மென்பொருள் தலைநகராகும் சென்னை.. சிறுசேரியில் பிரம்மாண்ட டேட்டா சென்டர் திறப்பு.. 4200 கோடி முதலீடு
சென்னை: சென்னை சிறுசேரி வளாகத்தில் எஸ்டிடி ஜிடிசி இந்தியா நிறுவனம் தனது புதிய டேட்டா மையத்தைத் தொடங்கியுள்ளது. இது எஸ்டிடி ஜிடிசி இந்தியா நிறுவனம் தொடங்கிய நான்காவது டேட்டா சென்டர் ஆகும். அந்த மையத்தின் மொத்தத் திறன் 45 மெகாவாட் ஆகும் இதில் முதற்கட்டமாக 7.2 மெகாவாட் திறன் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இதனை காணொலி வாயிலாகத் திறந்து வைத்துள்ளார்.
இனி வரும் காலம் ஏஐ காலமாக இருக்க போகிறது என்பதை ஐடி நிறுவனங்கள் எல்லாம் உணர்ந்துவிட்டன. அதற்கு டேட்டா சென்டர்கள் தான் அவசியம். இலவமாக இந்தியாவில் பல்வேறு ஏஐக்கள் இயங்குவதற்கு தரவு தேவை என்பதற்காகத்தான்.. அப்படிப்பட்ட தரவுகளை சேமிக்க வேண்டியது, அதாவது டேட்டாக்களை சேகரிப்பது ஏஐக்களுக்கு அவசியம் ஆகும்.

ஏஐக்களுக்கு தரவு தான் உணவு
டேட்டா தான் இனி ஏஐக்களின் உயிர்நாடியாக, அதாவது உணவாக இருக்க போகிறது. ஆனால் ஏஐக்கள் சேகரிக்கும் தரவுகள் எல்லாம் சரியானதாக இருக்க வேண்டும் அல்லவா.. அதற்காக தரவு மையங்களை இந்தியாவின் முக்கியமான பல்வேறு மாநிலங்களை பிரபல ஏஐ நிறுவனங்கள் அமைக்கின்றன. அண்மையில் கூட கூகுள் நிறுவனம் அதானியுடன் இணைந்து ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில தரவு மையம் அமைக்க ஒப்பந்தம் செய்தது.
4200 கோடி முதலீடு
இந்நிலையில் எஸ்டிடி ஜிடிசி இந்தியா நிறுவனம் தரவு மையக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காகத் தமிழக அரசுடன் அந்நிறுவனம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் ₹4,200 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இதற்காக சிறுசேரி வளாகத்திலேயே STT Chennai 4 என்ற மற்றொரு மையத்திற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அந்த ஒரு வளாகத்தில் மட்டுமே சுமார் 130 மெகாவாட் வரை தரவுகளைக் கையாளும் வசதி உருவாக போகிறது.
ஏன் இது முக்கியம்
எஸ்டிடி ஜிடிசி இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பிமல் கண்டேல்வால் கூறுகையில் "இந்தத் தொடக்கம் எங்கள் வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல். சென்னையின் வளர்ச்சிக்கான எங்களது நீண்டகால உறுதிப்பாட்டை இது காட்டுகிறது," என்றார். தமிழ்நாடு தவிர, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களுடன் இணைந்து ஏஐ-க்கு ஏற்ற தரவு மையங்களை உருவாக்கவும் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது
எஸ்டிடி நிறுவனம் இப்போது என்ன செய்கிறது
தற்போது இந்தியாவில் 10 நகரங்களில் மொத்தம் 30 தரவு மையங்களை எஸ்டிடி நிறுவனம் இயக்கி வருகிறது. இதன் மொத்தத் திறன் 400 மெகாவாட்டிற்கும் அதிகம். ஆகும். சென்னை சிறுசேரி இப்போது இந்தியாவின் மிக முக்கியமான தரவு மையங்களின் மையமாக மாறி வருகிறது.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
பங்குச்சந்தையில் வெடிக்கக் காத்திருக்கும் 'ஏஐ' பபுள்? ZOHO ஸ்ரீதர் வேம்புவின் அதிரடி எச்சரிக்கை பின்னணி!












Click it and Unblock the Notifications