Guru Peyarchi 2026: 12 ஆண்டுகளுக்கு பிறகு விருச்சிக ராசிக்கு வரும் அதிர்ஷ்டம்.. தொட்டதெல்லாம் ஹிட்டு
Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டின் முக்கியமான கிரக மாற்றங்களில் ஒன்றாக கருதப்படும் குருப்பெயர்ச்சி, பல ராசிகளின் வாழ்க்கையிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது. மீன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவானால் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
குருப்பெயர்ச்சியான வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மே 25 ஆம் தேதியன்றும், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. குரு பகவான் மீனத்தில் இருந்து கடகத்திற்கு மாறுகிறார். கடகம் என்பது சந்திரன் ஆட்சி பெற்ற வீடு. குரு அங்கு உச்சம் பெறுகிறார். உச்சம் பெறக்கூடிய குருவின் ஸ்தான பலத்தை விட பார்வை பலம் என்பது மிகவும் முக்கியம்.

குரு விஷேச பார்வையாக 5 ஆம் இடமான விருச்சிகத்தைப் பார்க்கிறார். சமசப்த பார்வையாக மகரத்தைப் பார்க்கிறார். 9 ஆம் பார்வையாக மீனத்தைப் பார்க்கிறார். விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளுக்கு குரு பார்வை படுவதால் மிகுந்த பலம் பெறும். ஜனன காலத்தில் இந்த 3 ராசிகளுக்கும் நன்றாக இருந்தால் பலம் அதிகமாகும். கடகத்தில் இருக்கும் குரு விருச்சிக ராசியினருக்கு என்னவிதமான பலன்களை கொடுக்கப் போகிறார், தெய்வ வழிபாடு முறைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
விருச்சிக ராசி பலன்
விருச்சிக ராசியினருக்கு 2 க்கும், 5க்கும் உடையவர் குரு பகவான். விருச்சிக ராசிக்கு 9 இல் குரு பகவான் வருகிறார். 5 ஆம் பார்வையாக விருச்சிகத்தைப் பார்க்கிறார். எழுந்தவுடன் தினந்தோறும் குளித்து விடுவது நல்லது. 12 வருடத்திற்குப் பிறகு குரு பகவான் வந்துள்ளதால் நிறைய நன்மைகள் கிடைக்கும். ஏற்றம் மிகுந்த காலகட்டமாக இருக்கும்.
பிரச்சனை நீங்கும்
பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால் பிள்ளைகள், தொழிலில் ஏற்றம் ஏற்படும். குடும்பத்தில் புதிய உறவுகள் வருவார்கள். தடைகள் அனைத்தும் நீங்கும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். தைரியம் ஏற்படும். மன வருத்தத்தில் அறைக்குள்ளேயே இருப்பீர்கள். அந்த நிலைமைகள் அனைத்தும் நீங்கும்.
முன்னேற்றம்
சுறுசுறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் அற்புதமாக இருப்பீர்கள். கோபப்பட்டுக் கொண்டே இருந்த நிலைமைகள் எல்லாம் மாறும். அற்புதமும், ஆனந்தமும், தெய்வ தரிசனமும் ஏற்படும். ஜோதிடம், ஆன்மீகம், பெரிய அளவுக்கு ஏற்றமும், கெளரவமும் ஏற்படும். எல்லா வகையிலும் முன்னேற்றம் உண்டாகும். நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு நன்மைகள் ஏற்படும் காலகட்டம்.
சிக்கல் தீரும்
இழுபறியாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும். அப்பா, அம்மாவின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. உங்களை விட பெரியவர்களை எல்லாம் நன்றாகப் பார்த்துக் கொள்வது நல்லது. பயணங்களில் புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம் மிகுந்த கவனம் தேவை. அக்கம்பக்கத்தில் சண்டை வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
நல்ல காலகட்டம்
தொலைதூரத்தில் இருப்பவர்கள் பெற்றோரிடம் பேசுவது நன்மை பயக்கும். அவர்களிடம் இணக்கமாக, பாசமாகப் பேசுவது நல்லது. நல்ல நேரம் என்பதால் இந்த காலகட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கக்கூடிய காலகட்டம். இந்த நேரத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.












Click it and Unblock the Notifications