Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kanni Rasi Palan: கன்னி ராசிக்கு டபுள் தமாக்கா.. வேலையில் வரப்போகும் குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

பிப்ரவரி மாத ராசி பலன்: 2026 ஆம் ஆண்டில் முதல் மாதமான ஜனவரி மாதம் நிறைவடைந்து பிப்ரவரி மாதம் பிறந்துள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். இந்த பிப்ரவரி மாதத்தில் குரு பகவான் மிதுன ராசியில் இருக்கப் போகிறார். சந்திரன் தன்னுடைய கடக ராசியில் ஆட்சி வீட்டில் அமர்கிறார். சொந்த வீட்டில் ஆரம்பித்து சொந்த வீட்டிலேயே இந்த மாதத்தை நிறைவு செய்வார்.

february-month-rasi-palan-what-kind-of-benefits-will-get-kanni-rasi-people-during-this-period

கேது பகவான் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கிறார். சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகியோர் மகர ராசியில் அமர்ந்திருக்கின்றனர். மகரத்தில் செவ்வாய் உச்சமடைந்துள்ளது. கும்ப ராசியில் புதன் பகவானும், செவ்வாயும் அமர்ந்திருக்கின்றனர். மீனத்தில் சனி பகவான் அமர்ந்திருக்கிறார். அந்த வகையில், இந்த பிப்ரவரி மாதத்தில் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசிக்காரர்கள் பிள்ளைகள் விஷயத்தில் அவர்கள் போக்கிலேயே போவது நல்லது. ஆராய்ச்சிகள் செய்து கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகம் ரீதியாக நல்ல மாற்றம் ஏற்படும். பிப்ரவரி 15 ஆம் தேதிக்குப் பிறகு பெரிய அனுகூலங்கள் காணப்படும். பிப்ரவரி முதல் மார்ச் 15 ஆம் தேதிக்குள்ளான காலகட்டத்தில் தொழில், உத்திோயகம், வியாபாரம், படிப்பு, அரசுத் துறை, அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றம் பெறுவீர்கள்.

முன்னேற்றம்

தொழில் ரீதியாக அற்புதமான முன்னேற்றம் பெறும் காலகட்டம். யோக பலத்தை அதிகளவில் பெறுவீர்கள். வாகனத்தில் செல்லும்போது மிகுந்த கவனத்துடன் பயணிப்பது நல்லது. ஆரோக்கியத்தில் ரத்தத்தில் பரவும் தொற்று நோய், அலர்ஜி, சளி தொந்தரவுகளில் சிறிது கவனமாக இருக்க வேண்டும். செல்வாக்குகள் கூடும். மேலதிகாரிகள் விஷயத்தில், வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும்.

கவனம்

பெரிய பொறுப்புகள், பயணங்கள், தொலைதூர பயணங்கள் அற்புதத்தை ஏற்படுத்தும். உடனிருப்பவர்களின் விஷயத்தில் மட்டும் அதீத கவனமாக இருப்பது நன்மை பயக்கும். யாரையும் நம்பி முக்கிய பொறுப்புகளைக் கொடுக்கக் கூடாது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். வண்டி வாகனங்களில் செல்லும்போது உரிய விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது ஏற்றத்தைத் தரும்.

வழிபாடு

தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் கிடைக்கும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் வெற்றி அடையும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலம் ஏற்படும். குருவாயூர் கிருஷ்ணரை வழிபாடு செய்வது, நாராயணியத்தில் 100 ஆவது பாடல்களைக் கேட்பது பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+