கார்த்திக் டயல் செய்த எண்ணால் தடுமாறும் மனசு - பெண்கள் தப்பிக்க ஜோதிட பரிகாரம்
காதலோ, கள்ளக்காதலோ எதுவென்றாலும் ஆண் பெண்ணின் ஜாதகம் பார்த்து தெரிந்து கொள்ளலாம். கள்ளக்காதலில் இருந்து தப்பிக்க வாழ்க்கையை சரியான திசைக்கு கொண்டு ஜோதிடத்தில் நல்ல பரிகாரம் இருக்கிறது. அந்த பரிகாரத்தை
சென்னை: ஜானுவோ, ஜெஸ்ஸியோ திருமணமாகி கணவன் குழந்தைகள் என்று செட்டிலான பின்னர் ராம், கார்த்திக் என சிங்கிள்ஸ் ஆக சுற்றிக்கொண்டிருக்கும் பழைய காதலர்களை திடீரென சந்திக்கும் போதோ, பழைய காதலருடன் போனில் பேசும் போதோ மனசு தடுமாறத்தான் செய்யும். அந்த தடுமாற்றம் நீடிக்காமல் மனதை ஒருநிலைப்படுத்தி இப்போது உள்ள அழகான குடும்பத்தை நினைத்து பார்த்து மனதை மாற்றினால் வாழ்க்கை தெளிந்த நீரோடையாக இருக்கும். திருமணம் ஆனவர்கள் கள்ளக்காதலில் இருந்து தப்பிக்க ஜோதிட ரீதியாக சில பரிகாரங்களை செய்யலாம்.
திருமணமாகி கணவன் குழந்தை என்று வாழ்ந்து கொண்டிருக்கும் பலரும் திடீரென ஏதாவது ஒரு சூழ்நிலையில் பழைய காதலை சந்திக்க வேண்டியிருக்கிறது. இன்றைய செல்போன் யுகத்தில் சமூக வலைத்தளங்கள் மூலமோ, ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் என ஏதாவது ஒரு தொடர்பின் மூலம் பழைய காதலோ, புது காதலோ ஆணுக்கோ பெண்ணுக்கோ ஏற்படலாம். அது தவறு என்று உணர்ந்து விட்டாலே பாதி வெற்றி கிடைத்து விடும்.
தவறு என்று தெரிந்தும் திரும்ப திரும்ப அந்த தவறை செய்வதனால்தான் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்ப வாழ்க்கையில் பிரச்சினையும் சூறாவளியும் உருவாகிறது. கார்த்தி டயல் செய்த எண் பற்றிய பேச்சுதான் இப்போது பரபரப்பாக இருக்கிறது. இப்படி யாராவது பழைய காதலிக்கோ, பழைய காதலனுக்கோ போன் செய்து குடும்ப வாழ்க்கையை கும்மியடிக்க வைத்து விடாதீர்கள். யாருக்கு மனசு தடுமாறும், தடுமாறும் மன நிலையில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம் என்று பாருங்க.

மனதை மாற்றும் சந்திரன்
சந்திரன் மனோ காரகன், மனதை ஆள்பவன். சந்திரனும் சனியும் சேர்ந்தாலோ, பார்த்துக்கொண்டாலோ, சனியின் நட்சத்திரத்தில் சந்திரனோ, சந்திரனின் நட்சத்திரத்தில் சனி சாரம் பெற்றாலோ, சனி வீட்டில் சந்திரன், சந்திரன் வீட்டில் சனி, சனி, சந்திரன் நீசம் போன்ற அமைப்புகள் ஒருவரின் ஜாதகத்தில் இருந்தால் அவர்களின் மனதில் தடுமாற்றம் இருக்கும்.

முறைய தவறிய தொடர்புகள்
ஆண்கள் ஜாதகத்தில் லக்னத்தில் பாம்பு கிரகங்களான ராகு அல்லது கேது இருந்து பத்தாம் இடத்தில் புதன் இருந்தால் வயதில் மூத்த காதலி அமைவார். ஏழாம் வீட்டில் நீச்ச கிரகம் இருந்தால் சபல புத்தி உண்டாகும். ஏழாம் வீட்டில் சனிசுக்கிரன் இருந்தால், ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த பெண்ணின் தொடர்பு உண்டாகும்.

ரகசிய உறவுகள்
குரு போக காரகன், சுக்கிரன் காம காரகன். ஒருவரின் ஜாதகத்தில் குரு சுக்கிரன் இருவரும் இணைவது, குரு சுக்கிரன் பார்ப்பதில் நல்லதும் கெட்டதும் இருக்கிறது. இந்த இரண்டு கிரகங்களுக்கும் பாவ கிரக பார்வை, நீச்ச சேர்க்கை ஏற்பட்டால் ரகசிய உறவுகள் ஏற்படலாம். ஜாதகத்தில் 8ம் இடத்தில் குரு அல்லது சுக்கிரன் இருப்பதால் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் காதல் கொள்வதற்கான, கள்ளக்காதல் ஏற்படுவதற்கான சூழல் உள்ளது.

கூடாத உறவுகள்
ஜாதகத்தில் 4வது இடம் சுக ஸ்தானம். எல்லா விதமான சுகங்களுக்கும் இந்த இடம்தான் முக்கியம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெற்று இருந்தால் காதல் சிறப்பாக நடக்கும். பெண்கள் ஜாதகத்தில் நான்காம் இடம் கற்பு ஸ்தானம். ஒழுக்க நெறியை பற்றி சொல்லும் இடம். நான்காம் இடம், நான்காம் அதிபதி பலமாக இருந்தால் ஒழுக்கம் தவறாத காதல், நெறி தவறாத வாழ்வு அமையும். நான்காம் வீட்டில் பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய கிரகங்கள் இருந்தாலும், பார்த்தாலும் கூடா நட்புகள் தேடி வரும்.

நல்ல நடத்தை எப்படி வரும்
ஏழாம் இடம் இடம் காதலை, காமத்தை நிர்ணயிக்கும் இடம். இதை களத்திர ஸ்தானம் என்று சொல்வார்கள். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெறுவதும், நீச்சம் அடையாமல் இருப்பதும் முக்கியம். இந்த இடத்தை வைத்துதான் ஒருவரது நடத்தை, ஆசை, விருப்பம், காதல் ஈடுபாடு போன்றவற்றை அறிய முடியும். திருமணமான பெண்ணிடம் உருகி பேசுபவன் யாராக இருந்தாலும் அவனிடம் கொஞ்சம் எச்சரிக்கையாகத்தான் பழக வேண்டும்.

இந்த பரிகாரங்கள் அவசியம்
கள்ளக்காதல் உறவுகள், முறை தவறிய காதலில் இருந்து தப்பிக்க ஜோதிட ரீதியாக சில பரிகாரங்கள் இருக்கின்றன. அந்த பரிகாரத்தை படுக்கை அறையில்தான் செய்ய வேண்டும். பெண்களுக்கு முறை தவறிய உறவு ஏற்படுகிறது என்றால் அதிலிருந்து தப்பிக்க ஞாயிறு கிழமை இரவில் கணவன் உறங்கிய பின்னர் தலையணைக்கு அடியில் குங்குமத்தை ஒரு காகிதத்தில் மடித்து வைத்து அதை மறுநாள் காலையில் எடுத்து நெற்றியிலும் வகிட்டிலும் வைத்துக்கொள்ள வேண்டும்.

கள்ளக்காதலை பொசுக்கிவிடுங்கள்
கணவன் அல்லது மனைவி இருவரில் யாருக்கேனும் முறை தவறிய உறவு ஏற்பட்டால் அதை தடுக்க சாம்பிராணி புகை இருக்கிறது. படுக்கை அறையில் சாம்பிராணி புகை போடுவதன் மூலம் தீய எண்ணங்களை நீக்கலாம். சாம்பிராணி புகை கெட்ட சக்திகளை மட்டும் விரட்டாது கெட்ட எண்ணங்களையும் விரட்டி விடும் சக்தி படைத்தது. அதே போல யார் மீது நமக்கு முறை தவறிய உறவு ஏற்படுகிறதோ அவருடைய பெயரை ஒரு காகிதத்தில் எழுதி அதை தாமரை விதையால் அலங்கரித்து அதை நெருப்பில் வைத்து எரித்து விட வேண்டும். அந்த சாம்பலை ஓடும் நீரில் கரைத்து விட்டால் கள்ளக்காதல் உறவுகளோ, எண்ணங்களோ ஏற்பட வாய்ப்பு இல்லை.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications