AIக்கு விழுந்த மரண அடி.. எச்சரிக்கை வந்தவுடனேயே மளமளவென சரிந்த சந்தை! இந்தியா தப்பிக்குமா?
சியாட்டில்: இப்போது பல்வேறு ஏஐ நிறுவனங்களின் பங்குகளும் உச்சத்தில் இருக்கிறது. ஆனால், இந்தப் பங்குகள் விலை மிகப் பெரிய சரிவை நோக்கிச் செல்லும் என வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். இன்னும் சிலர் இந்தச் சரிவு ஆரம்பித்துவிட்டதாகவும் கூடச் சொல்கிறார்கள். ஏஐ பங்குகளின் சரிவு குறித்தும் அது இந்தியாவில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்தும் நாம் பார்க்கலாம்.
இந்தக் காலத்தில் ஏஐ நிறுவனங்கள் தான் உலகை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஏஐ துறைகளில் புதிய புதிய கண்டுபிடிப்புகள் படுவேகமாக நடந்து வருகிறது. இது பங்குச்சந்தையிலும் கூட எதிரொலித்தது. கடந்த சில ஆண்டுகளாகவே சர்வதேச பங்குச்சந்தை தொடர்ந்து உயர்ந்து உச்சம் தொட ஏஐ நிறுவனங்களே பிரதானக் காரணமாக இருந்தது.

ஏஐ முதலீடுகள்
சர்வதேச அளவில் ஏஐ முதலீடுகள் குவிந்து நிலையில், பங்குச்சந்தையையும் அது புதிய உச்சத்திற்கு எடுத்துச் சென்றது. இதனால் பல ஏஐ பங்குகள் விண்ணை முட்டும் விலைக்குச் சென்றன. இதற்கிடையே இப்போது ஏஐ பங்குகள் முதல் முறையாகச் சில சிக்கல்களைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது. ஏஐ முதலீடுகள் குவிய ஆரம்பித்துப் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது தொடர்பாக முதலீட்டாளர்கள் யோசிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் பங்குச் சந்தையில் சரிவு குறித்தும் ஆய்வாளர்கள் மத்தியில் எச்சரிக்கை உணர்வு அதிகரித்துள்ளது.
சர்வதேச முதலீட்டு நிறுவனங்களான மோர்கன் ஸ்டான்லி மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், உயர்ந்து வரும் தொழில்நுட்பப் பங்குகள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, பங்குச் சந்தைகள் வீழ்ச்சியை நோக்கிச் செல்லக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
கடும் சரிவு
அவர்கள் சொன்னது போலவே என்விடியா, பலந்திர் டெக்னாலஜிஸ் (Palantir Technologies) போன்ற நிறுவனங்களின் பங்குகள் கடுமையாகச் சரிந்தன. இதில் என்விடியா என்பது ஏஐ சிப்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாகும். அதேபோல பலந்திர் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஏஐ துறையில் நேரடியாக ஈடுபட்டுள்ள நிறுவனம். இந்த இரு பங்குகளும் கணிசமாகச் சரிந்ததால் அமெரிக்க பங்குச்சந்தைகள் ஒரே நாளில் பெரிய சரிவைச் சந்தித்தன.
சமீபத்தில் 5 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பைக் கடந்து உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக மாறிய என்விடியா நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் சுமார் 5% சரிந்துள்ளது. இது முதலீட்டாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏஐ பப்பிள் (AI Bubble) உருவாகிவிட்டதோ என பலரும் அஞ்சுகிறார்கள். பொதுவாக ஒரு விஷயத்தை அதன் உண்மையான மதிப்பை விடப் பல மடங்கு ஏற்றுவதே பப்பிள் என்பார்கள். அந்த பப்பிள் உடையும் போது சந்தைகள் மிகக் கடுமையாகச் சரியும்.
ஏஐ பப்பிள்
ஏஐ பப்பிள் உருவாகியிருப்பது உண்மைதான் என்றே பல முதலீட்டாளர்களும் சொல்கிறார்கள். ஆனால், அது எந்தளவுக்கு பப்பிளாக இருக்கும்.. அது எப்போது உடையும் என்பதில் தான் பல்வேறு மாற்றுக் கருத்துகள் இருப்பதாக கோடக் ஈக்விட்டிஸ் கூறியுள்ளது.
இந்தியச் சந்தைகளைப் பொறுத்தவரை நம்மிடம் ஏஐ துறையில் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்கள் எதுவும் இல்லை. இருப்பினும், முதலீட்டாளர்கள் டிஜிட்டல் மற்றும் டேட்டா துறையுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் ஏஐ துறையில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த நிறுவனங்களில் பலவும் சர்வதேச சந்தை எதிரொலியால் தற்போது ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகின்றன.
இந்தியாவில் என்ன நிலை
இது குறித்து துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகையில், "இப்போதைய சரிவு சர்வதேச மார்கெட்டால் ஏற்படுகிறது. சந்தையின் அடிப்படைக் கட்டமைப்பில் பிரச்சனை இல்லை.. இருப்பினும், இந்தியாவிலும் கவலைகள் எழுந்துள்ளது உண்மை தான். ஏஐ சார்ந்த துறைகளை அதிகப் பணத்தைப் போட்டுவிட்டோமோ என்ற கவலை மக்களிடையே எழுந்துள்ளது" என்றார்.
இந்தியாவில் ஏஐ , டேட்டா சென்டர் உள்ளிட்ட அமைப்புகளை உருவாக்கும் நெட்வெப் டெக்னாலஜிஸ் நிறுவனம் தான் இந்தச் சரிவில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களில் 18% சரிந்த இந்நிறுவனம், வியாழக்கிழமை அன்று மட்டும் கிட்டத்தட்ட 10% வீழ்ச்சியடைந்தது. 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்த நிறுவனத்தின் பங்குகள் 110% உயர்ந்து குறிப்பிடத்தக்கது.
-
குழாய் வழி எரிவாயு இணைப்பு வைத்திருப்போருக்கு கட்டுப்பாடு! மத்திய அரசு கொடுத்த எச்சரிக்கை! -
“இந்தியா எங்கள் நண்பன்”.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களை அனுமதிக்கும் ஈரான்! ஸ்பெஷல் பவர்! -
இந்திய கப்பல்களுக்கு அனுமதி? ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி! பிரச்சனை தீருமா! -
ஜிகிரி தோஸ்த்து.. நாங்க ஹெல்ப் பண்ணுவோம்! இக்கட்டான நேரத்தில் இந்தியாவுக்கு ஈரான் உதவி! மேட்டர் ஓவர் -
வங்கதேசம் மட்டுமில்லை.. இந்தியாவிடம் கெஞ்சும் இலங்கை - மாலத்தீவு.. ஈரான் போரால் மாறிய நிலைமை -
மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்கினால்.. யாரும் பெண்களை வேலைக்கு எடுக்க மாட்டார்கள்- உச்ச நீதிமன்றம்! -
ஹார்முஸ் முடங்கினாலும் பிரச்சனை வராது.. LPG சிக்கலுக்கு உள்நாட்டிலேயே இருக்கும் தீர்வு! இது தெரியுமா -
"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா? -
உள்நாட்டிலேயே கேஸ் இல்லாத போது.. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி படுஜோர்.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்!











Click it and Unblock the Notifications