Rasi Palan This Week: தனுசு ராசிக்கு சுக்கிரனால் வரப்போகும் யோகம்.. கடன் விஷயத்தில் இதை பண்ணுங்க
வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.
அந்த வகையில், நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்தில் குரு வக்கிரமாக இருக்கிறார். 4 ம் இடம் சுக ஸ்தானத்தில் சனி வக்கிரம். விரயத்தில் புதன் வக்கிரமாக இருக்கிறார். வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆரோக்கியம், உங்களுடைய ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். கிரெடிட் கார், லோன் வாங்கி கட்டாமல் இருந்தால் அமர்ந்து பேசி முடித்துக் கொள்வது நல்லது. சுப விரய பிராப்தம் உண்டாகும். சந்தோஷமான செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள்.
ஆரோக்கியம்
இப்போது எடுக்கும் முடிவுகள் செட்டிலாகும். ஆனால், பிபி அதிகரிக்கும். மறைமுகமான ஒரு நாள் அறுவை சிகிச்சைகள் நடக்கும் வாய்ப்பு ஏற்படும். சிறுகுடல், பெருகுடல் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. சிலருக்கு லிவர் பிரச்சனைகள், ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் வந்து போகும். ஒரு மாதத்திற்கு கவனமாக இருப்பது நல்லது. இடமாற்றங்கள் ஏற்படும். தொழில் ரீதியாக முன்னேற்றங்கள் ஏற்படும்.
வெளியூர் பயணம்
நிறைய பேருக்கு வெளியூர் மாற்றங்கள் ஏற்படும். உள்ளூரில் இருப்பவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. அலைச்சல்கள் ஏற்படும். தூக்கம் வராது. நிறைய அழுத்தங்கள் வரும் வாய்ப்புள்ளது. அஷ்டமத்தில் குரு இருந்தாலே பிரச்சனைதான். தற்போது வக்கிரமாகவும் இருப்பதால் எப்போதோ செய்த தவறுக்கு, மற்றவர்கள் செய்த தவறுக்கு நீங்கள் சிக்கும் வாய்ப்பு ஏற்படும். இழுபறியாக இருந்த நிலைமைகள் மாறும்.
சுக்கிரனால் அதிர்ஷ்டம்
தனிப்பட்ட முறையில் செல்வாக்கு அதிகரிக்கும். வயிறு, கழுத்து தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. செவ்வாய்க்கிழமைகளில் உணவு தானம் கொடுப்பது விரயத்தை தடுத்து நிறுத்தும். லாப ஸ்தானத்தில் சுக்கிரன் இருப்பது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். உங்கள் மனைவியால் அதிர்ஷ்டம் ஏற்படும். மூத்த அக்காக்களால் அதிர்ஷ்டம் ஏற்படும்.
பண வரவு கொட்டும்
பணத்திற்குப் பஞ்சமே இருக்காது. தன பாக்கியம் அற்புதமாக இருக்கும். ஆரோக்கியத்தில் என்ன பிரச்சனை வந்தாலும் உடனே சரியாகும். சந்தோஷம் 80 சதவீதமும், பொருளாதாரம் 90 சதவீதம் நன்றாக இருக்கும். அர்த்தநாரீஸ்வரரை வழிபாடு செய்வது நன்மை பயக்கும்.












Click it and Unblock the Notifications