Kanni Rasi Palan: கன்னி ராசிக்கு வேலையில் வரப்போகும் கண்டம்.. பேச்சில் மிக கவனம்
பிப்ரவரி மாத மேஷம் ராசி பலன்: ஜனவரி மாதம் முடிந்து பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டி தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், பிப்ரவரி மாதத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு ஏற்கனவே 10 இல் குரு பகவான் வந்துவிட்டார். நிறைய பேர் வேலையை இழக்கும் சூழல் இருந்தாலும், குரு வக்கிரமாக இருப்பது நன்மை பயக்கும். பிப்ரவரி மாதத்தில் பெரிய பாதிப்புகள் எதுவும் வராது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் சிறு வருத்தம் கூட ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. 5 ஆம் இடத்தில் சூரியன், செவ்வாய் உள்ளிட்ட கிரகங்கள் இருப்பதால் புத்திர பாக்கியம் தடைபட்டிருக்கும்.
குழந்தை பாக்கியம்
இந்த மாதம் குழந்தை இல்லாதவர்கள் குழந்தை பாக்கியத்திற்கான சிகிச்சைகளை மேற்கொள்வது நன்மை பயக்கும். 5 ஆம் இடம் என்பது சொத்து. அந்த இடத்தில் 12க்கு உடைய சூரியன் இருக்கிறார். மூன்று, 8க்கு உடைய செவ்வாய் உச்சம் பெறுகிறார். பிப்ரவரி 14 ஆம் தேதி வரை இதே அமைப்பு இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட பெரிய விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பது நன்மை பயக்கும். பிரச்சனைக்கு யாராவது வந்தால் கூட பிரச்சனை செய்யாமல் இருப்பது நல்லது.
வேலையில் கவனம்
5 ஆம் இடத்தில் இருக்கும் புதன் பகவான் 6 ஆம் இடத்துக்குச் செல்வதால் தொழிலில் பிரச்சனைகள் ஏற்படும். 6 ஆம் இடத்தில் புதன் வரும்போது தொழிலில் பிரச்சனைகள் வரும். பெண்களால் ஏதேனும் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்பு ஏற்படும். உத்தியோகத்தில் பிரச்சனைகள் வரும். பணம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. பணத்தை கொடுக்கும்போது எண்ணிப் பார்த்துக் கொடுப்பது நல்லது.
கடன் தீரும்
சூரிய பகவானும், செவ்வாய் பகவானும் 5 ஆம் இடத்தில் இருந்து 6 ஆம் இடத்துக்கு நகரும்போது விபரீத ராஜயோக ஏற்படும். இதுவரை இருந்து வந்த கடன்கள் எல்லாம் தீரும் யோகம் உண்டு. பிப்ரவரி மாதத்திற்குள் கடன்களை அடைக்கும் யோகம் உண்டாகும். எதிர்மறையான ஆட்களை பக்கத்தில் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. உங்களுடைய உழைப்பு அனைத்தும் பணமாகும் யோகம் உண்டு.
வேலை இழப்பு
சூரியனும் 5 இல் இருந்து 6க்கு வருவதால் விபரீத ராஜயோகம் ஏற்படும். அரசியல், பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் பெரும்புகழ் பெறும் யோகம் உண்டாகும். 2க்கு உரிய சுக்கிரன் 6 ஆம் வீட்டில் மறைவதும், ராகுவுடன் சேர்ந்து சம்பந்தப்படுவதும் மட்டுமே பிரச்சனை. அலுவலகம், வேலை செய்யும் இடம், பக்கத்து வீட்டினரிடம் அளவாகப் பேசிக் கொள்வது நன்மை பயக்கும். உங்கள் குடும்பத்தினரிடம் மட்டும் பேசிக் கொள்வது நல்லது. வேலையில் பிரச்சனை, வேலை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் வேலை விஷயத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நன்மை பயக்கும்.












Click it and Unblock the Notifications