Viruchigam Rasi Palan: அட இது லிஸ்ட்லயே இல்லையே.. விருச்சிக ராசிக்கு காத்திருக்கும் தீபாவளி பரிசு
குரு அதிசாரப் பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு வரும் அக்டோபர் 18 ஆம் குரு அதிசாரப் பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசார் பெயர்ச்சியான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
அக்டோபர் 18 ஆம் தேதி மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு குரு அதிசாரப் பெயர்ச்சி ஆகிப் போகிறார். அதே நவம்பர் மாதத்தில் கடகத்தில் இருந்து மீண்டும் மிதுனத்துக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி ஆகிறார். இதுவே குரு அதிசாரப் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. குரு என்பவர் தேவர்களுக்கெல்லாம் தேவர். பிள்ளைப் பேறு, திருமணம், செல்வம், செழிப்பு என அனைத்து நல்ல விஷயங்களுக்கும் காரணகர்த்தாகவாக இருக்கிறார்.

சனியிடமிருந்து தப்பிக்க ஒரே வழி குரு. சனி பகவான் என்றாலே பொதுமக்கள் பலரும் அச்சப்படுவார்கள். ஆனால் உண்மையில் குருவைக் கண்டுதான் அச்சப்பட வேண்டும். குரு என்பவர் ஞானக்காரகர். தர்மத்துடன் நடந்து கொள்பவர்களுக்கு மட்டுமே குரு பகவான் உதவி செய்வார். குரு என்பவர் வளர்ச்சியைக் கொடுப்பார். ஆனால் அதனை நிதானமாகவே கொடுப்பார் அதுவே இந்த அதிசாரப் பெயர்ச்சியில் நிகழும்.
அந்த வகையில், இந்த குருப்பெயர்ச்சியில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விருச்சிகம்
குரு பகவான் எட்டாம் இடத்தில் இருப்பதால் நிறைய தடைகளை சந்தித்து வருவீர்கள். பொருளாதாரத்தில் சிக்கல் இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கும், உங்களுக்கும் எக்கச்சக்க கருத்து வேறுபாடுகள் இருக்கும். உத்யோகத்திலும் இறுக்கமான நிலை இருக்கும். திருமண தடையாலும் மனம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும்.
பொதுவாக விருச்சிக ராசிக்கு குரு பகவான் நல்லது மட்டுமே செய்வார். தற்போது அவர் எதுவுமே செய்ய முடியாத ஒரு நிலையில் உள்ளார்.
நிவாரணம்
குரு அதிசார பெயர்ச்சியில் இது எல்லாம் அப்படியே தலைகீழாக மாறி நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றன. தற்போது குரு பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு வருவதால், கடந்த கால பிரச்சனைகள், சிக்கல்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பாக்கிய ஸ்தானத்தில் குரு பகவான் பலமடைவதால், தடைபட்ட காரியங்கள் அடுத்தடுத்து நிறைவேறும்.
குடும்பம்
உங்கள் குடும்ப அமைப்புக்கு அதிபதியே குரு பகவான் தான். சுப காரிய தடை விலகும். திருணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். கணவன் - மனைவி இடையே அந்யோநியம் அதிகரிக்கும். காதல் உறவு திருமணமாக மாறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பொருளாதாரம்
சுப கிரகம் பாக்கிய ஸ்தானத்திற்கு வருவது பொற்காலம். இந்த காலத்தை சரியாக பயன்படுத்திக் கொள்வது உங்கள் சாமர்த்தியம். ஐந்தாம் இடத்தில் சனி பகவான் இருந்து தடைளை கொடுப்பார். தற்போது குரு பகவான் சனியை நேரடியாக பார்ப்பதால் அந்த சிக்கல் விலகும். பொருளாதாரத்தில் மிகப்பெரிய ஏற்றம் காணப்படும். பண புழக்கம் நன்றாக இருக்கும். உங்கள் பெயர், புகழ் உயரும். சமூகத்தில் உங்களின் பேச்சுக்கு செல்வாக்கு கூடும்.
முன்னேற்றம்
உத்யோகம், தொழில், கல்வி எல்லாவற்றிலும் முன்னேற்றம் இருக்கும். உத்யோகத்தில் உங்கள் தகுதி, திறமைக்கேற்ற அங்கீகாரம் பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு மனதிற்கு பிடித்த படியாக புதிய உத்யோகம் கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தம் ஏற்படும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். வெளிநாட்டு முயற்சியில் வெற்றி உண்டாகும். அப்பாவின் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
பரிகாரம்
பூர்விக சொத்துகளில் இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். பயணங்களால் ஆதாயம் உண்டு. உயர்கல்வியில் இருந்த தடைகள் விலகும். சமூகத்தில் விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். வியாழக்கிழமை நாளில் கடற்கரை அருகே உள்ள கோயில்களுக்கு சென்று வழிபடுவது அற்புதமான பலன்களை கொடுக்கும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications