Magaram Rasi Palan: "காசு பணம் துட்டு மணி மணி".. மகர ராசிக்கு மகத்தான யோகம்
குரு அதிசாரப் பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு வரும் அக்டோபர் 18 ஆம் குரு அதிசாரப் பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசார் பெயர்ச்சியான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
அக்டோபர் 18 ஆம் தேதி மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு குரு அதிசாரப் பெயர்ச்சி ஆகிப் போகிறார். அதே நவம்பர் மாதத்தில் கடகத்தில் இருந்து மீண்டும் மிதுனத்துக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி ஆகிறார். இதுவே குரு அதிசாரப் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. குரு என்பவர் தேவர்களுக்கெல்லாம் தேவர். பிள்ளைப் பேறு, திருமணம், செல்வம், செழிப்பு என அனைத்து நல்ல விஷயங்களுக்கும் காரணகர்த்தாகவாக இருக்கிறார்.

சனியிடமிருந்து தப்பிக்க ஒரே வழி குரு. சனி பகவான் என்றாலே பொதுமக்கள் பலரும் அச்சப்படுவார்கள். ஆனால் உண்மையில் குருவைக் கண்டுதான் அச்சப்பட வேண்டும். குரு என்பவர் ஞானக்காரகர். தர்மத்துடன் நடந்து கொள்பவர்களுக்கு மட்டுமே குரு பகவான் உதவி செய்வார். குரு என்பவர் வளர்ச்சியைக் கொடுப்பார். ஆனால் அதனை நிதானமாகவே கொடுப்பார் அதுவே இந்த அதிசாரப் பெயர்ச்சியில் நிகழும்.
அந்த வகையில், இந்த குருப்பெயர்ச்சியில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த அதிசாரப் பெயர்ச்சி மிகப்பெரிய மேன்மையைக் கொடுக்கப் போகிறது. 6 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கும் குரு பகவான் 7 ஆவது ஸ்தானத்துக்கு உச்சமாக வருகிறார். கேட்ட வரத்தைக் கொடுக்க குரு பகவான் வருவதால் அற்புதமான நேரமாக இருக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு கட்டாயமாக திருமணம் நடக்கும். திருமணம் கைகூடும் காலகட்டம்.
யோகம்
நல்ல வாழ்க்கைத் துணை அமைவார்கள். 7 இல் குரு என்பது சாதாரண விஷயமல்ல. யோகமான நேரமாக இருக்கும். உங்களுக்கு உற்ற துணையாக இருக்கும் வகையில் நல்ல துணை அமையும். நல்ல கணவர் அமையும் அற்புதமான நேரமாக இருக்கும். நல்ல நண்பர்கள் அமைவதற்கான யோகம் உண்டு. சில பேருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். வெளிநாட்டில் வேலை, கல்வி போன்றவை உண்டாகும். அதற்கான நல்ல நேரம் கூடி வரும்.
வெளிநாடு வேலை
நீங்கள் நினைத்ததை சாதிப்பதற்கு அற்புதமான நேரமாக இருக்கும். முதலில் நல்ல படிப்பு அமையும். வெளிநாட்டு வேலை அமையும். சனி பகவான் 3 ஆம் இடமான உபஜெய ஸ்தானத்தில் அமருகிறார். அபிலாஷைகள், ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். மகரத்தை சேர்ந்தவர்களுக்கு பிரதமை திதியில் பிறந்திருந்தால் பிரச்சனை ஆகும். மகரமும், துலாமும் திதி சூனியமடைவதால் பிரச்சனைகள் ஏற்படும்.
தொழில்
இப்போது குரு பார்ப்பதால் பல நன்மைகள் கிடைக்கும். தொழிலில் நல்ல பார்ட்னர் கிடைப்பார்கள். நல்ல பணமுடையவர்களின் தொடர்பாக கிடைக்கும். தொழிலை தெளிவாக சிறப்பாக செய்வதற்கான வாய்ப்பு அமையும். தொழிலில் நல்ல பிசினஸ் பார்ட்னர்கள் கிடைப்பார்கள். பயணங்கள் வெற்றிகரமாக அமையும். பணம் சம்பாதிக்கக்கூடிய ஆற்றல் அதிகரிக்கும்.
பதவி உயர்வு
அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். கனவுகள் நிறைவேறும் காலகட்டமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் தான்தோன்றி பெருமாளை வழிபாடு செய்வது அற்புதமான ஏற்றத்தைக் கொடுக்கும். மிகப்பெரிய வெற்றிகள் கிடைக்கும். திருமண யோகம் உண்டாகும். தெய்வத்தின் கடாட்சம் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications