பிப்ரவரி மாத ராசி பலன் 2023: அதிரடி மாற்றம்..இந்த 2 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் திடீர் திருப்புமுனை
சென்னை:
2023ஆம் ஆண்டின் இரண்டாவது மாதம் பிப்ரவரி மாதம். இந்த மாதத்தில் நவ கிரகங்களின் பயணமும் பார்வையும் சில ராசிக்காரர்களுக்கு நன்மையைத் தரும், சில ராசிக்காரர்களுக்கு திடீர் திருப்புமுனையை ஏற்படுத்தும். சனியின் பயணமும் பார்வையும் சில ராசிக்காரர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். பிப்ரவரி மாதத்தில் சூரிய பகவான் மகர ராசியில் பாதி நாட்களும் கும்ப ராசியில் 15 நாட்களும் பயணம் செய்வார். சுக்கிரன் கும்ப ராசியிலும் 15ஆம் தேதிக்கு மேல் மீன ராசியில் உச்சம் பெற்றும் பயணம் செய்வார். புதன் மகர ராசியிலும் மாத இறுதியில் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். செவ்வாய் மாதம் முழுவதும் ரிஷப ராசியில் பயணம் செய்வார். இந்த கிரகங்களின் பயணத்தால் சிம்மம், கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் கிரகங்களின் நிலையை பார்த்தால் பாக்ய ஸ்தானத்தில் ராகு, பத்தாம் வீட்டில் செவ்வாய், மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் கேது, ஐந்தாம் வீட்டில் புதன், ஆறாம் வீட்டில் சூரியன், ஏழாம் வீட்டில் சனி,சுக்கிரன் எட்டாம் வீட்டில் குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. 13ஆம் தேதி
பத்தாம் வீட்டில் செவ்வாய் பயணம் செய்வதால் வேலை தொழிலில் புதிய மாற்றங்கள் ஏற்படும். பத்தாம் அதிபதியின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. வேலையில் உற்சாகம் பிறக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். 15ஆம் தேதி எட்டாம் வீட்டிற்கு சென்று உச்சமடைகிறார். பதவியில் முன்னேற்றம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்தாலும் அதை எளிதில் சமாளிப்பீர்கள். ஏற்கனவே எட்டாம் வீட்டில் குரு பயணம் செய்கிறார்.
கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன ஊடல்கள் வந்து போகும். திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் தடைகள் வந்து போகும். குடும்ப வாழ்க்கையில் சில சோதனைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீட்டிலும் அலுவலகத்திலும் அதிக வேலைப்பளு வரும். ரொம்ப பிஸியாகவே இருப்பீர்கள். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணம் விசயத்தில் கவனமாக இருப்பது நல்லது விலை உயர்ந்த பொருட்களை கவனமாக வைத்துக்கொள்வது நல்லது.
மாணவர்களுக்கு அற்புதமான கால கட்டம் என்றாலும் படிப்பில் கவனம் தேவை. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்களின் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது. அதிக வேலை செய்வீர்கள் மன குழப்பங்கள் வந்து நீங்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். சனிக்கிழமைகளில் அனுமனையும், விநாயகரையும் வழிபட நன்மைகள் நடைபெறும்.
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் கிரகங்களின் நிலையை பார்த்தால் எட்டாம் ஸ்தானத்தில் ராகு, ஒன்பதாம் வீட்டில் செவ்வாய், இரண்டாம் வீட்டில் கேது, நான்காம் வீட்டில் புதன், ஐந்தாம் வீட்டில் சூரியன், ஆறாம் வீட்டில் சனி,சுக்கிரன் ஏழாம் வீட்டில் குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. வேலை தொழிலில் புதிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிசினஸ் செய்வதில் இருந்த தடைகள் நீங்கும். மன அழுத்தம் நீங்கும். அதிர்ஷ்டம் தேடி வரும். குருவின் நேரடி பார்வையால் திருமண சுப யோகம் தேடி வரப்போகிறது. சுக்கிரன் 15ஆம் தேதிக்கு மேல் ஏழாம் வீட்டிற்கு வந்து குரு உடன் இணைந்து பார்வையிடுகிறார். வாழ்க்கையில் திடீர் திருப்புமுனைகள் உண்டாகப்போகிறது.
உங்களின் பொருளாதார நிலை உயரப்போகிறது. கடன் பிரச்சினைகள் நீங்கும். நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். எதிரிகள் தொல்லை நீங்கப்போகிறது. சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து ஆறாம் வீட்டிற்கு வரப்போகிறார். சனியுடன் இணையும் சூரியனால் நீண்ட நாட்களாக முடியாத பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. புதிய வாய்ப்புகள் தேடி வரப்போகிறது. திடீர் திருப்புமுனையை பிப்ரவரி மாதத்தில் ஏற்படுத்தப்போகிறது.
திருமணத்திற்கு வரன் பார்க்க நேரம் கைகூடி வரப்போகிறது. கணவன் மனைவி இடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு நேசமும் நெருக்கமும் கூடும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். பெண்களுக்கு மன அழுத்தம் நீங்கும். ஆரோக்கியமாகவும் உற்சாகமாக இருப்பீர்கள். நகைகள், ஆடை ஆபரணங்கள் சேரும். மாணவர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் வரப்போகிறது. நண்பர்களுடன் இணைந்து உற்சாகமாக படிப்பீர்கள். பிப்ரவரி மாதத்தில் அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபட பிரச்சினைகள் பொடிப்பொடியாக உதிர்ந்து போகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications