ஐப்பசி மாதம்..துலாம் ராசியில் 4 கிரக சேர்க்கை.. ராஜயோகம் தேடி வரும் ராசிக்காரர்கள் யார்?
சென்னை: ஐப்பசி மாதத்தில் சூரியன், சந்திரன் கிரகணங்கள் நிகழ உள்ளன. துலாம் ராசியில் சில நாட்கள் சூரியன், சந்திரன், கேது, சந்திரன் ஆகிய நான்கு கிரகங்கள் இணைந்து சதுர் கிரக யோகத்தை தரப்போகின்றன. சந்திரன் இடப்பெயர்ச்சியடைந்தாலும் சூரியன், சுக்கிரன், கேது உடன் புதன் இணைகிறார். இந்த கிரகங்களை நேர் பார்வையாக ராகு பார்ப்பதால் கூடுதலாக பாதிப்பு ஏற்படலாம். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
சூரியனின் ஆற்றல் இந்த மாதத்தில் குறைவாக இருக்கும். துலாம் ராசியில் நீச்சம் பெற்று பயணிக்கும் சூரியனுடன் கேதுவும், ஆட்சி பெற்ற சுக்கிரனும் பயணம் செய்ய இருக்கின்றன. இதனால் சூரியன் நீச்ச பங்க ராஜயோகம் பெற்று பயணம் செய்யப்போகிறார். வக்ர நிலையில் பயணித்த சனிபகவான் இந்த வாரத்தில் இருந்து நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார்.
சுக்கிரன் சூரியன் இணைவு சில ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய ராஜயோகத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்கு அதிபதியான சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்வதால் சூரியனுக்கு பலம் கொடுக்கும். ஆனால், கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதும் அவசியம். ஐப்பசி மாதம் 8ஆம் தேதி அக்டோபர் 25ஆம் தேதி துலாம் ராசியில் கேது கிரஹஸ்த சூரிய கிரகணம் நிகழப்போகிறது. இதே மாதத்தில் 22ஆம் தேதி நவம்பர் 08ஆம் தேதி மேஷ ராசியில் ராகு கிரஹஸ்த சந்திர கிரகணம் நிகழப்போகிறது. இந்த கிரகணங்களால் இன்னும் சில மாதங்களுக்கு சிலருக்கு மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்ட வாய்ப்பு உள்ளது. யாருக்கு என்ன மாதிரியான பாதிப்பு ஏற்படும் பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

தனுசு
எங்கே போனாலும் எப்படி போனாலும் முட்டுச்சந்தாக இருக்கிறதே என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்த தனுசு ராசிக்காரர்களே.. உங்களுக்கு ராஜயோகம் தேடி வரப்போகிறது. ஏழரை சனியின் தாக்கத்தினால் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கும் உங்களுக்கு இனி நல்ல காலம்தான். காரணம் லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் நான்கு கிரகங்கள் சேர்க்கை உள்ளதுதான். திடீர் பணவரவு வந்து திக்குமுக்காட வைக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் இரட்டிப்பு லாபத்தை கொடுக்கும். வரவே வராது என்று நினைத்த கடன்தொகை வந்து உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உங்கள் வீடு கலகலப்பாக இருக்கும்.நீங்களும் உற்சாகமாக இருப்பீர்கள்.

பணவரவு
டல்லாக இருந்த தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். உங்களுக்கு கிடைக்கும் லாபத்தில் சொத்து வாங்குவீர்கள். புதிய நிறுவனங்களில் நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மதிப்பு கூடும் பாராட்டுக்கள் கிடைக்கும். இடமாற்றம் வீடு மாற்றம் ஏற்படும். பழைய வீட்டை கொடுத்து விட்டு புதிய வீட்டிற்கு மாறுவீர்கள். இல்லத்தரசிகள், பெண்களுக்கு யோகமான கால கட்டம் என்பதால் பொன்நகை சேர்க்கை ஏற்படும். உங்களை நீங்களே அழகுபடுத்திக்கொள்வீர்கள். பிள்ளைகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசலாம். மொத்தத்தில் அற்புதமான கால கட்டமாக அமைந்துள்ளது. அமாவாசை நாளில் வாழைப்பழம் தானமாக கொடுங்கள். இயலாதவர்கள் ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள்.

மகரம்
உங்கள் ராசிநாதன் சனிபகவான் வக்ர நிலையில் இருந்து மீண்டு நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார். இதுவே உங்களுக்கு மன நிம்மதி தரும் காலம்தான். உங்களுடைய பத்தாவது வீடான தொழில் ஸ்தானத்தில் ராஜ கிரகம் சூரியனும், யோகாதிபதி சுக்கிரனும் கூடியுள்ளனர். வேலை தொழிலில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். எதிர்பார்த்த இடத்திற்கு புரமோசனுடன் கூடிய இடம் மாற்றம் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். மன குழப்பங்கள் நீங்கி நிம்மதி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும்.

வீடு மனை வாங்கும் யோகம்
பத்துக்கு அதிபர் சுக்கிரன் பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்து யோகத்தை தருவதால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். வருமானம் அதிகரிக்கும் புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் கைகூடி வருகிறது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் கைகூடி வரும். வெற்றிகள் தேடி வரும். நினைத்த காரியம் நிறைவேறும். வீடு மனை விற்று புது வீடு வாங்கும் யோகம் வருகிறது. பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும். சகோதரர்களால் சந்தோஷம் கூடி வரும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி அன்பும் பாசமும் அதிகரிக்கும். ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு உங்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்கும்.

கும்பம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே, உங்களுக்கு பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் கிரகங்கள் கூடியுள்ளன. பாக்யாதிபதி பாக்ய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். நீண்ட நாட்களாக போக நினைத்த கோவிலுக் இந்த மாதம் சென்று வருவீர்கள். சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைந்து பலமுடன் அமர்வதால் உங்களுக்கு நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வீட்டில் சண்டை சச்சரவுகள் நீங்கி அன்பும் பாசமும் அதிகரிக்கும்.

சொந்த வீடு யோகம்
பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்கிறார். கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். கிரகண நாளில் தவறியும் கூட வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பிள்ளைகள் விசயத்தில் கவனம் தேவை. சொந்த வீடு வாங்கும் யோகம் கைகூடி வருகிறது. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி தொழில் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கும். அப்பா வழி சொத்துக்கள் வந்து சேரும்.

மீனம்
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான எட்டாவது வீட்டில் கிரகங்கள் கூடியுள்ளன. எந்த விசயத்தையும் யோசித்து செய்வது நல்லது. திடீர் பயணங்கள் ஏற்படும். வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரப்போகிறது. வெளியூர்களில் சாப்பிடும் உணவுகளில் கவனம் தேவை. எண்ணெய் பலகாரங்களை அதிகம் சாப்பிட வேண்டாம். எத்தனையோ சவால்களை சந்தித்து வந்திருப்பீர்கள். இது சாதனை புரியும் காலம். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

ராஜயோக காலம்
விபரீத ராஜ யோக காலம் கைகூடி வரப்போகிறது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். செவ்வாய் பலமாக அமர்ந்துள்ளதால் வீடு மனை சொத்து வாங்கலாம். சமூகத்திலும் அலுவலகங்களிலும் உங்கள் மதிப்பு மரியாதை கூடும். ஆன்மீக பயணம் செல்வீர்கள். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவாக சிந்திப்பீர்கள். அம்மாவின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். வாழ்க்கையில் முன்னேற்றம் அதிகரிக்கும். பண வரவு அதிகரித்தாலும் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். செவ்வாய்கிழமைகளில் முருகன் கோவிலுக்கு சென்று வணங்கி வருவது லாபத்தை அதிகரிக்கும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications