AI மூலம் முழுக்க முழுக்க ஆபாசம்.. பகீர் கிளப்பும் புதிய டிரெண்ட்.. இது ரொம்ப மோசம்! பகீர் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தக் காலத்தில் ஏஐ டூல்கள் நமக்குப் பல்வேறு வழிகளில் உதவுகின்றன. இதனால் ஏஐ பயன்பாடும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேநேரம் சிலர் ஏஐ மூலம் ஆபாச கண்டெண்டுகளையும் உருவாக்க ஆரம்பித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் பரவும் இந்த ஆபாச கண்டெண்டுகள் மிக பெரிய பிரச்சினையாக வெடிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்தக் காலத்தில் திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ தான் இருக்கிறது. ஏஐ வளர்ச்சி மின்னல் வேகத்தில் போய்க் கொண்டு இருக்கிறது. இதனால் பல்வேறு துறைகளிலும் நாம் ஏஐ டூல்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளோம். ஏஐ டூல்களை பயன்படுத்தும்போது நமக்கு நேரம் கணிசமாகக் குறைகிறது. வேலையும் பிழைகள் எதுவும் இல்லாமல் முடிகிறது. இதனால் ஏஐ பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Why AI-Made inappropriate Videos are trending and becoming toxic trend in Indian social media

ஏஐ ஆபாச கண்டெண்டுகள்

பல்வேறு துறைகளிலும் ஏஐ பயன்பாடு இதுபோல அதிகரித்தே வருகிறது. அதேநேரம் இதனால் சிக்கல்கள் எதுவும் ஏற்படாமல் இல்லை. இது பல வகையான சிக்கல்களை நமக்கு ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. வேலையிழப்பு, பிரைவசி மீறல் எல்லாம் ஒரு பக்கம் என்றால் அதையும் தாண்டி ஒரு மோசமான பிரச்சினை வெடிக்கிறது. அதுதான் ஏஐ வைத்து உருவாக்கப்படும் ஆபாச கண்டெண்டுகள்.

பொது இடத்தில் ஆபாசச் செயல்கள் அல்லது அளவுக்கு மீறிய கவர்ச்சி உடையில் வலம் வரும் பெண்கள் என மிக மோசமாகப் போய்க் கொண்டு இருக்கிறது ஏஐ ஆபாச வீடியோக்கள். சமூக வலைத்தளங்களில் அதிகமானோரை ஈர்க்க, ஆபாச வீடியோக்களை உருவாக்க ஏஐ பயன்படுத்தி வீடியோவை உருவாக்குகிறார்கள். இது உண்மையானது தானோ என பலரும் நம்பும் அளவுக்கு மிகவும் தத்ரூபமாக உள்ளது.

அதிக வியூஸ்

இது தொடர்பாக செக் செய்து பார்த்ததில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட ஆபாச கண்டெண்டுகளுக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் வரவேற்பு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் குறுகிய காலத்திலேயே அதிக வியூஸ்களை பெற முடிகிறதாம். மற்ற கண்டெண்டுகளை பதிவிடுவோருக்கு ஒரு லட்சம் யூசர்கள் வரவே பல மாதம் ஆகும். ஆனால், ஆபாச கண்டெண்டுகளை பதிவிடுவோருக்குச் சில வாரங்களில் ஒரு லட்சம் யூசர்கள் வருவது கவலை தரும் விஷயமாகவே இருக்கிறது.

சில வீடியோக்களில் மைனர் வயதுடையவர்களைப் போல இருப்போரை வைத்து இரட்டை அர்த்த வசனங்களைப் பேச வைக்கிறார்கள். மேலும், பொது இடங்களில் மிகவும் நெருக்கமாக இருப்பது போல எல்லாம் வீடியோக்கள் உருவாக்குகிறார்கள். மேலும் ஏஐ மூலம் யாருடைய முகத்தை போலவே இருக்கும் வீடியோக்களை உருவாக்கலாம். இவை எல்லாமே இதில் கவலை தரும் விஷயமாக இருக்கிறது.

நிலைமை மோசம்

அதேநேரம் நாம் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். இவை அவர்கள் வெறுமன பொழுதுபோக்கிற்காக மட்டும் தயாரிப்பதில்லை. இதன் மூலம் அந்தக் கணக்குகளை நடத்துவோர் கணிசமாக லாபம் ஈட்டவும் செய்கிறார்கள். சந்தா வாங்கிக் கொண்டு வீடியோக்களை பகிர்கிறார்கள். இதுபோன்ற AI வீடியோக்களை உருவாக்கப் படிப்புகளும் கூட இருப்பதாக விளம்பரப்படுத்தும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது.

குழந்தைகள் கணக்கு

நார்த்ஈஸ்டர்ன் பல்கலைக்கழகம் 2024இல் நடத்திய ஆய்வின்படி, இன்ஸ்டாகிராம் குழந்தைகளின் கணக்குகளில் கூட அவர்கள் வயதை தாண்டி தேவையில்லாத கண்டெண்டுகள் வருகிறது. அதாவது நாம் கணக்கு தொடங்கும்போதே வயதைக் குறிப்பிடுவோம். அதில் 14 வயது என குறிப்பிடப்பட்ட கணக்குகளும் கூட தேவையில்லாத வீடியோக்கள் வருகிறதாம்.

இதுபோன்ற வீடியோக்கள் டீன் ஏஜ் வயதில் பார்க்கும்போது அது தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்கும். குறிப்பாக மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறார்கள். எனவே, ஏஐ ஆபாச வீடியோக்களை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+