பிப்ரவரி மாதம் பலன்: ரிஷபம் ராசிக்கு பணம் கொட்டும்.. ஆனாலும் அந்த ஒரு விஷயத்தில் கவனம்
பிப்ரவரி ராசி பலன்: 2025ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி விரைவில் விடை கொடுக்க போகிறது. பிப்ரவரி மாதம் பிறக்க போகிறது. பலரும் இந்த மாதத்தை ஆவலுடன் இருப்பார்கள். எனவே இந்த மாதத்தில் ரிஷப ராசிக்கான பலன்களை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
பிப்ரவரி மாதத்தில் புதன் மற்றும் சூரியன் கிரகங்களின் பெயர்ச்சிகள் நிகழவுள்ளன. தற்போது மகர ராசியில் உள்ள புதன் கிரகம் பிப்ரவரி 4 ஆம் தேதி கும்ப ராசிக்கும், பிப்ரவரி 26 ஆம் தேதி மீனம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகவுள்ளார். சூரிய பகவான் பிப்ரவரி 13 ஆம் தேதி கும்ப ராசியில் பயணத்தை தொடங்கவுள்ளார்.

குரு பகவான் ரிஷப ராசியிலும், செவ்வாய் மிதுனத்தில் வக்ர நிலையிலும், கேது கன்னி ராசியிலும், கும்பத்தில் சனி பகவானும், சுக்கிரன் மீன ராசியில் உச்ச நிலையில் உள்ளார். அதேபோல ராகுவும் மீனத்திலும் உள்ளனர். இந்த கிரக நிலையில் தான் ராசி பலன்கள் இருக்கப் போகின்றன.
ரிஷப ராசிக்கு உங்கள் ராசிநாதன் சுக்கிரன் இந்த மாதம் முழுவதுமே உச்சத்தில் இருக்கிறார். உங்கள் வாழ்க்கையின் சூப்பரான காலகட்டமாக இதை வைத்துக் கொள்ளலாம். அவ்வளவு அருமையாக இருக்கும். பொருளாதாரத்தில் மிகப்பெரிய ஏற்றம் காண்பீர்கள். எடுத்த காரியங்களில் எல்லாம் நன்மை கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகளில் தைரியமாக இறங்கலாம்.
ஏற்றுமதி சார்ந்த தொழில் சிறப்பாக இருக்கும். தொழிலில் லாபம் நன்றாக இருக்கும். தொழிலில் புதிய பார்ட்னர்கள் கிடைப்பார்கள். பாக்கிய ஸ்தானம், கர்ம ஸ்தானம், லாப ஸ்தானம் ஆகிய மூன்று முக்கிய அமைப்புகளை புதன் பகவான் அலங்கரிக்கப் போகிறார். சூரிய பகவான் பத்தாம் இடத்தில் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் உத்யோகஸ்தர்களுக்கும் பிரமாதமாக இருக்கும்.
இதுநாள் வரை பணியில் இருந்த தடைகள் நீங்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்வோருக்கு வெற்றி கிடைக்கும். தனியார் நிறுவனத்திலும் உயர் பொறுப்புகள் உங்களை தேடி வரும். புதிய வேலை வாய்ப்புகள் எதிர்பார்த்தபடி அமையும். ஐந்தாம் இடத்தில் உள்ள புதன் லாபத்தை நோக்கி நகர்கிறார். இது சிறப்பான பலன்களை கொடுக்கும்.
தொழில், வேலையில் புதிய உச்சத்தை தொடுவீர்கள். ஐந்தாம் இடத்தில் கேது பகவானும் இருப்பதால் வியாபாரிகளுக்கு சில வம்பு வழக்குகள் உருவாகும் நிலை உள்ளது. இருப்பினும் புதன் கிரகத்தின் அணுகூலத்தால் அது கேதுவின் ஆதிக்கத்தை குறைத்து வளமான லாபத்தை ஏற்படுத்தும். சுப காரியங்கள் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
முக்கியமாக பிப்ரவரி மாதத்தின் நிறைவு மாதம் நன்றாக உள்ளது. புதன் லாப ஸ்தானத்தில் அமர்ந்து உங்களின் பஞ்ச ஸ்தானத்தை பார்க்க உள்ளார். அதனால் பெரிய வளர்ச்சியை அடைவீர்கள். புதன் மூன்றாம் இடத்தை பார்ப்பதால் வியாபாரத்தில் உங்களின் தகவல் தொடர்பு நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
சிலருக்கு வரி சார்ந்த விஷயங்களில் பிரச்னை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே வருமானவரி, ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளை சரியாக கட்டி அதில் கவனமாக இருப்பது அவசியம். பிப்ரவரி 13 ஆம் தேதிக்கு பிறகு குரு பகவானும், சூரியன் பகவானும் பத்தாம் இடத்தில் அமரப் போகிறார்கள். அதனால் அரசுத்துறை சம்பந்தப்பட்ட விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. அதில் அதிக கவனம் தேவை. செவ்வாய் வக்கிரமாக இருப்பதால் வாக்கு ஸ்தானத்தில் கவனம் தேவை.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications