கூரையை பிச்சுகிட்டு பணத்தை கொட்டும் குரு.. பணக்கார யோகம் யாருக்கு?.. உங்க ராசி இருக்கா
குருப்பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டு குருப்பெயர்ச்சியான மே மாதத்தில் நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியால் 3 ராசியினர் அற்புதமான பலன்களைப் பெறப் போகின்றனர். எந்தெந்த ராசியினர் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டில் திருக்கணிதத்தின் படி சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய மூன்று பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன. வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சனிப்பெயர்ச்சி அடுத்த ஆண்டும், குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி இந்த ஆண்டும் நடைபெறுகிறது. குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். குருப்பெயர்ச்சி வாக்கியத்தின்படி மே 11 ஆம் தேதியும், திருக்கணிதத்தின்படி மே 14 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

குரு பகவான் சுபத்துவம் பொருந்திய கிரகம். குரு பகவான் ஒரு ராசியில் ஒரு வருடம் இருக்கக் கூடியவர். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வர கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாகும். மே 14 ஆம் தேதி திருக்கணிதத்தின் படி இரவு 10.30 மணிக்கு குருப்பெயர்ச்சி நடக்கிறது. ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார் குரு பகவான். மிதுனம் என்பது குருவின் வீடு. மிதுனத்துக்கு குருவானாவர் பலவிதத்தில் உபத்திரவத்தை கொடுக்கக் கூடியவர். குருவின் ஸ்தான பலத்தை விட பார்வை பலம் மிக வலிமையாக இருக்கும்.
குருவின் பிரசித்திபெற்ற கோயிலான ஆலங்குடி குரு ஸ்தலம் மற்றும் மற்ற சிவாலயங்களில் உள்ள குரு சந்நிதிகளில் வாக்கியப்படி மே 11 ஆம் தேதி விசேஷ பூடைகள் நடைபெறும். இந்த குருப்பெயர்ச்சியில் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிக்காரர்கள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
குரு பகவான் ரிஷப ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களைக் கொடுக்கப் போகிறார். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் அன்பு பெருகும். குடும்பத்தில் அடுத்தடுத்து சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகரிகாளின் ஆதரவு உண்டாகும். வியாபாரம், தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
நிதி சார்ந்த விஷயங்களில் அபரிமிதமான முன்னேற்றம் , நல்ல வளர்ச்சியைப் பெறுவீர்கள். எடுத்த காரியங்களில் பெரிய சாதனைகளை செய்ய வாய்ப்புகள் உள்ளன. புதிய முயற்சிகள் முன்னேற்றத்தை தரும். இந்த குருப்பெயர்ச்சியால் அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கான சிறந்த காலகட்டமாக இருக்கும். அந்த முயற்சிகளில் நல்ல வெற்றியையும் காண்பீர்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறந்த பலன்கள் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
நீண்ட நாட்களாக வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். தைரியமாக எடுத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். நீண்டநாட்களாக திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். லாபங்கள் கொடுக்கக்கூடிய வாய்ப்புகள் தானாக உங்களைத் தேடி வரும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு மாற்றங்கள் நிறைந்த காலகட்டமாக இருக்கும். இடமாற்றம் உண்டாகும். வெளியூர் செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும். அதிர்ஷ்டங்கள் உங்களைத் தேடி வரும். வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. அதன் மூலம் அற்புதமான பலன்களைப் பெறுவீர்கள். தெய்வ காரியங்களில் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். இதுவரை பணம் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண யோகம் கைகூடி வரும். தேக ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.












Click it and Unblock the Notifications