"தெருவை காணோம்".. வடிவேல் பாணியில் களமிறங்கிய ஜிபி முத்து.. கண்டுபிடித்து தரக் கோரி ஆட்சியரிடம் மனு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் காணாமல் போன கீழ தெருவை கண்டுபிடித்து தரக் கோரி நடிகர் ஜி.பி.முத்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். இந்த கீழத்தெரு தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், உரிய நில அளவீடு செய்து நிலத்தை மீட்டுத் தரக் கோரியும், நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜிபி முத்து என்றாலே அவர் கூறும் செத்த பயலே, நாரப் பயலே என்ற வசனம்தான் நினைவுக்கு வரும். யூடியூப், இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமானவர் ஜிபி முத்து. இவரது நகைச்சுவைக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று ரசிகர்களின் ஆதரவைப் பெற்றிருந்தார்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் காணாமல் போன கீழத்தெருவை கண்டுபிடித்து தரக் கோரி நடிகர் ஜி.பி.முத்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். இந்த கீழத்தெரு தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், உரிய நில அளவீடு செய்து நிலத்தை மீட்டுத் தரக் கோரியும், நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிப்பேன் என்று ஜிபி முத்து மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஜி.பி.முத்து தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், காலன் குடியிருப்பு வருவாய் கிராமம், உடன்குடி பெருமாள்புரத்தில் நத்தம் சர்வே எண் 233-இல் கீழ தெரு இருந்தது. அரசுக்குச் சொந்தமான இந்த புறம்போக்கு நிலத்தை பாதையாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் அந்த தெரு சிட்டிசன் திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமம் காணாமல் போனது போன்று அந்த கீழதெரு காணாமல் போய்விட்டது. அந்த தெரு இருந்த இடத்தை பல்வேறு தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் செல்லும் பாதையும் அடைக்கப்பட்டு உள்ளது. எனவே, மேற்படி இடத்தை நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்கவுள்ளதாக ஜி.பி.முத்து எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications