ஏர் இந்தியாவுக்கு இப்படி ஒரு சோதனையா?.. விமான விபத்துக்குப் பின் 20 சதவீதம் குறைந்த டிக்கெட் முன்பதிவு
டெல்லி: அகமதாபாத்தில் இருந்து லண்டன் கிளம்பிய விமான விபத்தில் சிக்கி சுமார் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், ஏர் இந்தியா விமானத்தில் செல்லவே பொதுமக்கள் அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், விமான விபத்தை தொடர்ந்து ஏா் இந்தியா விமான பயணச்சீட்டு முன்பதிவுகள் சுமாா் 20 சதவீதம் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலம், அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த வாரத்தில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில நிமிடங்களிலேயே அருகில் உள்ள மருத்துவக்கல்லூரி விடுதி வளாகத்தில் மோதி வெடித்து சிதறியது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விமானம் தீயில் கருகிய நிலையில் அதில் பயணித்த 241 பேர், மருத்துவக்கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் 30க்கும் மேற்பட்டோர் என மொத்தம் 274 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் பயணித்த ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார். மற்றவர்கள் அனைவரும் உடல் கருகி உயிரிழந்தனர். டாடா நிறுவனம் சார்பில் உயிரிழந்தோருக்கு ரூ. 1 கோடி நிவாரணம் அளிக்கப்பட்டது.
விமானம் விபத்துக்குள்ளானது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஒருபக்கம் உயிரிழந்தவர்களின் கதைகள் தொடர்ந்து வெளியாகி சோகத்தை ஏற்படுத்தின. விமான விபத்தை தொடர்ந்து ஏா் இந்தியா விமான பயணச்சீட்டு முன்பதிவுகள் சுமாா் 20 சதவீதம் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, இந்திய சுற்றுலா ஏற்பாட்டாளா்கள் கூட்டமைப்பின் தலைவா் ரவி கோசாய்ன் கூறியதாவது: ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தை தொடர்ந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக்கு பயணிப்பதற்கான ஏர் இந்தியா டிக்கெட் முன்பதிவுகள் தற்போது 20 சதவீதம் குறைந்துள்ளது. ஏர் இந்தியா விமானத்தில் டிக்கெட் ரேட்டும் 15 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முன்பதிவு தொடர்ந்து சரிந்துள்ளது.
ஏர் இந்தியாவின் 8 பயணிகள் விமானங்கள் பராமரிப்பு உள்ளிட்ட காரணங்களால் நேற்று ரத்து செய்யப்பட்டன. டெல்லியில் இருந்து புனேவுக்கு ஏர் இந்தியா விமானம் மீது பறவை மோதியது. இதையடுத்து அந்த விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து, புனே டூ டெல்லி செல்லும் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது என்றார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications