AI: எந்த ஏஐ வந்தாலும் இந்த வேலைகளை தொடக்கூட முடியாது போல.. சாம் ஆல்ட்மேன் வெளியிட்ட லிஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் தொலைபேசி அல்லது கணினி மூலம் நடைபெறும் தற்போதைய வாடிக்கையாளர் ஆதரவுப் பணிகளை இனி ஏஐ செய்துவிடும் என்றும், இதனால் அந்த பணியில் இருப்பவர்கள் வேலை இழப்பார்கள் என்று ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் கூறியுள்ளார்.

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு இணைய உலகில் பெரும் புரட்சியையே ஏற்படுத்திவிட்டது. சாட் ஜிபிடி, ஜெமினி, குரோக் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் ஏஐ உலகில் கொடி கட்டி பறக்க ஆரம்பித்துள்ளன. ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடியே ஏஐ துறையில் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஏஐ வந்த பிறகு இணைய தேடுதலில் தொடங்கி, பல முக்கியமான துறைகளில் வேலைகளையும் செய்ய ஆரம்பித்துவிட்டது.

jobs-no-ai-can-replace-sam-altman-reveals-the-untouchable-list

ஏஐ பயன்பாடு அதிகரிப்பு

இதனால், பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட ஆரம்பித்துவிட்டன. இன்னும், சில ஆண்டுகளில் 99 சதவீத வேலைகளை ஏஐ திருடிவிடும் என்று அதிர்ச்சியூட்டும் தகவல்களையும் அத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் கூறுகிறார்கள். எனினும், ஏஐ வருகையில் முன்பு செய்த வேலை இன்னும் மேம்படுமே தவிர மொத்தமாக பணியிழப்பு ஏற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஒரு தரப்பு கூறி வருகிறது.

எது எப்படியோ... பல்வேறு துறைகளில் தற்போது என்ட்ரி மற்றும் மிட் லெவல் பணிகளில் ஏஐ பங்களிப்பு அதிகரிக்க தொடங்கிவிட்டது. இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் சில வேலைகளை முழுமையாக மாற்றி அமைக்கும் என்றும், மற்ற சில வேலைகள் பாதுகாப்பாக இருக்கும் என்றும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.

இந்த வேலையை ஏஐ சிறப்பாக செய்யும்

டக்கர் கார்ல்சன் நிகழ்ச்சியில் பேசிய ஆல்ட்மேன் இது தொடர்பாக கூறியதாவது: "வாடிக்கையாளர் சேவைத் துறையில் பெரும்பாலான பணிகள் ஏஐ மூலம் மாற்றம் பெறும். தொலைபேசி அல்லது கணினி மூலம் நடைபெறும் தற்போதைய வாடிக்கையாளர் ஆதரவுப் பணிகளில் பலவற்றை ஏஐ சிறப்பாகச் செய்யும். இதனால், அந்தப் பணியில் உள்ளவர்கள் வேலை இழப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

வாடிக்கையாளர் சேவைத் துறையைத் தொடர்ந்து, புரோகிராமர்களும் ஏஐ மாற்றத்தால் பாதிக்கப்படலாம். இது ஒரு குறுகிய காலத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்" என்றார். மேலும், ஏஐ வளர்ச்சியால் அதிக ஆபத்தில் இருக்கும் பணிகளாக சாம் ஆல்ட்மேன் கூறியதாவது:-

வாடிக்கையாளர் சேவை / ஆதரவு முகவர்கள் (தொலைபேசி அல்லது கணினி அடிப்படையிலானவை) புரோகிராமர்கள் / மென்பொருள் பொறியாளர்கள் (வழக்கமான குறியீட்டுப் பணிகள்) போன்ற பணிகள் பாதிக்கப்படும்.

நர்சிங், சுகாதாரப் பாதுகாப்பு

வாடிக்கையாளர் சப்போர்ட் பணிகளில் பல பகுதிகள் திரும்பத் திரும்ப செய்யக்கூடியவை என்பதால், அவற்றை ஏஐ திறமையாகச் செய்ய முடியும். இதனால் இந்த வேலைகள் எளிதில் பாதிக்கப்படலாம். முன்பு ஏற்பட்ட வேலை மாற்றங்களை விட, AIயின் இந்த தாக்கம் மிக வேகமாகவும் பெரிய அளவிலும் இருக்கும். புரோகிராமிங்கில் உள்ள படைப்புத்திறன் குறைந்த அல்லது வழக்கமான பணிகளும் AIயால் மாற்றப்படலாம்" என்றார்.

அதே நேரத்தில், நர்சிங், சுகாதாரப் பாதுகாப்பு போன்ற பணிகளும், ஆறுதல் அல்லது உணர்வுப்பூர்வமான தொடர்பு தேவைப்படும் பணிகளும் AIயால் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வேலைக்கு பாதிப்பு வராது

சாம் ஆல்ட்மேனின் கணிப்பு என்பது அச்சமூட்டுவதாக இல்லை; அது ஒரு சமிக்ஞை போல உள்ளது. அதாவது, கஸ்டமர் சப்போர்ட் மற்றும் ஒரே மாதிரியான புரோகிராம் பணிகள் ஆகியவற்றிற்கு கடுமையான நெருக்கடியில் இருக்கிறது என்று கூறினாலும் மனித அரவணைப்பு, அக்கறை உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்ட வேலைக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்பதை கோடிட்டு காட்டியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+