Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குருவின் அருளால் விருச்சிக ராசிக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம்.. சிக்கல்கள் அனைத்திற்கும் தீர்வு

Subscribe to Oneindia Tamil

ஏப்ரல் மாத பலன்: ஏப்ரல் மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்கள் பெறும் நற்பலன்கள் என்ன, பரிகாரங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஏப்ரல் மாதத்தில் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு ஆரம்பமாகிறது. மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. அன்று முதல் மே 18 ஆம் தேதி நடைபெறவுள்ள ராகு கேது பெயர்ச்சி நடைபெறுகிற காலகட்டம் வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, தென் நாட்டில் இயற்கைச் சீற்றங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளது. பாதுகாப்பாக இருக்க வேண்டிய காலகட்டமாக இருக்கும். சனி ராகுவின் சேர்க்கை பல அதிர்ச்சியான விஷயங்களையும் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஏப்ரல் மாதத்தில் விருச்சிக ராசியினர் பெறும் நல்ல பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரு பகவானுடைய பார்வை உங்களுக்கு மிகப்பெரிய நன்மைகளை உருவாக்கித் தரும். அஷ்டமத்தில் இருக்கும் செவ்வாய் அதனால் சில தடைகள், சில பிரச்சனைகள் உங்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். செவ்வாய் பாக்கிய ஸ்தானத்துக்கு போவதால் உங்களுடைய செயல்பாடுகளை வைத்து வெற்றி, தோல்விகள் நிர்ணயிக்கப்படும் மாதமாக இருக்கும்.

april-month-palan-what-kind-of-benefits-will-get-viruchigam-scropio-in-april-month

செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் உள்ளது. அதுவே தான் உங்களுக்கு பாதகஸ்தானம். நீங்கள் மிகவும் ஆசையில்லாமல் நியாயமாக நடந்து கொண்டால் இந்த மாதம் உங்களுக்கு செவ்வாய் பகவான் பாக்கியத்தை செய்வார். மனதில் எதாவது கெடுதல் எண்ணம் இருந்தால் செவ்வாய் பகவான் உங்களுக்கு பாதகத்தை செய்வார்.

தன வாக்கு, குடும்ப ஸ்தானதிபதியாக இருக்கக்கூடிய குரு பகவான் உங்களைப் பார்க்கிறார். குடும்ப வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருக்கும். பிள்ளைகளுக்கும், உங்களுக்கும் இருந்து வந்த கருத்து மாறுபாடுகள் நீங்கும். பிள்ளைகள் வாழ்க்கையில் இருந்து வந்த தடைகள் நீங்கும். அலுவலகத்தில் இருந்து வர வேண்டிய வருமானம் சரியான முறையில் வந்து சேரும்.

குழந்தை பாக்கியத்துக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். உங்கள் பேச்சினால் எதாவது சிக்கல்கள் வந்திருந்தால் அந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தியாகும். குரு பகவான் உங்களுடைய ராசியைப் பார்ப்பதால் நிம்மதி உண்டாகும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது நல்லது. அதில் கவனமாக இருக்க வேண்டும்.

மூன்றாம் இடத்துக்கு அதிபதியாக இருக்கக்கூடிய சனி பகவான் 4 ஆம் இடத்துக்கும் அதிபதி. புதிய தொழில் ஒன்றை தொடங்குவதற்கான வாய்ப்புள்ளது. தொழில் சம்பந்தமான பயணங்களை மேற்கொள்வீர்கள். சிலருக்கு புதிய கிளை துவங்குவதற்கான யோசனை உண்டாகும். குடும்பத்தில் ஒரு சாபம் ஏற்படுவதற்கான காலகட்டமாக இருப்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏற்கனவே முற்பிறவியில் இருந்து வந்த சாபங்கள் சில தடைகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புள்ளது.

உங்களுடைய ஜாதகத்தை ஜோதிடரிடம் ஆராய்ந்து கொள்வது நல்லது. பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுத்திருப்பதால் 5 ஆம் இடத்தில் சுக்கிரன், ராகு, சனி, சூரியன், புதன் 5 கிரகங்களின் சேர்க்கை இருப்பதால் பிள்ளைகள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தவறான சேர்க்கை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உயர்கல்வியில் நீங்கள் எதிர்பார்ப்பது ஒன்று, கிடைப்பது ஒன்றாக இருக்கும். உயர்கல்வியில் சில மன அழுத்தங்கள் உண்டாகும். ஆனாலும் அதில் சாதித்துக் காட்டும் யோகம் உண்டும். விருச்சிக ராசி பிள்ளைகள் விஷயத்தில் பிரச்சனை, பிள்ளைகளுக்குப் பிரச்சனை, அலுவலகத்தில் பிரச்சனை என என்ன பிரச்சனை இருந்தாலும் ஆஞ்சநேயர் வழிபாடு நல்ல பலன்களைத் தரும்.

ஏப்ரல் 6 ஆம் தேதி ராமநவமி வருகிறது. ராமரை வழிபடுவது அனைத்துப் பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். செவ்வாய் அஷ்டமத்தில் அமருவதால் உடல்நலனில் அக்கறையாக இருப்பது நல்லது. ஆஞ்சநேயர் வழிபாடு உடல்நலனில் நல்ல பலன்களைத் தரும். சிலருக்கு புதிய காதல் மலரும். காதலித்தவர்களை திருமணம் செய்வதற்கான யோகம் உண்டு. காதல் விஷயத்தில் மாற்றம் ஏற்படும் என்பதால் கவனம் தேவை.

வெளிநாட்டுக்குச் சென்று வேலை செய்யும் யோகம் உண்டாகும். ஆன்லைன் வருமானம் உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம், வருமானம் உண்டாகும். வரும் மாற்றத்தை ஏற்றுக் கொள்வது நல்லது. 5 ஆம் இடத்தில் சூரியன் அமர்ந்து தொழிலில் நல்ல மாற்றத்தை தருவார்.

வழிபட வேண்டிய தெய்வம் - மலையப்ப சுவாமியை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். முயற்சிகளில் தடைகள் வருவதை பொருட்படுத்த வேண்டாம். அது நிவர்த்தியாகும். சுக்கிரனின் அமைப்பு உச்சமாக இருப்பதால் வெளிநாடு யோகம் உண்டாகும். சிலருக்கு இரவு நேர வேலைகள் அமையும். பெண்கள் உங்களுடைய பாதுகாப்பை அதிகப்படுத்தக் கூடிய காலகட்டமாக இருக்கும். புதிய நண்பர்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+