குருப்பெயர்ச்சி: ஜாவா சுந்தரேஷனாக மாறும் துலாம் ராசி.. குருவின் பார்வையால் அடிக்கும் லாட்டரி
Guru Peyarchi 2026: குருப்பெயர்ச்சி இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ளது. குரு பகவானின் இந்த இடமாற்றம் 12 ராசிகளுக்கும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் நிலையில், துலாம் ராசியினருக்கு இது எந்த அளவில் அதிர்ஷ்டத்தையும், சவால்களையும் தரப் போகிறது என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றங்களானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சனி, குரு, ராகு கேது ஆகிய கிரகங்களே ஒருவரின் வாழ்க்கையில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு வருடத்திற்கு ஒருமுறை குருப்பெயர்ச்சியும், இரண்டரை வருடத்திற்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி, ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறை ராகு கேது பெயர்ச்சியும் நடைபெறுகிறது.

குரு பகவானுக்கு இயற்கை சுபர் என்று பெயர். ஒருவரின் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்க குரு பகவானே காரணமாக இருப்பார். குருப்பெயர்ச்சி என்பது ஜோதிடத்தில் மிக முக்கியமான கிரகப் பெயர்ச்சிகளில் ஒன்றாகும். குரு (வியாழன்) ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்வதால், 12 ராசிகளுக்கும் பல்வேறு நல்ல மற்றும் சவாலான பலன்களை ஏற்படுத்தும். கல்வி, வேலை, திருமணம், பணவரவு போன்ற முக்கிய வாழ்க்கை அம்சங்களில் குருவின் இடமாற்றம் பெரிய தாக்கத்தை உண்டாக்கும்.
அந்த வகையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் குருப்பெயர்ச்சியானது துலாம் ராசியினருக்கு என்ன பலன்களை கொடுக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
துலாம் (Thulam Rasi Palan)
துலாம் ராசியினருக்கு இதுவரை 9 ஆம் இடத்தில் இருந்த குரு பகவான் 10 ஆம் இடத்திற்கு வருகிறார். குரு இருக்கும் இடத்தை விட பார்வை பலம் மிக அதிகமாக இருக்கும். 3, 6 ஆம் இடத்துக்கு அதிபதியான குரு பகவான் 10 ஆம் இடத்திற்கு வருவது நல்ல யோகத்தைக் கொடுக்கும். குருவின் பார்வை 4 ஆம் இடத்தில் படுவதால் துலாம் ராசி மாணவர்களுக்கு மிகப்பெரிய யோகம் ஏற்படும்.
முன்னேற்றம்
போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெறக்கூடிய யோகம் உண்டாகும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் நினைத்தது நடக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். நீண்டநாட்களாக சொந்த வீடு கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களுக்கு வீடு கட்டும் யோகம் உண்டாகும்.
சொந்த வீடு
புதிதாக வீடு வாங்குவது, சொத்துக்கள் வாங்குவது போன்ற யோகம் உண்டாகும். நீண்ட நாட்களாக திருமணமாகதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். நல்ல வரன்கள் அமையும். குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் நல்ல குடும்ப வாழ்க்கை அமையும். இல்லற சுகம் கிடைக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். காசு பணம் வரக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
பண வரவு
தன சேர்க்கை உண்டாகும். குடும்ப வாழ்ககை நன்றாக இருக்கும். கண் சார்ந்த பிரச்சனைகள், பாதிப்புகள் நிவர்த்தியாகும். எதிரிகளின் தொந்தரவுகள் விலகும். இதுவரை இருந்து வந்த நோய்கள் பரிபூரணமாக நீங்கும். மருத்துவ மாணவர்களுக்கு முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். போட்டிகளில் வெற்றி பெறக்கூடிய யோகம் உண்டு.
வழிபாடு
திருமண யோகம், வருமானம் கூடும், சொத்துகள் வாங்கும் யோகம், கார் வாங்கும் யோகம் உண்டு. எதிரிகள், நோய்கள் விலகுவது என அற்புதமான காலகட்டமாக இந்த குருப்பெயர்ச்சி இருக்கும். இந்த காலகட்டத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நன்மை பயக்கும். தென்குடி திட்டை குரு பகவான் வழிபாடு செய்வது மிகப்பெரிய வெற்றியைக்கொடுக்கும்
-
2026 குருப்பெயர்ச்சி: கும்ப ராசிக்கு கிடைக்கும் 5 பெரிய யோகங்கள்!.. லிஸ்ட் பெருசா இருக்கே -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications