குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் யோகத்தை அள்ளும் தனுசு ராசி.. பண மழையில் நீச்சலடிக்கும் யோகம்
Guru Peyarchi 2026: குருப்பெயர்ச்சி இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ளது. குரு பகவானின் இந்த இடமாற்றம் 12 ராசிகளுக்கும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் நிலையில், தனுசு ராசியினருக்கு இது எந்த அளவில் அதிர்ஷ்டத்தையும், சவால்களையும் தரப் போகிறது என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றங்களானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சனி, குரு, ராகு கேது ஆகிய கிரகங்களே ஒருவரின் வாழ்க்கையில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு வருடத்திற்கு ஒருமுறை குருப்பெயர்ச்சியும், இரண்டரை வருடத்திற்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி, ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறை ராகு கேது பெயர்ச்சியும் நடைபெறுகிறது.

குரு பகவானுக்கு இயற்கை சுபர் என்று பெயர். ஒருவரின் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்க குரு பகவானே காரணமாக இருப்பார். குருப்பெயர்ச்சி என்பது ஜோதிடத்தில் மிக முக்கியமான கிரகப் பெயர்ச்சிகளில் ஒன்றாகும். குரு (வியாழன்) ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்வதால், 12 ராசிகளுக்கும் பல்வேறு நல்ல மற்றும் சவாலான பலன்களை ஏற்படுத்தும். கல்வி, வேலை, திருமணம், பணவரவு போன்ற முக்கிய வாழ்க்கை அம்சங்களில் குருவின் இடமாற்றம் பெரிய தாக்கத்தை உண்டாக்கும்.
அந்த வகையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் குருப்பெயர்ச்சியானது தனுசு ராசியினருக்கு என்ன பலன்களை கொடுக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தனுசு (Dhanusu Rasi Palan)
தனுசு ராசியினருக்கு ராசிநாதன் குரு பகவான் இதுவரை 7 ஆம் இடத்தில் பாதக ஸ்தானத்தில் அமர்ந்திருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறைய ஆரோக்கிய குறைபாடுகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள். அர்த்தாஷ்டம சனியால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும். 8 ஆம் இடத்திற்கு குரு பகவான் வந்து உச்சமடைவதால் மிகப்பெரிய யோகம் ஏற்படும்.
திருமண வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தன வருமானத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வெளிநாட்டில் இருந்து வந்த பிரச்சனை, வருமானத்தில் இருந்து வந்த பிரச்சனை, என அனைத்துப் பிரச்சனைகளும் தீரும் காலகட்டமாக இருக்கும். அஷ்டம ஸ்தானத்தில் குரு பகவான் உச்சமடைவதால் பெரிய கெடுதல்கள் எதுவும் ஏற்படாது. அஷ்டம ஸ்தானம் குருவுக்கு நல்ல வீடு.
கடக ராசியில் குரு பகவான் அமருவதால் உங்களுக்கு மிகப்பெரிய உதவிகள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். அர்த்தாஷ்டம சனி உங்களுக்கு நடைபெறுகிறது. உங்களுக்கு நடைபெறவிருந்த அனைத்து கெடுதல்களும் விலகும். ஆரோக்கியத்தில் நிறைய பாதிப்புகள் வந்து சேரும். தேக ஆரோக்கியத்தில் நல்ல மேன்மை ஏற்படும்.
சுக ஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால் நல்ல சுகம் பெறுவீர்கள். பாதியில் கட்டி நிற்கும் வீடுகளை கட்டி முடிக்கும் யோகம் உண்டு. ஜூன் மாதம் 2 ஆம் தேதிக்குப் பிறகு சொந்த வீடு கட்டும் யோகம் உண்டாகும். தாயின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். கல்வியில் இருந்து வந்த தடை, பாதிப்புகள் சரியாகும். குடியிருக்கும் வீட்டில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.
பாகப்பிரிவினை, பத்திரப் பதிவு, உயில் சம்பந்தப்பட்ட பிரச்சனை என அனைத்து விதமான பிரச்சனைகளும் நீங்கும். நல்ல குடும்ப வாழ்க்கை அமையும். குடும்பத்தில் சுபச் செய்திகள் கூடி வரும். வெளிநாடு சென்று வருவதற்கான வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையில் தூக்கம், நிம்மதி இல்லை என்று கூறியவர்களுக்கு இனி சரியான தூக்கம் அமையும். முதலீடுகள் பெருகும் யோகம் உண்டாகும்.
பேச்சினால் ஏற்பட்ட கெட்ட பெயர்கள் நிவர்த்தியாகும். நிறைய நன்மைகள் கிடைக்கும். நிதி சார்ந்த விஷயங்களில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் திருப்தியான சூழல் ஏற்படும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சிந்தித்து செயல்படக் கூடிய ஆற்றல் ஏற்படும். வியாபாரத்தில் நல்ல பார்ட்னர்கள் கிடைப்பார்கள். குடும்பத்தில் நிம்மதி பெருகும். முருகப் பெருமான் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications