Diwali Rasi Palan: தீபாவளி பண்டிகை.. ராஜயோகத்தால் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்
தீபாவளி சிறப்பு பலன்: மக்கள் மனதில் இன்பு ஒளியை பரப்பும் தீபாவளி பண்டிகையை உற்சாசமாக கொண்டாடி வருகிறோம். இந்திய மக்களின் கலாச்சாரம், நம்பிக்கையில் தீபாவளி மிகவும் பிணைந்துள்ளது. இந்த பண்டிகையை சென்டிமென்டாக பார்த்து பல நல்ல விஷயங்களை தொடங்குவதை மக்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். 2025 தீபாவளி பண்டிகையில் கிரக நிலை மாற்றங்களால் சில அற்புதமான யோகங்களை உருவாக்கியுள்ளது. இதனால் அதிகளவு யோக பயன்களை பெறப் போகும் 4 ராசிகள் குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுறிது. நம் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும், அதிக உற்சாகத்துடன் கொண்டாடும் ஒரு பண்டிகை என்றால் அது தீபாவளி தான். இந்த ஒரு பண்டிகைக்காக வருடம் முழுவதும் காத்திருப்பவர்களும் உள்ளனர். மிகவும் நல்ல நாள் என்பதால் பலர் இந்த நாளில் முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். அதனால் மக்கள் இதை உணர்வுபூர்வமாகவும் கொண்டாடுவார்கள்.

மேலும் ஐப்பசி மாதத்திற்குள்ளும் அடியெடுத்து வைக்கிறோம். இந்த காலத்தில் கிரக நிலைகளில் ஆங்காங்கே மாற்றங்களும் ஏற்படும். இந்த மாற்றம் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். தீபாவளி பண்டிகையில் 100 ஆண்டுகளுக்கு பிறகு ஹன்ச ராஜயோகம் உருவாகியுள்ளது. 18 வருடத்துக்கு ஒருமுறை மட்டமே வரும் அபூர்வ அமாவாசையும் தீபாவளி பண்டிகையின் வருகிறது. கூடவே மகா யோகமும் உருவாகிறது. இது 4 ராசிகளுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கும்.
கடகம்
குரு பகவான் சொந்த ராசிக்கு வந்துள்ளார். சுப காரிய தடைகள் விலகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். மனதில் இருந்த குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். தன்னம்பிக்கை, தைரியம் கூடும். சொந்த வீடு கனவு நனவாகும். சொத்து சேர்க்கை நிச்சயம் உண்டு. வெளிநாடு செல்வதற்கான முயற்சியில் நல்ல செய்தி கிடைக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும்.
விருச்சிகம்
குரு பகவான் ஒன்பதாம் இடத்திற்கு வந்துள்ளார். சுக்கிரன், செவ்வாய் பகவான்களும் ஆட்சி பலம் பெற்றுள்ளார். வாழ்க்கை துணையுடன் புரிதல் அதிகரிக்கும். காதலில் இனிமைக் கூடும். ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்பார்கள். குரு பார்வையால் திடீர் பண வரவு, திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். இறங்கிய காரியங்களில் எல்லாம் வெற்றி குவியும்.
தனுசு
நீண்ட நாள் கனவு நனவாக போகிறது. இதுநாள் வரை தடைபட்ட காரியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் விலகி அந்யோநியம் கூடும். தொலை தூரத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. உத்யோகம், தொழிலில் வருமானம் பெருகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும்.
மீனம்
குரு பகவான் ஐந்தாம் இடத்தில் உச்சம் பெறுவதால் உத்யோகம், தொழிலில் ஏற்றம் காணப்படும். தொழிலில் எதிர்பாராதளவுக்கு முன்னேற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவது, தொழில் விரிவாக்கம் செய்வது போன்றவை நடக்கும். பண வரவு அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் ஏற்படும். நிலம், வீடு, ஆபரணங்கள் உள்ளிட்ட அசையும், அசையா சொத்து சேர்க்கை இருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
தமிழ் புத்தாண்டு பலன்: ராஜாபகவத் போல மாறும் விருச்சிக ராசி.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: ரிஷப ராசிக்கு குரு உச்சம்.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கோடீஸ்வர யோகம் பெறும் சிம்ம ராசி.. அள்ளிக் கொடுக்கும் குரு, கேது பகவான் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. தலையெழுத்தே மாறப்போகுது -
தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. இந்த விஷயத்தில் கவனம் -
Rasi Palan This Week:குருவின் அருளால் சனியிடமிருந்து தப்பிக்கும் மீன ராசி..பண விஷயத்தில் ரொம்ப கவனம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications