Meenam Rasi Palan: மீன ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. அடித்து ஆடும் நேரம்
குரு அதிசாரப் பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு வரும் அக்டோபர் 18 ஆம் குரு அதிசாரப் பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசார் பெயர்ச்சியான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், மீன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
அக்டோபர் 18 ஆம் தேதி மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு குரு அதிசாரப் பெயர்ச்சி ஆகிப் போகிறார். அதே நவம்பர் மாதத்தில் கடகத்தில் இருந்து மீண்டும் மிதுனத்துக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி ஆகிறார். இதுவே குரு அதிசாரப் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. குரு என்பவர் தேவர்களுக்கெல்லாம் தேவர். பிள்ளைப் பேறு, திருமணம், செல்வம், செழிப்பு என அனைத்து நல்ல விஷயங்களுக்கும் காரணகர்த்தாகவாக இருக்கிறார்.

சனியிடமிருந்து தப்பிக்க ஒரே வழி குரு. சனி பகவான் என்றாலே பொதுமக்கள் பலரும் அச்சப்படுவார்கள். ஆனால் உண்மையில் குருவைக் கண்டுதான் அச்சப்பட வேண்டும். குரு என்பவர் ஞானக்காரகர். தர்மத்துடன் நடந்து கொள்பவர்களுக்கு மட்டுமே குரு பகவான் உதவி செய்வார். குரு என்பவர் வளர்ச்சியைக் கொடுப்பார். ஆனால் அதனை நிதானமாகவே கொடுப்பார் அதுவே இந்த அதிசாரப் பெயர்ச்சியில் நிகழும்.
அந்த வகையில், இந்த குருப்பெயர்ச்சியில் மீன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். 4 ஆம் இடத்தில் குரு பகவான் அமர்ந்திருக்கிறார். இந்த காலகட்டத்தில் சிலருக்கு வேலை ரீதியான பிரச்சனை இருந்திருக்கும். ராசியில் இருக்கும் சனி பகவானும் ஒரு காரணம். ஏற்கனவே நல்ல வேலையில் இருந்திருப்பார்கள். திடீரென மற்றொரு நிறுவனத்தில் கூடுதல் சம்பளத்துக்கு சென்றால், அங்கு போனவுடன் வேறொரு பிரச்சனையை சந்திப்பார்கள். சனி உங்களுக்கு வேலை விஷயத்தில் குழப்பத்தைக் கொடுப்பார்.
குழந்தை பாக்கியம்
குரு பகவான் தற்போது 5 ஆம் இடத்துக்கு அதிசாரமாக வருகிறார். 5 ஆம் இடம் என்பது குருவுக்கு உச்ச வீடு. பல மீன ராசிக்காரர்களுக்கு நல்ல புத்திரர்கள் பிறப்பார்கள். சிலருக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். குரு பகவான் நல்ல நிலைமையில் இருந்தால் நீங்கள் எதிர்பார்க்கும் குழந்தை வளர்ப்பு, குழந்தை நலன், குழந்தையின் எதிர்காலம், உறவு போன்ற அனைத்தும் அமையும்.
பிரச்சனைகள் நீங்கும்
குரு உங்களது ராசிக்கு அதிபதி, 10 ஆம் இடத்துக்கு அதிபதி. நல்ல தொழில் செய்ய குரு பகவானின் அருள் வேண்டும். குரு பூர்வ புண்ணிய ஸ்தானத்துக்கு அதிசாரமாக வருகிறார். பூர்வ புண்ணியத்தின் பலனை அனுபவிக்கப் போகிறீர்கள். யாருக்கெல்லாம் வேலையில் பிரச்சனை இருக்கிறதோ, அந்த பிரச்சனைகளை எல்லாம் குரு பகவான் தீர்த்து வைக்கப் போகிறார்.
குழந்தை பாக்கியம்
நீண்ட நாட்களாக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். அலுவலகத்தில் சரியான பதவி கிடைக்கவில்லை என்று கவலைப்படுபவர்களுக்கு நல்ல பதவி கிடைக்கும். நல்ல புகழ்மிக்க பதவி கிடைக்கும். மூத்த சகோதரர்களுக்கும், உங்களுக்கும் இருக்கும் இருக்கும் பிரச்சனைகள் சரியாகும். மனதில் நினைப்பதெல்லாம் கண்டிப்பாக நடக்கும்.
அனுகூலம்
பாக்கிய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு பொன், பொருள் பெருகும். வியாபாரம் தழைக்கும். உயர்கல்வி படிப்பதற்கான யோகம் உண்டாகும். வேலையில் உள்ள சிக்கல்கள் தீரும். பிரச்சனைகள் நிவர்த்தியாகும். எதிரிகள் தொல்லை விலகும். ரேவதி நட்சத்திரக்காரர்களாக இருந்தால் கணவன், மனைவி பிரிவுகள் சரியாகும். படிப்பில் இருக்கும் தடைகள் சரியாகும்.
வழிபாடு
வீடு கட்டுவதில் உள்ள பிரச்சனை, சொத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நிவர்த்தியாகும். ராகவேந்திரர் கோயிலுக்குச் சென்று வியாழக்கிழமை தோறும் வழிபாடு செய்வது அற்புதமான முன்னேற்றத்தையும், யோகத்தையும் கொடுக்கும். எல்லா நன்மைகளும் பெருகி வரும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications