அட்சய திருதியை 2019: தங்கம் வாங்குவதை விட தானம் செய்தால் தலைமுறைக்கும் புண்ணியம் சேரும்
அட்சய திருதியை ரோகிணி நட்சத்திரத்துடன் வரும் நாள் மிக மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இன்றைய நாளில் தானம் செய்வதால் தலைமுறைக்கும் புண்ணியம் சேரும்.
மதுரை: அட்சய திருதியை தினத்தன்று நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை போன்றவற்றை தானம் தரச் சொல்கிறது பவிஷ்ய புராணம். அன்றைக்குக் கொடுக்கப்படும் பொருட்கள், அளிப்பவருக்கு நிறைவாக பெருகும்.
ரோகிணி நட்சத்திரத்துடன் வருகிற அட்சய திருதியை மிகவும் சிறப்பானது இன்றைய நன்னாளில், முடிந்தவரை உணவோ உடையோ தானம் செய்யுங்கள். உங்கள் வீட்டில் இதுவரை இருக்கின்ற செல்வம் பன்மடங்காகப் பெருகும் என்பது உறுதி!

அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாக கருதப்படுகிறது. அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும். ஒரு வியாபாரத்தை துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூஜை செய்வது போன்ற புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் செய்வதன் மூலம் அளப்பரிய நன்மைகளை அடைய முடியும். மேலும் இந்த நாளில் தான தர்மங்கள் செய்தால் இரண்டு மடங்கு பலன் கிடைக்கும்.
வடமாநிலங்களில் அட்சய திருதியை தினத்தன்று திருமணம் நடத்துவதை புனிதமாக கருதுகிறார்கள். ஹரியானா, பஞ்சாபில் அதிகமாக உள்ள ஜாட்இனத்தவர்கள் அட்சய திருதியை தினத்தன்று மறக்காமல் மண் வெட்டி எடுத்துக் கொண்டு வயலுக்கு செல்வார்கள்.
குரு தற்போது வக்ர கதியில் இருக்கிறார், குரு தன் இயல்பு நிலைக்கு எதிராக இருக்கும் போது தங்கம் வாங்குவதால் வளர்ச்சி அடையாது என்கின்றனர் எனவே அட்சய திருதியை நாளில் புண்ணிய காரியங்கள் செய்து அதன் மூலம் கிடைக்கும் புண்ணியங்கள் உங்கள் சந்ததியினருக்கு சேரும் என்பது உறுதி.
இந்தப் புண்ணியத்தின் பலன்கள் என்பது நாம் நம் சந்ததிக்கு கோடி கோடியாய் வைத்துச் செல்லும் மிகப்பெரிய பிக்ஸட் டெபாசிட். இதன் மூலம் நம் சந்ததியினர் வாழ்வாங்கு வாழ்வார்கள்.
ஏழைகளுக்கு தயிர்சாதப் பொட்டலம் வழங்கலாம். சித்தர்கள் ஜீவசமாதி உள்ள ஆலயங்களுக்குச் சென்று புண்ணியத்தை தரும். அன்னதானம் செய்யலாம். ஆலயங்களுக்கு உங்கள் சார்பில் ஏதாவதொரு பூஜைக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கித்தரலாம். வயதானவர்களுக்கு குடை வாங்கிக் கொடுங்கள். செருப்பு தானம் செய்யுங்கள். நீர்மோர் பானகம் வழங்கலாம்.
மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில், பெண்களுக்கு மஞ்சளும் குங்குமமும் மல்லிகைப்பூவும் வாங்கிக் கொடுத்து கூடவே ஜாக்கெட் பிட் வைத்து கொடுக்கலாம்.
அட்சய திருதியை நாளில் முன்னோரை நினைத்து, எள்ளும் தண்ணீரும் அளித்து வணங்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். தண்ணீர் நிரம்பிய குடத்தை தானமாகத்தருவது சிறப்பு என்கிறார்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications