எல்லையை மீறும் Grok AI! அதிரடி தடையை விதித்தது மலேசிய அரசு! திணறும் எலான் மஸ்க்
மலேசியா: சிறார்களையும், பெண்களையும், அவர்கள் அனுமதியின்றி ஆபாசமாக சித்தரிக்கும் வசதியை எலான் மஸ்கின் X Grok AI கொண்டு வந்திருக்கிறது. இதற்கு பல்வேறு நாடுகளில் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கும் நிலையில், மலேசியாவில் Grok AIக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
Grok AI-ன் பட உருவாக்க அம்சம், எளிய உரைத் தூண்டுதல்களைப் பயன்படுத்தி பெண்கள் மற்றும் குழந்தைகளின் படங்களை பாலியல் ரீதியாக சித்தரிக்க அனுமதித்ததால், உலக அளவில் பெரும் கண்டனம் எழுந்தது. முன்னதாக கடந்த சனிக்கிழமையன்று, Grok AIக்கு முழுமையான தடையை இந்தோனேசியா விதித்திருந்தது. இந்தோனேசியா Grok AIக்கு தடை விதித்த முதல் நாடாகும்.

தொடர் சர்ச்சை காரணமாக, Grok AI ப்ரீமியம் பயனாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த நடவடிக்கை போதுமானது கிடையாது என்றும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
இந்த தடை குறித்து, மலேசிய ஒழுங்குமுறை ஆணையம், "அசிங்கமான, பாலியல் வெளிப்படையான, ஒழுக்கக்கேடான, மிகவும் வெறுக்கத்தக்க மற்றும் சம்மதம் இன்றி படங்களை உருவாக்க, Grok AI தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தப்பட்டதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது" என கூறியுள்ளது.
Grok-க்கை உருவாக்கிய எலான் மஸ்கின் X கார்ப்பரேஷன் மற்றும் xAI நிறுவனங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட முறைப்படியான அறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளுக்கு பிறகும், பெண்கள் மற்றும் சிறார்களை உள்ளடக்கிய கண்டென்ட்கள் காணப்பட்டதாக ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிக்கை குறிப்பிட்டது. எனவேதான் தற்போது Grok AI-க்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications