ஆனி மாத ராசி பலன் 2023: சூரிய பெயர்ச்சியால் அற்புத யோகம்..4 ராசிக்காரர்கள் என்ஜாய்!
சென்னை: நவ கிரகங்களில் அரச கிரகமான சூரியன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கும் மாதம் ஆனி மாதம். சூரியனின் வடதிசைப் பயணக் காலம் ஆன உத்திராயணத்தின் கடைசி மாதமாக வருவது ஆனி. அதாவது, தேவர்களுக்கு உரிய பகல் பொழுதின் இறுதிப் பகுதி. நம் நாட்டில் நீண்ட பகல் பொழுதினைக் கொண்ட மாதமாக இந்த மாதம் அமைந்துள்ளது என்ற கருத்தும் வழக்கில் உள்ளது. ஜேஷ்ட மாதம் என்றழைக்கப்படும் இந்த ஆனி மாதத்தில் வரும் கேட்டை நட்சத்திர நாளில் ஜேஷ்டாபிஷேகம் என்ற விழா ஆலயங்களில் நடைபெறும். பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆனி மாதத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்: அரச கிரகமான சூரியன் மூன்றாமிடத்தில் பயணம் செய்யும் இந்த காலத்தில் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும் வியாபாரம் விருத்தியாகும். உங்கள் பேச்சில் நகைச்சுவை உணர்வு அதிகரிக்கும் பேச்சிலேயே பலரையும் கவர்வீர்கள். உங்களின் தகவல் தொடர்பு நிலை சீரடையும். இந்த மாதத்தில் புது வண்டி வாகன யோகம் உண்டாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி தேடி வரும். தொட்டது துலங்கும் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் யாவும் எளிதில் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். உடலில் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும். பண விசயத்தில் நண்பர்கள், வாழ்க்கை துணையின் உதவி கிடைக்கும்
ரிஷபம்: வேலையில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் சம்பள உயர்வு கிடைக்கும். பேச்சில் அதிகாரம் அதிகரிக்கும். இளைய உடன்பிறப்புகளால் நன்மை உண்டாகும். ஆலய தரிசனத்திற்காக வெளியூர் செல்வீர்கள். பக்கத்து வீட்டுக்காரர்களால் நன்மை உண்டாகும். உங்களின் புத்தி கூர்மை அதிகரிக்கும் சமயோசிதமாக பேசி காரியத்தை சாதிப்பீர்கள். தொழில் உத்தியோகம் சிறப்படையும் எடுக்கும் காரியங்களெல்லாம் வெற்றியடையும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் திருக்கோயில் பணிகளுக்கு நன்கொடை கொடுப்பீர்கள். ராகு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும் கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மிதுனம்: வேலையில் தலைமைப் பதவி கிடைக்கும் படிப்பு விசயத்தில் அப்பாவின் உதவி கிடைக்கும். வீடு மனை வாகனம் வகையில் பண வரவு அதிகரிக்கும். பேச்சில் இனிமை அதிகரிக்கும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். சில வாரங்களுக்கு ஷேர்மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்கவும். முன்னோர்கள் சொத்திலிருந்து பண வரவு அதிகரிக்கும். செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபம் பண வரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளும் அதிகரிக்கும். குடும்பத்தோடு உல்லாசப் பயணம் செல்வீர்கள்.
கடகம்: தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் அதிகரிக்கும். வெளிநாடு தொழில் தொடர்புகள் மூலம் பணவரவு அதிகரிக்கும். கூர்மையான பொருட்கள் நெருப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்கவும். சுக்கிரனால் உங்களின் முக வசீகரம் அதிகரிக்கும் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். செய்யும் தொழிலில் கமிஷன் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் தொழில் நிமித்தமாக வெளியூர் செல்வீர்கள். தொழில் உத்தியோகம் சிறப்படையும். அஷ்டமத்து சனியால் உங்களின் உடல் உழைப்பு அதிகரிக்கும். பண வரவு வந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் ஸ்தான ராகுவால் செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும் சுக ஸ்தான கேதுவினால் புதிதாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications