Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இருக்கிற ஊழியர்களை எல்லாம் வீட்டுக்கு அனுப்பிவிட்டு.. ஏஐ மூலம் மைக்ரோசாஃப்ட் செஞ்ச சம்பவம்.. போச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மைக்ரோசாப்ட் நிறுவனம், AI செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி கடந்த ஆண்டு மட்டும் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் சேமித்துள்ளது என்று புளூம்பெர்க் நியூஸ் தெரிவித்துள்ளது. அதாவது ஊழியர்களை பணியில் இருந்து நீக்கிவிட்டு, அந்த இடத்தில் ஏஐ பயன்படுத்தியதன் மூலம் 500 மில்லியன் டாலர்களை சேமித்து உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

artificial intelligence Wipro Microsoft jobs

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு முதலீடு

தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் இருக்கும் மைக்ரோசாப்ட், AI உள்கட்டமைப்பில் கணிசமான தொகையை முதலீடு செய்து வருகிறது. செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக, இந்நிறுவனம் கடந்த வாரம் அதன் பணியாளர்களில் சுமார் 4% பேரை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டது. மே மாதத்தில், சுமார் 6,000 ஊழியர்களைப் பாதிக்கும் பணிநீக்கங்களை மைக்ரோசாப்ட் அறிவித்தது.

விற்பனை, வாடிக்கையாளர் சேவை மற்றும் மென்பொருள் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், AI கருவிகள் அந்த நிறுவனத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த முயற்சி ஏற்கனவே பல மில்லியன் டாலர்களை அந்த நிறுவனத்திற்கு ஈட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் பணிகளில் 35% பணிகள் AI மூலம் செய்யப்படுவதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. 2025 ஆம் ஆண்டில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சுமார் 4% ஊழியர்களை, அதாவது 9,100 பணியாளர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது. இதற்கு முன்பு, மே மாதத்தில் சுமார் 6,000 ஊழியர்களை இந்நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செயற்கை நுண்ணறிவுத் துறையில் அதிக முதலீடு செய்துள்ளதால் செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது பணியாளர்களில் சுமார் 4 சதவீதத்தினரை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்தது. தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட், சமீபத்திய வேலை வெட்டுக்களை அறிவித்துள்ளது.

ஜூன் 2024 நிலவரப்படி, உலகளவில் சுமார் 2,28,000 ஊழியர்களைக் கொண்ட இந்நிறுவனம், முன்னதாக மே மாதத்தில் சுமார் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது. குறிப்பாக விற்பனைப் பிரிவில் ஆயிரக்கணக்கான வேலைகளைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் கடந்த மாதம் தெரிவித்திருந்தது.

அதிகரிக்கும் வேலை இழப்பு

ஏஐ வருகை காரணமாக 2025 ஆம் ஆண்டில் மட்டும் 1,00,000க்கும் அதிகமான தொழில்நுட்ப வேலைகள் நீக்கப்பட்டுள்ளன. மென்பொருள் பொறியியல் (Software Engineering), மனிதவள மேம்பாடு (Human Resource), துறையில் அதிக வேலை இழப்புகள் ஏற்பட்டு உள்ளதாக ஆய்வு தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence - AI) தாக்கம் அதிகரித்து வருவதால், வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு காலத்தில் புதுமையின் பிறப்பிடமாகவும், நிலையான வேலை வாய்ப்புகளை வழங்கும் துறையாகவும் இருந்த தொழில்நுட்பத் துறை, தற்போது செயற்கை நுண்ணறிவால் பெரும் மாற்றத்தை சந்தித்து வருகிறது. திறமையான நிபுணர்களின் இடத்தை செயற்கை நுண்ணறிவு ஆக்கிரமித்து வருவதால், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழந்து எதிர்காலம் குறித்த கவலையில் உள்ளனர்.

வேலை இழப்புக்குக் காரணமான செயற்கை நுண்ணறிவு

ஃபியூச்சரிஸம் (Futurism) ஊடகத்தின் அறிக்கையின்படி, பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பல, திறமையான நிபுணர்கள் செய்து வந்த வேலைகளை தானியங்கி முறையில் செய்ய செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றன. இதன் காரணமாக, 2025 ஆம் ஆண்டில் மட்டும் 1,00,000க்கும் அதிகமான தொழில்நுட்ப வேலைகள் நீக்கப்பட்டுள்ளன. மென்பொருள் பொறியியல் (Software Engineering), மனிதவள மேம்பாடு (Human Resource), மற்றும் கிரியேட்டிவ் துறைகளில் (Creative sectors) கூட, குறைந்த செலவில் அதிக செயல்திறனை வழங்கும் அல்காரிதம்கள் (Algorithms) மற்றும் இயந்திர கற்றல் (Machine learning) முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் அந்த துறைகளில் அதிக அளவில் வேலை இழப்புகள் ஏற்பட்டு உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+