Kumbam Rasi Palan: கும்ப ராசிக்கு தங்கத்தை குவிக்கும் யோகம்.. குரு பார்வையால் வாழ்க்கையே மாறப்போகுது
குரு அதிசாரப் பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு வரும் அக்டோபர் 18 ஆம் குரு அதிசாரப் பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசார் பெயர்ச்சியான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
அக்டோபர் 18 ஆம் தேதி மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு குரு அதிசாரப் பெயர்ச்சி ஆகிப் போகிறார். அதே நவம்பர் மாதத்தில் கடகத்தில் இருந்து மீண்டும் மிதுனத்துக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி ஆகிறார். இதுவே குரு அதிசாரப் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. குரு என்பவர் தேவர்களுக்கெல்லாம் தேவர். பிள்ளைப் பேறு, திருமணம், செல்வம், செழிப்பு என அனைத்து நல்ல விஷயங்களுக்கும் காரணகர்த்தாகவாக இருக்கிறார்.

சனியிடமிருந்து தப்பிக்க ஒரே வழி குரு. சனி பகவான் என்றாலே பொதுமக்கள் பலரும் அச்சப்படுவார்கள். ஆனால் உண்மையில் குருவைக் கண்டுதான் அச்சப்பட வேண்டும். குரு என்பவர் ஞானக்காரகர். தர்மத்துடன் நடந்து கொள்பவர்களுக்கு மட்டுமே குரு பகவான் உதவி செய்வார். குரு என்பவர் வளர்ச்சியைக் கொடுப்பார். ஆனால் அதனை நிதானமாகவே கொடுப்பார் அதுவே இந்த அதிசாரப் பெயர்ச்சியில் நிகழும்.
அந்த வகையில், இந்த குருப்பெயர்ச்சியில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு பெரிய முயற்சி தோல்வி அடைந்து கொண்டிருக்கும். அந்த முயற்சி இனி வெற்றி பெறும் காலகட்டமாக இருக்கும். குரு பகவான் 5 ஆம் இடத்தில் இருக்கிறார். இது ஒரு நல்ல ஸ்தானம் ஆகும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்துக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு கட்டாயமாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். 5 ஆம் இடத்தில் குரு பகவான் அமர்ந்திருப்பது யோகம் தான்.
குரு பார்வை
இப்போது குரு பகவான் 6 ஆம் இடத்தில் உச்சமடைகிறார். குரு பகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் ஸ்தானத்திற்கு பலம் அதிகம். மனதிற்குள் மென்மையானவராக நீங்கள் இருந்தாலும், உங்களுடைய கரடுமுரடான முகமே மற்றவர்களுக்குத் தெரியும். தன வாக்கு குடும்ப ஸ்தானத்தை சேர்ந்தவர் குரு பகவான். தற்போது அதிசார குரு தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தை பார்க்கப் போகிறார்.
குடும்பம்
குடும்ப வாழ்க்கையில் ஒரு குறை இருந்தாலும் அந்த குறை இப்போது நிவர்த்தியாகும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் ஏற்படும். காதல் உறவுகளில் இருந்த பிரச்சனைகள் எல்லாம் நிவர்த்தியாகும். வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு வங்கிக் கடனுதவி கிடைக்கும். நகை வாங்குவதுற்கு, சொத்து வாங்குவதற்கான கடன் கிடைக்கும்.
தங்கம் வாங்கும் யோகம்
குரு பகவான் உங்கள் அயன சயன சுகத்தைப் பார்ப்பதால் தாம்பத்ய வாழ்க்கையில் இருந்த குறைபாடுகள் நீங்கி, புரிதல் உருவாகும். புதிய முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். தங்கம் வாங்கும் யோகம், தங்கத்தில் முதலீடு செய்யும் யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் அதிக அளவில் கவனம் செலுத்துவது நல்லது. வயிறு சார்ந்த பிரச்சனை, கொழுப்பு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும்.
கடனுதவி
நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தொழில் செய்வதற்கான கடனுதவிகள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கைக்கு நல்ல காலகட்டம், நேரமாக இருக்கும். திருமண வாழ்க்கை அமைவதற்கு, முதலீடுகளுக்கு நல்ல காலமாக இருக்கும். தென்குடி திட்டை சென்று குரு பகவானை வழிபடுவது எல்லா நன்மைகளையும் உங்களுக்கு உருவாக்கித் தரும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications