குரு அதிசாரப் பெயர்ச்சி: மேஷ ராசிக்கு வீடு, கார், ப்ரோமோஷன்.. ஒட்டுமொத்த அதிர்ஷ்டமும் உங்களுக்குதான்
அதிசாரப் பெயர்ச்சி: அடுத்து வருடம் வர வேண்டிய குருப்பெயர்ச்சிக்கு ஒரு முன்னோட்டமாக இப்போது மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு குரு பகவான் அக்டோபர் 18 ஆம் தேதி பெயர்ச்சியாகவுள்ளார். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
நவக்கிரகங்களில் செல்வாக்கு மிக்க கிரகமாக குரு பகவான் பார்க்கப்படுகிறார். ஒரு மனிதனுக்கு கல்வி, செல்வம், குழந்தை பாக்கியம் போன்றவற்றை கொடுக்கக் கூடியவராக குரு பகவான் இருக்கிறார். ஞானக்காகரன் என்று அழைக்கப்படுகிறார். தற்போது பகைவீடான மிதுன ராசியில் சஞ்சாரம் செய்து வருகிறார் குரு பகவான். இங்கு வேகமாக நகரக்கூடிய அதிசார பெயர்ச்சியை மேற்கொண்டு வருகிறார்.

வேகமாக நகரும் குரு அக்டோபர் 18ஆம் தேதி முதல் மிதுனத்தில் இருந்து கடக ராசியில் சஞ்சரிப்பார். பின்னர் டிசம்பர் 3ஆம் தேதி மீண்டும் மிதுன ராசிக்கு திரும்புகிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சியில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்
மேஷம்
மேஷம் ராசிக்கு 4 ஆம் இடத்துக்கு குரு பகவான் வருகிறார். கடகத்தில் உச்சம் பெறப் போகிறார். குரு பகவான் 4 ஆம் வீட்டுக்கு வருவதால் கட்டாயமாக பதவி உயர்வு கிடைக்கும். கார், வீடு, மாடு, மனை, வண்டி, உயர்கல்வி, உயர்பதவி அனைத்தும் கிடைக்கும். கார் வாங்க வேண்டும், சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு அந்த லட்சியம் நிறைவேறும். வீடு கட்டும் யோகம் உண்டு. அலுவலகத்தில் உரிய பதவி, அங்கீகாரம் கிடைக்கும்.
மதிப்பு, மரியாதை
உழைப்பிற்கான மதிப்பு, மரியாதை, அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் மனைவி, நிறுவனத்தில் சந்தேகம் போன்றவை உங்கள் மேல் ஏற்படும். செய்யாத பழிக்கு தீராத பழி உண்டாவதற்கான வாய்ப்புள்ளது. நிறைய வார்த்தைகளால் காயப்பட்டிருப்பீர்கள். தற்போது 4 ஆம் இடத்துக்கு குரு பகவான் குரு வருவதால் நற்பெயர் உண்டாகும். குரு உச்சம் பெற்றவர் என்பதால் தாயின் உடல்நிலையை சீராக்குவார்.
மன அழுத்தம் நீங்கும்
மேஷ ராசிக்காரர்களுக்கு நிறைய மனம் சார்ந்த பிரச்சனைகள் வந்திருக்கும். மன நலம் சார்ந்த பிரச்சனைகள் தீரும். மன அழுத்தம் நீங்கும். 4 ஆம் இடத்தில் குரு பகவான் 5 ஆம் பார்வையாக 8 ஆம் இடத்தைப் பார்க்கிறார். 8 ஆம் இடம் என்பது உங்களுடைய சொத்து, ஆயுள் பாவம், வறுமை போன்றவற்றை குரு பார்ப்பதால் உங்களுடைய வறுமை அனைத்தும் நீங்கும். சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும்.
இடம், வீடு வாங்கும் யோகம்
8 ஆம் இடம் என்பது உங்களுடைய நீண்ட கால திட்டங்கள். இடம் வாங்குவது, பண்ணை வீடு வாங்கும் எண்ணம் போன்றவை ஏற்படும். மாங்கல்ய பலம் ஏற்படும். 8 ஆம் இடத்தை குரு பகவான் பார்ப்பதால் ஆயுள் பலம் கூடும். அடுத்ததாக குரு 9, 10 ஆம் இடத்தைப் பார்ப்பதால் தொழில் அற்புதமாக நடக்கும். நல்ல வருமானம் அதிகரிக்கும். புதிய விடியல்கள் பிறக்கும்.
லாபம்
தொழில், வியாபாரத்தில் விற்பனை நன்றாக நடக்கும். லாபம் அதிகரிக்கும். 10 ஆம் இடத்தை குரு பகவான் பார்க்கும் தொழிலில் பண வரவு அதிகரிக்கும். 12 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் நிறைய விரயம் ஏற்படும். சுபச் செலவுகள் ஏற்படும். சந்தோஷமான செலவுகளாக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கு செலவு செய்வீர்கள். குடும்பத்தில் திருமணம், சுப நிகழ்ச்சிகள் நடக்கும் யோகம் உண்டாகும்.












Click it and Unblock the Notifications