்ளதாகவும் அதற்கான பணிகளும் சீக்கிரம் தொடங்கும் என சுந்தர் பிச்சை தெரிவித்தார். ஏஐ வேகமாக வளர்ந்து வரும் சூழலில் அதற்கு அதீத எனர்ஜி தேவைப்படும் என்றும் இதனால் கூகுள் நிறுவனத்தின் நெட் கார்பன் ஜீரோ என்ற இலக்கு தள்ளிப்போகலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+