Kadagam Rasi Palan: கடக ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்டம்.. திடீர் அதிர்ஷ்டமும் காத்திருக்கு
பிப்ரவரி மாத ராசி பலன்: 2026 ஆம் ஆண்டில் முதல் மாதமான ஜனவரி மாதம் நிறைவடைந்துள்ளது. நாளை பிப்ரவரி மாதம் பிறக்கவுள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். இந்த பிப்ரவரி மாதத்தில் குரு பகவான் மிதுன ராசியில் இருக்கப் போகிறார். சந்திரன் தன்னுடைய கடக ராசியில் ஆட்சி வீட்டில் அமர்கிறார். சொந்த வீட்டில் ஆரம்பித்து சொந்த வீட்டிலேயே இந்த மாதத்தை நிறைவு செய்வார்.

கேது பகவான் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கிறார். சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகியோர் மகர ராசியில் அமர்ந்திருக்கின்றனர். மகரத்தில் செவ்வாய் உச்சமடைந்துள்ளது. கும்ப ராசியில் புதன் பகவானும், செவ்வாயும் அமர்ந்திருக்கின்றனர். மீனத்தில் சனி பகவான் அமர்ந்திருக்கிறார். அந்த வகையில், இந்த பிப்ரவரி மாதத்தில் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
கடகம் ராசி பலன்
கடக ராசிக்காரர்கள் குடும்பம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களால் கணவன், மனைவிக்குள் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. மனத் தாங்கல்கள், கஷ்டங்கள் ஏற்படும் சூழல் உள்ளது. யோக பலன்கள் அதிக அளவில் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும்.
அனுகூலம்
பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் காணப்படும். பிள்ளைகளின் படிப்பு, தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். வயிறு, அஜீரணக் கோளாறு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. வயிறு பிரச்சனையால் தேவையில்லாத மனக் குழப்பங்கள், மன வருத்தங்கள் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.
திடீர் அதிர்ஷ்டம்
பயணங்களின்போது ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். திடீர் அதிர்ஷ்டம் யோக பலத்தைப் பெற்றுத் தரும். புதிய பொறுப்புகளுக்கு வரும் யோகம் உண்டு. எல்லா விஷயங்களும் இழுபறியாகவே இருக்கும். எடுத்த காரியங்களில் தடை, தாமதங்களைக் காண்பீர்கள்.
பொறுமை அவசியம்
மார்ச் 14 ஆம் தேதி வரை எல்லா விஷயங்களிலும் தடைகளைச் சந்திப்பீர்கள். நீங்கள் நினைத்தது நடக்காமல் போகக்கூடிய சூழல் ஏற்படும். வண்டி, வாகனங்களில் வித்தைகளைச் செய்யாமல் இருப்பது நல்லது. தொற்று நோய் பாதிப்புகளால் பாதிக்கப்படும் சூழல் உள்ளதால் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. எந்த காரியங்களாக இருந்தாலும் பொறுமையாக, நிதானமாக இருப்பது நல்லது.
வழிபாடு
உத்தியோகத்தில் இருந்து வந்த பாதிப்புகள் அனைத்தும் நீங்கும். தேவையில்லாத மன வருத்தங்கள் இருக்கும். அதனைக் கடந்து செல்வது நல்லது. பண விஷயங்களில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. கடக ராசியினருக்கு அஷ்டமத்தில் ராகு உள்ளதால் நரசிம்மர் கவசத்தைக் கேட்பது உங்களுக்கு நல்ல அனுகூலத்தை ஏற்படுத்தும்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications