குருப்பெயர்ச்சி: துலாம் ராசியின் ஆட்டம் ஆரம்பம்.. தொட்டதெல்லாம் தங்கமாக மாறும் காலம்
குருப்பெயர்ச்சி: குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். 2025 மே மாதம் 14 ஆம் தேதி குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். இந்த குருப்பெயர்ச்சியில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி குரு பகவான் என்பவர் தனக்காரகன். குரு பகவான் பணத்துக்கு முக்கியமான கிரகம். தனம், பணம் ஒருவருக்கு நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஜாதகத்தில் குரு நன்றாக இருக்க வேண்டும். சுக்கிரன் சுகபோகத்துக்கு காரணமானவர். சுக்கிரன் கொடுக்கும் பணம் கையில் இருக்கும். ஆனால், குரு பகவான் கொடுக்கக் கூடிய பணம் என்பது பெரிய அளவில் இருக்கும்.

ஓராண்டுக்கு ஒரு முறை குருப்பெயர்ச்சி நடைபெறும். அதன்படி கடந்த 2024 ஆம் ஆண்டு குரு பகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருந்தார். இந்நிலையில் வருகிற 14.5.2025 இரவு 11 மணியளவில் குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
பொதுவாக குரு பகவான் நன்மைகளின் அதிபதி என்று அழைக்கப்படுவார். தான் இருக்கும் இடங்களில் அதிகளவு நற்பலன்களை கொடுப்பார். செல்வம், மகிழ்ச்சி, குடும்பம், ஆரோக்கியம் ஆகிய எல்லாவற்றிலும் குரு பகவானின் தாக்கம் இருக்கும். அதனால் தான் குரு பார்த்தால் கோடி நன்மை என்று சொல்வார்கள். அந்த வகையில், இந்த குருப்பெயர்ச்சியில் துலாம் ராசிக்காரர்கள் பெறக்கூடிய பலன்கள், கிடைக்க கூடிய அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு குருப்பெயர்ச்சியில் அருமையான காலகட்டமாக இருக்கும். துலாம் ராசியை குரு பார்ப்பதால் சுப பலன்கள் கிடைக்கப் போகின்றன. 3, 5 ஆம் இடத்தை குரு பார்க்கிறார், சனி பகவான் 6 இல் அமர்கிறார். 25 ஆண்டுகளுக்குப் பிறகு துலாம் ராசிக்கு அருமையான காலகட்டமாக இருக்கும். நல்ல எண்ணங்கள் வரும், ஆன்மீகம் தொடர்பான விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். மேல் படிப்பு படிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.
தொழில், வீடு, வழக்கில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் தீரும். பொற்காலமாக இருக்கும். கேதுவுக்காக பரிகாரம் செய்வது நல்லது. விநாயகர் வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.
9 ஆம் இடத்தில் குரு பகவான் இருப்பதால் திருமணத் தடைகள் நீங்கும். விவாகரத்தில் இருந்த இழுபறிகள் நீங்கும். அலுவலகத்தில் இருந்த அவப்பெயர்கள், செய்யாத தவறுக்கான தண்டனைகள் போன்றவற்றில் இருந்து விடுபடுவீர்கள். குடும்பத்திலேயே சகோதர, சகோதரிகள் பரம்பரை சொத்துக்கான வழக்குத் தொடுத்திருப்பார்கள். அந்த சொத்துகள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. பெண்களுக்கு ஏற்றமான காலமாக இருக்கும்.
வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. துலாம் ராசியினர் அதனை கருத்தில் கொண்டு ராசி பலன்களை கேட்பது நல்லது. கடன் மேல் கடன் இருந்தவர்களுக்கு தீரக்கூடிய வழி பிறக்கும். லாபத்தில் வரக்கூடிய கேது, 5 ஆம் இடத்தில் ராகு, 6 இல் சனி பகவான் இருக்கிறார். பாக்கியத்தில் குரு பகவான் இருந்தாலும் அலுவலக ரீதியாக சில சத்ருக்களின் தொந்தரவு, பிரச்சனை இருக்கும். ராமேஸ்வரத்தில் உள்ள பதஞ்சலி முனிவர் கோயிலுக்குச் சென்று வழிபடுவது அமோகமான பலனைத் தரும். நெய் தானம் கொடுப்பது நல்லது.
துலாம் ராசிக்கு ஜாக்பாட் யோகம் கிடைக்கும். நினைத்த காரியங்களை நடத்தி முடிப்பீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி பெறும் வாய்ப்பை குரு பகவான் கொடுப்பார். புதிதாக எடுக்கும் படிப்புகளில் வெற்றி பெறுவீர்கள். முதல் நான்கு மாதங்கள் தடங்கள் இருக்கும். அதன் பிறகு திடீர் பண வரவு உண்டாகும். அரசியலில் இருப்பவர்கள் எதுவுமே வேண்டாம் என்று செல்வீர்கள். அங்கிருக்கும் நபர் மீண்டும் உங்களுக்கு அரசியலுக்கு அழைத்து வருவார்கள்.
மலைக் கோயில், கிராமக் கோயில், வடஇந்திய கோயில்களுக்குச் செல்லும் யோகம் உண்டாகும். ஆன்சைட் வேலை எதிர்பார்த்தவர்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் வாய்ப்புண்டு. குடும்ப விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. அறிமுகமில்லாத நபர்கள், சோஷியல் மீடியா பிரச்சனையில் சிக்காமல் இருப்பது நல்லது. அதிர்ஷ்டமான காலமாக இருக்கும். இதனைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. அஷ்ட லட்சுமி வழிபாடு வெற்றியைத் தரும்.
குரு உங்களுக்கு மதிப்பை, மரியாதையை, நல்ல பெயரை கொடுப்பார். சமுதாயத்தில் அந்தஸ்து உண்டாகும். உள்ளத்தை தூய்மைப்படுத்தி, நல்ல எண்ணங்களைக் கொடுப்பார். பெருமாள் கோயிலுக்குச் சென்று தாயார் சன்னதியில் வழிபாடு செய்வது நல்லது. துலாபாரத்தை கோயில்களில் பார்த்து வருவது நல்ல பலன்களைத் தரும்.
-
குரு 12-இல்.. சிம்ம ராசிக்கு வெளிநாட்டு யோகம், புதிய வாய்ப்புகள்.. வாழ்க்கையில் பெரிய திருப்பம்! -
Guru Peyarchi: மேஷ ராசிக்கு அதிர்ஷ்டத்தை தரும் குருப்பெயர்ச்சி.. வாழ்க்கையை மாற்றும் 3 விஷயங்கள் -
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. வேலையில் முன்னேற்றம் -
Guru Peyarchi: தனுசு ராசியினரே தயாராகுங்கள்! குரு தரப்போகும் அபார யோகங்கள் -
Guru Peyarchi: கிங்காக மாறப்போகும் துலாம் ராசி.. 10 இல் வரும் குரு அள்ளித் தரும் அதிர்ஷ்ட யோகங்கள் -
விருச்சிகத்துக்கு பொற்காலம் ஆரம்பம்.. குருவின் அருளால் வரப்போகும் ராஜயோகம் -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி











Click it and Unblock the Notifications