விருச்சிகம் ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு, சுக்கிரன் – பிப்ரவரி மாதத்தில் கிடைக்கும் பலன்கள்
பிப்ரவரி ராசி பலன்: 2025ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி இன்னும் சில நாட்களில் நிறைவடைய போகிறது. இதையடுத்து பிப்ரவரி மாதம் பிறக்க போகிறது. பலரும் இந்த மாதத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். இந்த மாதத்தில் விருச்சிக ராசிக்கான பலன்களை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
பிப்ரவரி மாதத்தில் புதன் மற்றும் சூரியன் கிரகங்களின் பெயர்ச்சிகள் நிகழவுள்ளன. தற்போது மகர ராசியில் உள்ள புதன் கிரகம் பிப்ரவரி 4 ஆம் தேதி கும்ப ராசிக்கும், பிப்ரவரி 26 ஆம் தேதி மீன ராசிக்கும் பெயர்ச்சி ஆகவுள்ளார். சூரிய பகவான் பிப்ரவரி 13 ஆம் தேதி கும்ப ராசியில் பயணத்தை தொடங்கவுள்ளார்.

விருச்சிக ராசிக்கு இந்த மாதம் நல்ல யோகங்களை தரும். குரு பகவானின் பார்வை நேரடியாக உங்கள் மீது வருகிறது. சுக்கிரனும் உங்கள் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சமாக இருக்கிறார். குரு, சுக்கிரன் பரிவர்த்தனை நடக்கிறது. சுக்கிரன் ஏழாம் இடத்தில் இருந்து பார்ப்பதால் சிறப்பான பலன் கிடைக்கும்.
சுப காரியங்களில் இருந்த தடைகள் நீங்கும். திருமணம் வாய்ப்புகள் கூடி வரும். காதல் உறவும் திருமணத்தில் முடியக் கூடிய அமைப்பு உள்ளது. தனம், வாக்கு ஸ்தானங்களுக்கு அதிபதியான குரு உங்களை பார்ப்பதால் பேச்சுக்கு மதிப்பு, மரியாதை இருக்கும். எதிர்பார்த்தபடி பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.
வெளிநாட்டில் வேலை வாய்ப்பு, சம்பள உயர்வு, பதவி உயர்வு நிச்சயம் கிடைக்கும். ஐந்தாம் இடத்தில் சுக்கிரன் இருப்பதால் உயர் பதவிகளில் அமர்வீர்கள். பெண்களுக்கு உயர் பதவி வாய்ப்பு அமோகமாக உள்ளது. ஐடி, ரசாயனம், ஃபார்மா, ஆட்டோமொபைல், அழகு கலை நிபுணர்கள் ஆகியோருக்கு பெரிய முன்னேற்றம் இருக்கும்.
புதன் பகவான் மூன்றாம் இடத்தில் இருப்பதால் தகவல் தொடர்பில் பெரிய லாபம் இருக்கும். பேச்சினால் உங்களுக்கு லாபம் கிடைக்கும். புதிய வேலை, பதவி உயர்வுக்கான இன்டர்வியூக்களில் சாதகமான முடிவுகள் வரும். வாழ்க்கையில் முன்னேற்றம் சம்பந்தமாக நீங்கள் இறங்கும் செயல்களில் வெற்றி கிடைக்கும்.
ஐந்தாம் இடத்தில் ராகு - சுக்கிரன் இருப்பதால் பொழுதுபோக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆர்வம் செலுத்துவீர்கள். அதேநேரத்தில் தவறான பொழுதுபோக்கில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. கலை, திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். கலைத்துறையினர் உயர் பதவிக்கு செல்வார்கள். மருத்துவர்களுக்கு பெயர், புகழ் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி, முன்னேற்றம் இருக்கும். பணப்புழக்கம், லாபம் அதிகரிக்கும். பெண்களுக்கு இந்த மாதம் இறங்கிய காரியங்களில் வெற்றி கிடைக்கும். அடுத்தடுத்து சுப காரியங்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கணவரின் உடல்நலத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
ராசிக்கு அதிபதியான செவ்வாய் எட்டாம் இடத்தில் வக்கிர நிலையில் உள்ளார். அதனால் உடல்நலத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். புதன் பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு பிறகு உங்களின் நான்காம் இடத்துக்கு செல்கிறார். அங்கு சனி - புதனின் சேர்க்கை உள்ளது. இது சிலருக்கு நரம்பு, நுரையீரல் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.
பயணங்களில் பாதுகாப்புடன் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம். மாணவர்களின் கல்வியிலும் மிகுந்த கவனத்துடன் படிக்க வேண்டும். ஆசிரியர்களின் உதவி உங்களை உயர்த்தும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications